இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்தி நடிகர் சல்மான்கான் விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பேனா? என்று கேட்கிறீர்கள். சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. ஆனால் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு கிடையாது.
சினிமா தயாரிப்பாளர் பராக்கான் எனக்கு நல்ல நண்பர். அவர் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் கிடையாது. எனது வாழ்க்கை வரலாறு குறித்த படம் எடுக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது.
எனது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன். என்னை பற்றி படம் எடுத்தால் எனது கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா, தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
பரினீதி என்னை போன்ற தோற்றம் கொண்டவர். இதனால் அவர் நடித்தால் நன்றாக இருக்கும். ஒலிம்பிக் போட்டிக்கு மற்ற போட்டிகளை போல் சிறப்பாக தயாராகி வருகிறேன். பதக்கம் வெல்ல முடியுமா? என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
ரோகன் போபண்ணாவுடன் இணைந்து பல போட்டிகளில் ஆடிய அனுபவம் இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எல்லா வகையிலும் முயற்சிப்போம்.
கிராமத்து பெண்கள்தான் எனக்கு முன் உதாரணம்
கிராமத்து பெண் வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் லட்சுமிமேனன்.
‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘கொம்பன்’ படங்களில் இவர் நடித்த பாத்திரங்களில் அப்படியே பொருந்தினார். கிராமத்து பெண் வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார் என்று பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இதனால் லட்சுமிமேனனுக்கு கிராமத்து பெண் வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தற்போது விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ‘றெக்க’ படத்திலும் லட்சுமிமேனன் கிராமத்து பெண்ணாகவே வருகிறார். இந்த வேடங்களில் சிறப்பாக நடிப்பது எப்படி? என்பது குறித்து லட்சுமிமேனன் கூறும்போதுஸ
“நான் படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாக பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றை கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன்.
நடிக்கும்போது கிராமத்து பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் கிராமத்து பெண்களை மனதில் நிறுத்தி அதுபோல் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.
என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். என்றாலும், கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதற்கு நான் பழகிய கிராமத்து பெண்களே எனக்கு முன் உதாரணம்” என்றார்.
சாந்தனு பட டீசரை வெளியிடும் ஜெயம்ரவி
.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது உருவாகியுள்ளது. இந்த டீசரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் ஜெயம் ரவி வெளியிடவுள்ளார். இதனை சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இப்படத்தை சமயாலயா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் விசு மற்றும் வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 27 பிரபல நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் திருமணம் எப்போது?: டி.ராஜேந்தர் பதில
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் மனப்பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடி வருகிறோம். இருப்பினும், சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகக்கூட இருக்கலாம் என்று கூறினார்.
சிம்பு நடிப்பில் தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதையடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்தபிறகு சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.