சினிமா துளிகள் விஜய் 60 படத்தின் பெயர் எங்க வீட்டு பிள்ளை இல்லையாம்...
13 Aug,2016
சினிமா துளிகள்

விஜய் 60 படத்தின் பெயர் எங்க வீட்டு பிள்ளை இல்லையாம்...
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே 'எங்க வீட்டு பிள்ளை' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தலைப்புக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விஜய் 60' படத்துக்கு 'எங்கள் வீட்டு பிள்ளை' என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர்.
இப்படத்துக்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பாலியல் தொல்லை இல்லாத நாள் பெண்களுக்கு முழு சுதந்திரம் என கூறும் டாப்சி
“நள்ளிரவில் ஒரு பெண் எப்போது தனியாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் இன்றுள்ள நிலைமை அப்படியா இருக்கிறது? நிர்பயாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்பவத்தை எப்படி மறக்க முடியும். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். அதே ஆசை எனக்கும் இருக்கிறது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
நான் அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ என்ற இந்தி படத்தில் பாலியல் பலாத்காரத்தில் சிக்கிய இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அதில் நடித்தபோது பாலியல் ரீதியாக சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிந்தது. படப்பிடிப்பில் அழுது விட்டேன். படக்குழுவினர் என்னிடம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்கள்.
பெண்கள் மதிக்கப்பட வேண்டும் அவர்களை போற்ற வேண்டும். பிங்க் படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களை குறைப்பதற்கான தூண்டுகோலாக இந்த படம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்

மகளின் வைர மோதிரம் சிக்கியது: நடிகர் விக்ரம் மகிழ்ச்சி
அப்போது அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை மனுரஞ்சித் அணிவித்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி மாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் காதர் நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு கடைக்கு வந்த அக்ஷிதா, அங்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது அவர் கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரம் மாயமாகி உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சென்னையைச் சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் லட்சுமணன் என்பவர் காணாமல் போனதாக கூறப்பட்ட அக்ஷிதாவின் வைரமோதிரத்தை அவரது குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து ஒப்படைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்ரம் குடும்பத்தினர் லட்சுமணனின் நேர்மையை பாராட்டினர். அந்த வைர மோதிரத்தின் விலை ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது.