சினிமா செய்தித் துளிகள்
போலீஸ் அதிகாரியாக நடிக்க சண்டை பயிற்சி பெற்றேன்: நிக்கி கல்ராணி
28 Apr,2016
நடித்தால் ஹீரோயின் தான்!
.
'இரண்டு ஹீரோயின்களில் ஒருவர், ஹீரோவின் முறைப்பெண், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா' போன்ற கேரக்டர்களில் இனி
நடிப்பது இல்லை என்ற முடிவுடன் இருக்கிறார் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், அவர் நடித்து வெளியான, ஹலோ நான் பேய் பேசுகிறேன் படத்தில், தன் வழக்கமான இமேஜை மாற்றி, சற்று கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதற்கு, இயக்குனர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, தொடர்ந்து அதுபோன்ற கிளாமரான வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'இனிமேல் நடித்தால் ஹீரோயின் தான்' என்ற முடிவிலும் உறுதியாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா.
விஜய்சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன்
.
விஜய்சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை', 'இறைவி', 'தர்மதுரை' ஆகிய நான்கு படங்கள் ரெடியாக ரிலீசுக்கு தயாராக காத்திருக்கிறது. இவற்றில் 'இடம் பொருள் ஏவல்', 'மெல்லிசை' இரண்டு படங்களும் காப்பி ரெடியாகி வருடக்கணக்கில் முடங்கிக்
கிடக்கிறது. நடிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது. அது ரிலீஸ் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன என்ற கொள்கையில் இருக்கும் விஜய்சேதுபதி அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க கமிட்டாகி, அட்வான்ஸை வாங்கிப்போட்டுக் கொண்டே இருக்கிறார்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் தேவா, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கே.வி.ஆனந்த் இயக்கும் படம், தனுஷ் தயாரிக்கும் படம் என ஐந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள விஜய்சேதுபதி, லேட்டஸ்டாக 'ரெக்கை' என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தைத் தயாரிப்பது விஜய்சேதுபதி நடித்த 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்த 'காமன் மேன்' பி.கணேஷ். இவர் விஜய்சேதுபதியின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்பட்டாலும், இன்னொரு பக்கம் விஜய்சேதுபதியின் பினாமி என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஐந்து படங்கள் லைன்அப்பில் இருக்க அந்தப்படங்களை பெண்டிங்கில் வைத்துவிட்டு ரெக்க படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.
'வா டீல்' படத்தை இயக்கியிருக்கும் ரத்தின சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் முதன் முதலாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லட்சுமி மேனன்! விஜய் சேதுபதி(சிறப்பு தோற்றம்), 'ஜிகர்தண்டா'படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் என்றாலும் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் 'ரெக்கை' தான். இப்படத்தின் பூஜை மே மாதம் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு மே 11-ஆம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது
விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா
விஷால் தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் தமன்னாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.
விஷால் நடிப்பில் தற்போது ‘மருது’ படம் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தை தொடர்ந்து, ‘கத்திச்சண்டை’ என்ற படத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை சுராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்துவிட்ட விஷால், தமன்னாவுடன் ஜோடி சேருவது இதுவே முதல்முறை. இப்படத்தில் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, சம்பத் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கிறார்கள்.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 2-ந் சென்னையில் பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற உள்ளது.
கிளாமராக நடிக்கத் தயாராகும் அமலா பால் ?
.
இயக்குனர் விஜய்யைத் திருமணம் செய்த பின் அமலா பால் நடிப்பிலிருந்து விலகி விடுவார் என்றுதான் திரையுலகத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் விலகாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பின் அவர் சூர்யா ஜோடியாக
'பசங்க 2' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரம்தான் அது.
தமிழில் அடுத்து அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் 'அம்மா கணக்கு' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கன்னடத்தில் சுதீப் இயக்கத்தில் 'ஹெப்புலி' என்ற படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் மட்டுமே நடித்த அமலா பால் முதல் முறையாக கன்னடத்தில் நடிக்க உள்ளார். தெலுங்கில் ஏற்கெனவே இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்த அமலா பால் திருமணத்திற்குப் பின் எந்த தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
தெலுங்கில் ஹீரோயின்கள் என்றாலே அவர்களை கிளாமராகக் காட்டுவதுதான் வழக்கம். அமலா பால் திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிப்பாரோ, மாட்டாரோ என்ற சந்தேகத்தில்தான் யாரும் அவரை அணுகாமல் இருந்திருக்கிறார்கள். டோலிவுட்டில் சிலர் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டதற்கு கிளாமராக நடிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால், அதற்கு சம்பளத்தை அதிகம் தர வேண்டும் என்று அமலா பால் கேட்டதாகவும் டோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இது உண்மையா, பொய்யா என்று அமலா பால்தான் சொல்ல வேண்டும்
போலீஸ் அதிகாரியாக நடிக்க சண்டை பயிற்சி பெற்றேன்: நிக்கி கல்ராணி
நிக்கி கல்ராணி தற்போது போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதற்காக சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார்.
தமிழ் பட உலகில் முக்கிய இடம் பிடித்து வருபவர் நிக்கி கல்ராணி. தற்போது ‘கோ–2’ படத்தில் நடித்திருக்கிறார். திரை உலக அனுபவம் பற்றி அவரிடம் கேட்ட போது...
நான் ஒரு படத்தில் நடிப்பது போன்று அடுத்த படத்திலும் அதே வேடத்தில் நடிக்க விரும்ப வில்லை. ஒரு படத்தில் நடிக்கும் போது சொந்த குரலில் பேசி நடித்தால் தான் நன்றாக திறமையை வெளிப்படுத்த முடியும். அடுத்த கட்டத்துக்கு செல்லலாம். எனவே நான் நடிக்கும் படங்களில் என் சொந்த குரலில் டப்பிங் பேச விரும்புகிறேன். அதற்காக பயிற்சி பெற்று வருகிறேன்.
தேர்தலுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘கோ 2’ அமையும். இதில் தீவிரமான பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சி பெற்றேன். போலீஸ் அதிகாரிகள் போல நடை உடை பாவனைகளை எதிர்த்து கொள்ளவும் பயிற்சி பெற்றேன். இது எனக்கு வித்தியாசமான வேடம்.
ராகவா லாரன்சுடன் மொட்டசிவா கெட்ட சிவா, ஜி.வி.பிரகாசுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படங்களிலும் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம்” என்றார்.