கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது: தமன்னா
“சினிமா துறையில் கடும் போட்டி இருக்கிறது. கதாநாயகிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு படத்தில் சிறப்பாக நடித்து இருந்தால் இன்னொரு படத்தில் வேறொரு நடிகை சிறப்பாக நடிக்கிறார். எனவே நான்தான் சிறந்த நடிகை என்று யாராலும் சொல்ல முடியாது.
சினிமாவில் எந்த நடிகையும் 100 சதவீதம் சிறப்பான நடிப்பை கொடுத்தேன் என்று திருப்திபட்டுக்கொள்ள முடியாது. ரசிகர்களின் பாராட்டுகளே அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது.
நான் தமிழ், இந்தியில் தயாராகும் தேவி படத்தில் கஷ்டப்பட்டு நடனம் ஆடி இருந்தேன். அந்த நடனம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிகிறது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. நான்பட்ட கஷ்டங்களை இதில் மறந்து போனேன்.
ஆனால் இது எனது திறமைக்கு கிடைத்த பாராட்டு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டேன். என்னை மிஞ்சி இன்னொரு நடிகையாலும் ஆட முடியும். எனது உடல் எடை 50-ல் இருந்து 55 கிலோவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.
இதற்காக உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். எடையை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது இல்லை. ஓட்டலில் ஒரு நாள் வெஜிடபிள் சாலட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். எதிரில் ஒரு பெண் எனக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிட்டார்.
அதைப் பார்த்ததும் நாக்கில் நீர் ஊறியது. அந்த சாக்லெட் எனது பிளேட்டில் இருக்க கூடாதா? என்று ஆசைப்பட்டேன். ஓட்ஸ், முளை கட்டிய தானியங்களை சாப்பிடும்போது பூரி மற்றும் எண்ணெயில் செய்த உணவு வகைகளை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவேன்.
அந்த நேரத்தில் ரசிகர்கள் எனது மனக்கண்ணில் வருவார்கள். அவர்கள் என்னை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறார்கள் என்று நினைத்து பார்ப்பேன். அவர்களுக்காக ருசியான உணவுகளை தியாகம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொள்வேன்.”
இவ்வாறு நடிகை தமன்னா க
மாமனாரின் ஜோடியை வளைத்துப்போட்ட தனுஷ்?
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான் ராதிகா ஆப்தேவை கதாநாயகியாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கிறது. வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை இயக்கப்போவதாக தெரிகிறது.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு, கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
முத்தக் காட்சியில் நடிப்பது தவறு அல்ல: இஷா தல்வார்
பத்ரி டைரக்ஷனில், சிவா கதாநாயகனாக நடித்த ‘தில்லுமுல்லு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷா தல்வார். இவர், மும்பையை சேர்ந்தவர். ‘தட்டத்தின் மறயத்து” என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதே படம், ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் இஷா தல்வாரே கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
2 வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடித்தது பற்றி இஷா தல்வார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இஷா தல்வார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: நிஜ வாழ்க்கையில் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா?
பதில்:- எனக்கு இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை.
கேள்வி:- மும்பை கதாநாயகிகள் முத்தக் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறார்கள். நீங்கள் முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?
பதில்:- முத்தம், மனித வாழ்க்கையில் ஒரு பகுதிதான். எனவே முத்தக் காட்சியில் நடிப்பது தப்பு அல்ல என்று கருதுகிறேன். கதைக்கு தேவைப்பட்டால், முத்தக் காட்சியில் நான் நடிப்பேன்.
கேள்வி:- காதல், சோகம் இரண்டில் எந்த காட்சியில் நடிப்பது சுலபம்?
பதில்:- நடிப்பது, என் தொழில். அதில், எல்லாவிதமான காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் இரண்டும் நடிப்புதான். எது சுலபம், எது சிரமம் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.
