பவர்புல் வேடம் கேட்கும் தமன்னா!
.
பாகுபலிக்குப்பிறகு படங்களை செலக்டீவாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார் தமன்னா. குறிப்பாக, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகாவைத் தொடர்ந்து
அவரைத்தேடியும் சில பிரபலமில்லாத நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிச் சென்றபோது, இந்த விளையாட்டுக்கு நான் வரல. நான் எப்போதுமே பெரிய நடிகர்களுடன்தான் ஜோடி போடுவேன். இறங்கி வந்தால் அப்புறம் உசரத்துக்கு போறது ரொம்ப கஷ்டமாகியிடும் என்று சொல்லி சில படங்களை திருப்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் விஜய்சேதுபதியுடன் தர்மதுரையில் நடித்த தமன்னாவுக்கு விஷாலின் புதிய படவய்ப்பும் கிடைத்துள்ளது. ஆக, இதன்பிறகு முதல் கிரேடு நடிகர்களின் படங்கள் தன்பக்கம் திரும்பவில்லையென்றால் செகண்ட் கிரேடு நடிகர்களுடனாவது இன்னொரு ரவுண்டு வருவோம் என்று முடிவு செய்துள்ள தமன்னா, சமீபத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும அழுது நடிக்கும் வேடங்களில நடிக்க மாட்டேன் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்தார். ஆனால் இப்போது, அழுதுதான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் அழுத்தமான வேங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. அதனால் வெறும் கலகலப்பு, கிளுகிளுப்புக்கு மட்டுமே என்னை தொட்டுக்கொள்ளாமல், அழுத்தம் கொடுக்கும் வேடங்கள் கொடுத்து வெயிட்டான கதாநாயகியாக மாற்றுங்கள் என்று சில அபிமான டைரக்டர்களின் காது கடித்து வருகிறார் தமன்னா.
ஹன்சிகாவின் அடுத்த ரவுண்டு!
.
அரண்மனை-2 படத்திற்கு பிறகு ஹன்சிகா நடித்த போக்கிரிராஜா, உயிரே உயிரே, மனிதன் போன்ற படங்கள் அவருக்கு எதிர்பார்த்தபடி வெற்றியை
கொடுக்க வில்லை. அதனால் அடுத்தபடியாக அவர் கைவசம் ஜெயம்ரவியின் போகன் மட்டுமே உள்ளது. இதற்கு முன்பு அவர் ஜெயம்ரவியுடன் நடித்த எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் ஆகிய படங்கள் வெற்றியாக அமைந்ததால் இந்த போகன் படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.
மேலும், திடுதிப்பென்று படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடுத்தபடியாக கதாநாயகி என்பதில் இருந்து விடுபட்டு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் இன்னொரு ரவுண்டு வர முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா. அதையடுத்து தனக்கு ஏற்கனவே வாய்ப்பு கொடுத்த சில முன்னணி டைரக்டர்களை சந்தித்து, வித்தியாசமான கேரக்டர்கள் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ள ஹன்சிகா, தற்போது திரிஷா நடித்து வரும் சில படங்களை சுட்டிக்காட்டி அந்த மாதிரியான கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக உள்ளேன் என்றும் கூறியிருக்கிறாராம்.
விலைமாதுவாக நடிக்கும் ஆண்ட்ரியா
கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என வரிசையாக மூன்று படங்களில் நடித்தவர்கள் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகிய
இருவரும். இதில் அந்த படங்களோடு கோலிவுட்டை விட்டு காணாமல் போய் விட்டார் பூஜாகுமார். ஆனால் ஆண்ட்ரியா, அதன்பிறகு ராம் இயக்கிய தரமணி படத்தில் லீடு ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு ஆங்கில பாடலைகூட தானே எழுதி டியூன் போட்டு பின்னணியும் பாடினார். ஆனால் அந்த அளவுகு ஆண்ட்ரியா ஆர்வமுடன் கமிட்டான தரமணி படம் இன்னமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவந்த ஆண்ட்ரியா இப்போது அந்த கொள்கையில் இருந்து விடு பட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தில் கமிட்டாகியிருக்கிறார். முழுக்க முழுக்க வடசென்னை மனிதர்களாக தனுஷ், சமந்தா உள்பட பலர் வாழ்ந்து காட்டயிருக்கும் அப்படம் ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒரு விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். இந்த வேடம் ஆண்ட்ரியாவை பெரிய பர்பாமென்ஸ் நடிகையாக உயர்த்தும் என்கிறார்கள்.
விஜய்யுடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் நயன்தாரா
.
பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதோடு பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா
ஓட்டு கேட்க வாரியா -என்ற பாடலில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடினார். ஆனால், பின்னர் அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. சில படங்களுக்காக நயன்தாராவிடம் கால்சீட் கேட்கப்பட்டபோது அதே தேதிகளில் அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருந்ததால் மீண்டும் அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
இந்த நிலையில், தற்போது நயன்தாரா ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால், பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை என்றொரு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து நயன் தாராவைக் கேட்டால், எனக்கான கேரக்டர் பிடித்திருந்தால் எந்த படமாக இருந்தாலும் நடிப்பேன். குறிப்பாக, விஜய் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அதனால் அவருடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப் பேன் என்கிறார்