சினிமா செய்தித் துளிகள்
மும்பையில் முகாமிட்ட ராய்லட்சுமி!
27 Apr,2016
வெற்றிப்பட நாயகி ஆவேன்! -சொல்கிறார் மாயா
.
டார்லிங்-2வில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாயா. அதையடுத்து, தற்போது ஆரிக்கு ஜோடியாக உன்னோடு கா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தைப்பற்றி மாயா கூறுகையில்,
இந்த பட யூனிட்டில் எல்லோரும் ஜாலியா பேசிக்கிட்டிருப்பார்கள். ஆனால் டேக் என்று கேமரா முன்னாடி வரும்போது ஒரே டேக்குல ஓகே பண்ணிட்டு போயிடுவார்கள். இவங்ககிட்ட இருந்து நான் நிறைய நடிப்பு கற்றிருக்கிறேன். அதோடு எனக்கு ஏதாச்சும் தெரியலேன்னாலும் சொல்லித்தருவார்கள். டார்லிங்-2 படத்தில் நடித்தபோது கலையரசன், காளிவெங்கட் எலலோருமே சொல்லித்தந்தார்கள். அதேபோல் உன்னோடு கா பட யூனிட்டில் அனைவருமே எனக்கு நடிப்பு சொல்லித்தந்தார்கள். நான் ஓரளவு நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடன் நடித்த அனைவருமே காரணம்.
மேலும், உன்னோடு கா படத்தில் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார். டார்லிங்-2 படத்தில்தான் நான் அழகாக இருப்பதாக நினைத்தேன். இந்த படத்தில் அதைவிட அழகாக தெரிகிறேன். எல்லாம் கேமராமேனின் கைவண்ணம்தான். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதோடு, டார்லிங்-2 எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் உன்னோடு கா படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்த அளவுக்கு குடும்பப்பாங்கான காமெடி படம். அதனால் இந்த படத்திற்கு பிறகு நான் வெற்றிப்பட நாயகியாகி விடுவேன் என்கிறார் மாயா.
சூர்யாவை கவர்ந்த சமந்தாவின் ரொமான்ஸ்!
.
சூர்யா-சமந்தா இருவரும் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில்தான் இணைந்தனர். அதோடு அந்த படத்தில்தான் முதன்முறையாக டூ-பீஸ் உடையில் நடித்து இளவட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா. முன்பு நடித்த படங்களை விடவும் சூர்யாவுடன்
ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடினார். அதன்காரணமாக அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றபோதும், சூர்யா-சமந்தாவின் நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில், மீண்டும் அவர்கள் விக்ரம்குமார் இயக்கியுள்ள 24 படத்திலும் இணைந்திருக்கிறார்கள். டைம் மிஷின் கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இதில் முதன்முறையாக 3 விதமான வேடங்களில் நடித்துள்ளார் சூர்யா. அதோடு, சூர்யா-சமந்தாவின் லவ் போர்ஷனை சிறப்பாக படமாக்கியிருக்கிறாராம் விக்ரம்குமார். அதனால் அவர்கள் இருவருமே ரொமான்ஸ் காட்சிகளில் மிக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம். இந்த காட்சிகளில் நடித்து முடித்து மானிட்டரில் ரசித்த சூர்யா, சமந்தாவின் ரொமான்ஸ் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியில் ஸ்ரீதிவ்யா!
.
சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் வேகமாக வளர்ந்து வந்த அவர் இப்போது மார்க்கெட்டில் பின்தங்கி விட்டார். ஆனபோதும் அவரது கைவசம்
காஷ்மரோ, மருது, சங்கிலி புங்கிலி கதவ திற போன்ற படங்கள் உள்ளன. அதோடு, ஜி.வி.பிரகாசின் முதல் படமான பென்சிலும் உள்ளது. சிலபல காரணங்களால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. என்றபோதும் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
மேலும், அந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். தற்போது டப்பிங் பணிகள் நடக்கிறது. பென்சில் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் தற்போது இறங்கியிருக்கிறாராம். ஏற்கனவே ஸ்ரீதிவ்யா தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் என்பதால் அவரது போட்டோக்களை முன்னிறுத்தி ஆந்திராவில் பப்ளிசிட்டியை முடுக்கி விடப்போகிறார்களாம். இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் ஸ்ரீதிவ்யா, இந்த படத்தை வைத்து ஆந்திராவிலும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அங்குள்ள மீடியாக்களில் பென்சில் படத்தின் அருமை பெருமைகளை பேட்டிகளில் கூறிவருகிறாராம்.
தயாரிப்பாளராகிறார் நயன்தாரா.?!
தற்போது 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இது நம்ம ஆளு, திருநாள் படங்களை முடித்து விட்டவர் இருமுகன், காஷ்மோரா, டிக் டிக் டிக் ஆகிய படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களை அடுத்து
தமிழில் மோகன்ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இந்த படத்தில் தனி ஒருவனை விட நயன்தாராவுக்கு வெயிட்டான ரோல் கொடுத்துள்ளாராம் மோகன்ராஜா.
மேலும், இந்த படத்தில் நடித்து முடித்ததும் மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் நயன்தாரா. அதோடு, அந்த படத்தை நயன்தாராவே தயாரிக்கயிருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த படம் வருகிற மே மாதம் 12-ந்தேதி பூஜையுடன் தொடங்கயிருக்கிறதாம். அதோடு, நானும் ரவுடிதான் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதி-நயன்தாரா-திரிஷா கூட்டணியில் விக்னேஷ்சிவன் ஒரு படம் இயக்குகிறார் என்று வெளியான செய்தி வதந்தி என்கிறார்கள்.
மும்பையில் முகாமிட்ட ராய்லட்சுமி!
ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் ராய்லட்சுமி. கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அவர், தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தனது கவர்ச்சிகரமான உடலமைப்பை
பயன்படுத்தி பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று அவர் எடுத்து அனைத்து முயற்சிகளுமே தோல்வியில்தான் முடிந்தன. இந்த நிலையில்தான், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இயக்கியுள்ள அகிரா படத்தில் கமிட்டாகி நடித்தார் ராய்லட்சுமி. தமிழில் வெளியான மெளனகுரு படத்தின் இந்தி ரீமேக்கான இந்த படத்தில் சோனாக்க்ஷி சின்ஹாதான் முக்கிய நாயகி என்றபோதும், ராய்லட்சுமிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வேடமகொடுத்துள்ளாராம் முருகதாஸ்.
அதனால் அகிரா படம் திரைக்கு வரும்போது இந்தியில் தனக்கு புதிய படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் ராய்லட்சுமி. ஆனால் செப்டம்பர் மாதம்தான் அகிராவை ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் முருகதாஸ். இதனால் அந்த படத்திற்காக காத்திருக்க வேண்டாம் என்று தீவிர பட வேட்டையில் இறங்கிய ராய்லட்சுமி தற்போது ஜூலி-2 என்ற இந்தி படத்தை கைப்பற்றி நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இந்தி படங்களுக்காக மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.