கார்த்திக்கு சகோதரரான கன்னட நடிகர்
கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, ருக்குமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் கன்னட நடிகர் ஹாரிஸ் ராஜ் என்பவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹாரிஸ் ராஜ் இப்படத்தில் கார்த்திக்கு சகோதரராக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஹாரிஸ் ராஜ் ஒருசில கன்னட படங்களிலும் தமிழ், தெலுங்கில் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக ஹாரிஸ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் படத்தின் கதாபாத்திரங்களின் தோற்றம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியில் கசிந்துவிடக்கூடாது என்பதில் படக்குழுவினர் உறுதியுடன் இருக்கின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விரைவில் தொடங்க இருக்கிறது
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும்: அமிதாப்பச்சன்
வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து 73 வயது நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
அதில், “கற்பழிப்பு சம்பவங்களில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். இதனை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து: நடிகை மீது மீண்டும் புகார்
அந்த புகார் மனுவில், ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ள ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த புகார் மனு விசாரணைக்காக தியாகராயநகர் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் உமாதேவி தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணனை சந்தித்து புதிதாக ஒரு புகார் மனுவை கொடுத்து உள்ளார்.
அந்த புகார் மனுவில் நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உடனடியாக நடிகை ராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்
விஜய், ஜெயம் ரவியை வைத்து படம் இயக்க ஆசை: விக்ரம்
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தில் இரு வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருக்கிறார் விக்ரம். படங்களில் வித்தியாச வேடமேற்று நடித்திருக்கும் இவருக்குள்ளும் ஒரு இயக்குனர் ஒளிந்துகொண்டுதான் இருக்கிறார்.
சென்னை பெருவெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு பாடலாக உருவாக்கி, அந்த பாடலில் பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கியிருந்தார் விக்ரம். அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தற்போது அவருக்கும் படத்தை இயக்கும் ஆசை துளிர்விட்டுள்ளது.
அவர் அப்படி படம் இயக்குவதென்றால், விஜய் அல்லது ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். விக்ரம் தனது மகன் துருவ்வை வைத்து படம் இயக்க ஆசை இருந்தாலும், அவன் இன்னும் அதற்கு தயாராகததால் இப்போதைக்கு இந்த முடிவு என்று கூறியுள்ளார்.
விக்ரமின் இந்த ஆசையை விஜய்யும், ஜெயம் ரவியும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் விஷால்-தமன்னா தரிசனம்
விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்திசண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியனாக தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். மேலும், சூரியும் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதைத் தொடர்நது தற்போது மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இப்படத்தில் நடிக்கும் விஷால், தமன்னா, சௌந்தர்ராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து வந்தனர். அப்போது, அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது