அஜித் அடுத்ததாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் பூஜை முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிக்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் ‘தல57’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அக்ஷரா ஹாசன் ஏற்கெனவே இந்தியில் பால்கி இயக்கத்தில் தனுஷ்-அமிதாப் இணைந்து நடித்து வெளிவந்த ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது, கமல் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அஜித் படத்தில் அக்ஷராவுக்கு ஹீரோயின் வேடம் இல்லையாம். இருப்பினும், வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு இணையாக இந்த படத்தில் அக்ஷராவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் ‘தல57’ படப்பிடிப்பில் அக்ஷராஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது
பாலி படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்க படக்குழுவுக்கு ஏற்பாடு செய்த
சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜுலை 22-ந் தேதி ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வெளியாகவுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிம்பு, தனது படக்குழுவினர் அனைவருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியே பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.
இது படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தள்ளது. சிம்பு, ரஜினி மற்றும் அஜித் படங்கள் வெளியானால் முதல்நாளே முதல் காட்சியே பார்த்துவிடும் வழக்கம் உடையவர். அதன்படி, இந்த முறை ரஜினியின் படம் வெளியாகும் நாளில் தனது படக்குழுவினர் அனைவருக்கும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது
ஒருவாரத்துக்கு முன்னதாகவே ரசிகர்களை மகிழ்விக்க வரும் திருநாள்
படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா-நயன்தாரா ஒன்றாக இணைந்து நடித்திருக்கும் படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் என்பவர் இயக்கியிருக்கிறார். கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. எப்போதோ வெளியாகவேண்டிய இப்படத்தை வரும் ஆகஸ்ட் 12-ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், அன்றைய தேதியில் விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, தனுஷின் ‘தொடரி’, விக்ரம் பிரபுவின் ஆகிய ‘வாகா’ ஆகிய படங்கள் வெளியாவதால் பலத்த போட்டி நிலவியது.
எனவே, இந்த போட்டியில் இருந்து யார் பின்வாங்குவார்கள்? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதன்முதலாக ‘திருநாள்’ பின்வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என கூறப்பட்ட ‘திருநாள்’, தற்போது ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் மீனாட்சி, கருணாஸ், ‘நீயா நானா’ கோபிநாத், சரத் லோகிதாஸ்வா, ஜோ மல்லூரி உள்ளிட்டோரும் நடித்தள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கோதண்டபானி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் படத்தை தயாரித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
சல்மான் கானின் சுல்தான் 12 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்தது|
பாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.
ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.
நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன்மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது.
இந்நிலையில், ரிலீசான 12 நாட்களில் வெளிநாடுகளில் சுமார் 130 கோடி ரூபாயும், உள்நாட்டு வசூலாக 370 கோடி ரூபாயும் குவித்ததன் மூலமாக பாலிவுட் படங்களில் அதிகமான வசூல் சாதனை நிகழ்த்திய நான்காவது திரைப்படமாக ‘சுல்தான்’ பார்க்கப்படுகிறது.
விரைவில், உலகளாவிய பாலிவுட் பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் “தூம் 3” (ரூ.542 கோடி) என்ற இலக்கையும் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை ’சுல்தான்’ உருவாக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது