சினிமா செய்தித் துளிகள்
ரசிகர்களின் மனங்கவர்ந்த நாயகி நயன்தாரா
25 Apr,2016
அஞ்சலியின் புதிய அழகு சிகிச்சை!
அங்காடித்தெரு அஞ்சலி, கலகலப்புக்கு பிறகு கலக்கல் அஞ்சலியாகி விட்டார். முன்பு இடை கவர்ச்சியைகூட காட்டாமல் இருந்தவர், அதன்பிறகு
இடுப்பை வளைத்து நொடித்து சகட்டுமேனிக்கு ஆடினார். அதோடு கவர்ச்சி நாயகி என்றால் கொளுகொளுவென்று இருக்க வேண்டும் என்பதால் படத்துக்குப்படம் ஊதி பெருத்துக்கொண்டே வந்தார். சில படங்களில் அயிட்டம் பாடலுக்கும் ஆடினார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. இறைவி படத்தில் அவரை கையெடுத்து கும்பிட வைக்கும் அளவுக்கு ஒரு குடும்ப நடிகை வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
அதன்காரணமாக, தனது கவர்ச்சியை இதுவரை ரசித்த ரசிகர்கள், இந்த படத்தில் தனது நடிப்பை ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை குறைத்து நடிப்பை கூட்டியிருக்கிறார். அதோடு, இனிமேல் இப்போது இருக்கும் அதே உடம்பை அப்படியே பராமரிக்கப்போகிறாராம் அஞ்சலி. அதோடு, உடம்பை ஸ்லிம் பண்ணியதால் அவரது முகத்தில் முன்பிருந்த மினுமினுப்பு இப்போது இல்லையாம். அதனால், முக அழகை கூட்டுவதற்காக தற்போது ஒரு ஆயுர்வேத அழகு சிகிச்சையில் இறங்கியிருக்கிறார் அஞ்சலி.
இந்திப்பட வேட்டையில் சிருஷ்டி டான்கே
தமன்னா, ஹன்சிகா, காஜல்அகர்வால் வரிசையில் மும்பையில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை சிருஷ்டி டான்கே. அவர்களெல்லாம் இந்தியில் சில படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கே வந்தனர். ஆனால இவரோ, காதலாகி என்ற தமிழ்ப்படத்தில்தான்
அறிமுகமானார். அதையடுத்து யுத்தம் செய், மேகா, டார்லிங், கத்துக்கட்டி, வில்அம்பு, ஜித்தன்-2 என பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்டார். நவரச திலகம், ஒரு நொடியில், அச்சமின்றி, காலகூத்து, தர்மதுரை ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.
மேலும், வந்த வேகத்தில் பல படங்களில் சிருஷ்டி டான்கே நடித்து விட்டபோதும், இதுவரை அவர் நடித்த ஒரு படம்கூட ஹிட்டாகவில்லை. அதனால் ஆரம்பத்தில் தமிழ் சினிமா மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்த அவர், தற்போது நம்பிக்கையை இழந்து காணப்படுகிறார். அதேசமயம், விஜயசேதுபதியுடன் நடித்துள்ள தர்மதுரை படத்தின் மீது சிறிது நம்பிக்கை வைத்திருந்தபோதும் அந்த படத்தில் தமன்னாவே நாயகி என்பதால் அந்த படம் குறித்து பெரிதாக பேசிக்கொள்வதில்லை சிருஷ்டி டான்கே.
அதோடு, தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக கோலிவுட்டில் முகாமிட்டிருந்த அவர், தற்போது மும்பைக்கே திரும்பிச்சென்று விட்டார். அங்கிருந்தபடி தாய்மொழியான இந்தி படங்களை கைப்பற்ற தீவிரமான முயற்சியிலும் இறங்கியிருக்கிறாராம் சிருஷ்டி டான்கே.
ரசிகர்களின் மனங்கவர்ந்த நாயகி நயன்தாரா
வயசு ஏற ஏற நயன்தாராவின் மார்க்கெட்டும் எகிறிக்கொண்டே போகிறது. அதோடு அவரது பர்பாமென்ஸ் ரேஞ்சும் உயர்ந்து விட்டதால் படக்கூலியும் படத்துக்குப்படம் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும், பில்லாவில் பிகினி உடையணிந்து நடித்து அதிகப்படியான
ரசிகர்களை தன் பக்கம் இழுத்த நயன்தாரா, அதையடுத்து அந்த அளவுக்கு கிளாமர் பிரவேசம் நடத்தவில்லை என்றபோதும், ரசிகர்களின் மனங்களில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் கோலிவுட் நடிகர் நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்ட நடிகர் நடிகை சம்பந்தமான கருத்துக்கணிப்பை டைம்ஸ் ஆப் இந்தியா நடத்தியுள்ளது. அந்த அடிப்படையில், கடந்த ஆண்டில் ரசிகர்களின் மனங்கவர்நத நடிகராக தனுஷ் முதலிடம் பிடித்ததாக ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது தமிழ் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட நடிகையாக நயன்தாரா முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்ருதிஹாசன், எமிஜாக்சன், அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால், சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்
சூர்யா, விக்ரம் படங்களில் நித்யா மேனன் ?
.
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு இயக்குனரால் தங்களது திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையைப் பெற்றவர்கள் இரண்டு ஹீரோக்கள்.
அந்த இயக்குனர் பாலா, அந்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம், சூர்யா. தோல்வி நாயகனாகவே பல வருடங்கள் இருந்த விக்ரம் பாலா இயக்கிய 'சேது' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இவருக்கு நடிக்க வராதா என கிண்டல் செய்யப்பட்ட சூர்யா, பாலா இயக்கிய 'நந்தா' படத்தின் மூலம் தான் யார் என்பதையும் நிரூபித்தார்.
இந்த இருவருக்கும் இடையே இருக்கும் மோதல் என்னவென்பதை திரையுலகம் நன்றாகவே அறியும். அது சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் கொண்டாட்டத்திலும் கூட எதிரொலித்தது. விக்ரம் பிறந்த நாள் கேக் வெட்டிய போது அந்தப் பக்கம் வராதவர் சூர்யா. வெற்றி பெற்று சூர்யா கோப்பை வாங்கும் போது அறிவிப்பாளர் அழைத்தும் அந்தப் பக்கம் போகாதவர் விக்ரம்.
ஆனாலும், இருவருக்குள்ளும் ஒரு போட்டி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அது நாயகிகளை ஒப்பந்தம் செய்வதிலும் தொடர்கிறது. '24' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனனை தன்னுடைய 'இருமுகன்' படத்திலும் ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார் விக்ரம். அது மட்டுமல்ல, '24' படத்தை விட 'இருமுகன்' படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் கனமானதாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாராம். 'இருமுகன்' படத்தில் நயன்தாரா இருந்தாலும் நித்யாவுக்கும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் ஆனந்த் சங்கர். படம் வெளிவந்த பின் '24' படத்தை விட 'இருமுகன்' படத்தில் நித்யாவின் நடிப்பு அசத்தல் என்ற பெயர் வரவேண்டும் என்பதுதான் விக்ரமின் விருப்பம் என்கிறார்கள்.
மலையாளக்கரையோரம் ஆண்ட்ரியா
அழகும் திறமையும் இருந்தும் க்ளிக்காகாமல் போன நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். அவரை படங்களில் புக் பண்ண நினைத்தால் யாரை
அணுகுவது என்று திரையுலகினருக்கே தெரியாது. அந்தளவுக்கு மர்மமானவர் ஆண்ட்ரியா. அவருக்கு என்று பி.ஆர்.ஓ.வோ, மானேஜரோ கிடையாது. செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கமாட்டார். தனக்கு நெருக்கமான ஹீரோக்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருப்பார்.
இதுபோன்ற காரணங்களினால் தமிழில் மார்க்கெட்டை இழந்த ஆண்ட்ரியா, பட வாய்ப்பு இல்லாததினால் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் சிறு வேடத்தில் தலை காட்டியுள்ள ஆண்ட்ரியா, ராம் இயக்கும் 'தரமணி' படத்திலும் நடித்துள்ளார். அவரது போறாத நேரமோ என்னவோ....இந்த இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகாமல் மாதக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. ஏற்கெனவே ஃபஹத் ஃபாசில், பிருத்திவி ராஜ், மோகன்லால் ஆகியோருடன் இணைந்து மலையாள படங்களில் நடித்துள்ளார் ஆன்ட்ரியா. மம்முட்டியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கும் படத்திற்கு 'தோப்பில் ஜோப்பன்' என்று பெயரிட்டுள்ளனர். ஜானி ஆன்டனி இப்படத்தை இயக்குகிறார்.
விஷாலுக்காக பறந்து வந்த ராகுல் ப்ரீத் சிங்
.
தெலுங்குத் திரையுலகில் தற்போது முதலிடத்தில் இருக்கும் நாயகி ராகுல் ப்ரீத் சிங். ஏறக்குறைய இன்றைய இளம் முன்னணி ஹீரோக்கள் பலருடன்
ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் இவர் ஒருவரே. மிகப் பெரிய ஹிட் படங்கள் இவருக்கு அமையவில்லை என்றாலும் ஏனோ, தெலுங்குத் திரையுலகத்தினரும், திரையுலகினரும் இவரைக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எப்படி நயன்தாராவோ, அப்படி தெலுங்கில் ராகுல் ப்ரீத் சிங் இருக்கிறார் என்கிறார்கள் டோலிவுட்டினர்.
தமிழில் 'புத்தகம், என்னமோ ஏதோ' என்ற இரண்டு தோல்விப் படங்களில் நடித்தவர்தான் இந்த ராகுல் ப்ரீத். அதன் பின் தெலுங்கில் மளமளவென பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து தன்னை முன்னணிக்கு கொண்டு வந்துவிட்டார். சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரை அங்கு பின்னுக்குத் தள்ளிய பெருமை இவரையே சாரும்.
ராகுலின் தமிழ் ரீ-என்ட்ரியைப் பார்த்து இங்குள்ள மற்ற ஹீரோயின்கள் இப்போதே இந்த கோடை வெயிலில் டபுள் மடங்காக வேர்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். காரணம் படத்தை இயக்கப் போவது மிஷ்கின், நாயகனாக நடிக்கப் போவது விஷால். அதற்காகத்தான் மற்ற தமிழ் ஹீரோயின்கள் நீண்ட நேரம் நட்சத்திர கிரிக்கெட்டில் இல்லாத நிலையிலும் விஷாலுக்காக ராகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்திலிருந்து வந்து கலந்து கொண்டார் என்கிறார்கள். தங்களுக்கு போட்டியாக புதியவர் ஒருவர் வருவதால்தான் ஹன்சிகா, த்ரிஷா போன்றவர்கள் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு வரவில்லையோ...?