ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு ஒரு சின்ன வியாபாரம் இருக்கிறது. அதுபோல் ராஜேஷ் எம். இயக்கும் படங்களுக்கும்.
எப்படி இவ்வளவு தீர்மானமாக சொல்கிறோம் என்றால், ஜீ.வி.பிரகாஷை வைத்து ராஜேஷ் இயக்கிவரும் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை பெரும் தொகைக்கு சேலம் சிவா வாங்கியுள்ளார். இத்தனைக்கும் படம் இன்னும் முடியவில்லை.
படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டனர். டாக்கி போர்ஷனில் இன்னும் சில எடுக்கப்பட உள்ளன. படப்பிடிப்பு முடியாத நிலையிலேயே படம் அதிக விலைக்கு விற்பனையானது பட யூனிட்டை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது
கோச்சடையான் சௌந்தர்யாவின் ரொமான்டிக் காமெடி
மோஷன் கேப்சர் போன்ற ஹைடெக் சமாச்சாரங்கள் இல்லாமல் சாதாரண படமாக இது உருவாகிறது என்பது இன்டஸ்ட்ரிக்கே ஆறுதல்.
சௌந்தர்யா அஸ்வினின் இரண்டாவது படம் ரொமான்டிக் காமெடியாக தயாராகிறது. படத்தின் கதை, ஸ்கிரிப்ட் தயார். விரைவில் நடிகர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
சௌந்தர்யாவின் இரண்டாவது படத்தில் தனுஷ் இடம்பெறுவார் என முன்பு செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பேசிய சௌந்தர்யா, அப்படி எந்த திட்டமும் இல்லை, தனுஷ் கண்டிப்பாக இந்தப் படத்தில் நடிக்கலை என்றார்.
விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
ஜீ.வி.பிரகாஷ் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சரத்குமார்
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க சண்முகம் முத்துசுவாமி ஒரு படத்தை இயக்குகிறார். இதில் வித்தியாசமான இரு வேடங்களில் நடிக்கிறார் சரத்குமார். நாயகியாக மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா நடிக்கிறார். சரத்குமார் இந்த படத்திற்காக வாள் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ், பிளேடு சங்கர், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
வழக்கம் போல் நாயகனாக நடிப்பதோடு படத்துக்கு இசையும் அமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.
விநாயகர் சதுர்த்தியில் மோதும் விக்ரம் தனுஷ் படங்கள்
விடுமுறை தினங்களில் படத்தை வெளியிட்டால் இரண்டு மடங்கு வசூல் பார்க்க முடியும். அதனால் தயாரிப்பாளர்கள் விடுமுறை தினங்கள் மீது கண்கொத்தி பாம்பாக இருக்கிறார்கள்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தை செப்டம்பர் முதல்வாரத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தையும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனால் இரு படங்களும் நேருக்குநேர் மோதவிருப்பது உறுதியாகியுள்ளது
வரலட்சுமியுடன் திருமணம்: விஷால் அறிவிப்புக்கு சரத்குமார்???
விஷால். வரலட்சுமி இருவரும் காதலிக்கின்றனர், ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர் என்று பல கிசு கிசு செய்திகள் ஊடகங்களில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருந்தன.
அதற்கு முடிவு கட்டும் வகையில் விஷால் இன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். அதில் அவர் கூறியதாவது:-
வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் தேதிக்கு இப்போதே சொல்லி விட்டேன், என்று கூறினார்.
இதுகுறித்து சரத்குமார் தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை
மலைவாழ் மக்களை அரசாங்க பணம் சென்றடையவில்லை, விஜய் சென்றடைந்திருக்கிறார்
கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளது தெரிந்ததே. கேரளாவில் பழங்குடியினர் வசிக்கும் அட்டாப்பாடி பகுதிக்கு உமேஷ் கேசவன் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதி எதுவும் இல்லை. சாலை, தெருவிளக்கு, கழிப்பறை என்று அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. குழந்தைகளுக்கு பள்ளியில் படிக்க விருப்பமில்லை. படித்து எதுவும் ஆகப்போவதில்லை என்ற ஆழ்ந்த கசப்பு அவர்களுக்கு இருக்கிறது.
அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் இருக்கும் அம்மக்கள் விவசாய வேலை இல்லாத நாள்களில் டிவியில் விஜய் படத்தைப் பார்த்து பொழுதுபோக்குவதாக உமேஷ் கேசவன் கூறியுள்ளார். அரசாங்கத்தின் கோடிக்கணக்கான பணம் அம்மக்களை சென்றடையவில்லை, அவர்களை சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் விஜய் என்று அவர் கூறியுள்ளார்.
அட்டப்பாடி பழங்குடி மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த விஜய்யை அழைத்துவர விஜய் அலுவலகத்தை தொடர்பு கொண்டிருக்கிறது பாலக்காடு கலெக்டர் அலுவலகம்.