கேள்வி:- ‘தில்லுமுல்லு’ படத்துக்குப்பின் தமிழ் பட உலகில் உங்களுக்கு ஒரு இடைவெளி விழுந்து விட்டதே?
பதில்:- மலையாளம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்ததால்தான் இந்த இடைவெளி. இனிமேல், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன்.”
இவ்வாறு இஷா தல்வார் கூறினார்.
பேட்டியின்போது படத்தின் கதாநாயகன் வால்டர் பிலிப்ஸ், டைரக்டர் மித்ரன் ஜவகர், தயாரிப்பாளர் எஸ்.வி.டி.ஜெயச்சந்திரன், கலை இயக்குனர் விஜி, மற்றும் படகுழுவினர் அருகில் இருந்தார்கள்
நயன்தாரா, தமன்னா, சமந்தா படவிழாக்களை புறக்கணிக்கும் கதாநாயகிகள் மீது அதிருப்தி; நடவடிக்கை எடுக்கப்படுமா?
படவிழாக்களை புறக்கணிக்கும் நயன்தாரா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட கதாநாயகிகள் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது
படவிழாக்கள்
புதிதாக தயாராகும் தமிழ் படங்களை விளம்பரப்படுத்த அதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்களை நடிகர்-நடிகைகள் மற்றும் டைரக்டர்களை அழைத்து நட்சத்திர ஓட்டல்களிலும், தியேட்டர்களிலும் தயாரிப்பாளர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த விழாக்களுக்கு வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களும் அழைக்கப்படுவது உண்டு. இது படத்தின் வியாபாரத்துக்கு உதவும் என்று பட அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் பல படங்களுக்கு அதில் நடிக்காத நடிகர் நடிகைகள் வந்தும் வாழ்த்தி விட்டு போய் இருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக படங்களில் நடித்தவர்கள் கூட அவர்களின் பட விழாக்களுக்கு வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கை
இந்தி, தெலுங்கு பட உலகில் இதுபோன்ற படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது. கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தமிழ் பட உலகில் அந்த நிலைமை இல்லை. படவிழாக்களை புறக்கணிக்கும் கதாநாயகிகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தப்பட்டது. கதாநாயகிகளின் மொத்த சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக்கொண்டு அதில் 10 சதவீதத்தை அவர்கள் டப்பிங் பேசி முடித்த பிறகு கொடுக்க வேண்டும் என்றும் மீதி 10 சதவீதத்தை பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாக்கள் போன்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்ட பிறகு வழங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நயன்தாரா
பட விழாக்களை புறக்கணிக்காமல் கதாநாயகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் சில நடிகைகள் கண்டு கொள்வது இல்லை. நயன்தாரா, அவர் நடித்து வெளிவந்த இது நம்ம ஆளு, தனி ஒருவன், படவிழாக்களில் கலந்து கொள்ளவில்லை. ஜீவா ஜோடியாக நடிக்கும் திருநாள் படவிழாவுக்கும் வரவில்லை. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இருமுகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இதே படத்தில் நடித்துள்ள நித்யாமேனனும் விழாவுக்கு வரவில்லை. விஜய்சேதுபதி, தமன்னா ஜோடியாக நடித்துள்ள தர்மதுரை படத்தின் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தமன்னா புறக்கணித்து விட்டார். ரஜினிகாந்தின் கபாலி பட விழா நடந்த போது அதில் கதாநாயகியாக நடித்த ராதிகா ஆப்தே கலந்து கொள்ளவில்லை. இதற்காக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். சூர்யாவின் 24 பட விழாவில் அதில் கதாநாயகியாக நடித்த சமந்தா கலந்து கொள்ளவில்லை
வழிமுறைகள்
காஜல் அகர்வால், திரிஷா உள்பட மேலும் பல கதாநாயகிகள் ஒருசில விழாக்களை தவிர பல பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். கதாநாயகிகளை விழாக்களில் கண்டிப்பாக பங்கெடுக்க செய்வதற்கான வழிமுறைகள் குறித்து திரையுலக சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.