சினிமா செய்தித் துளிகள்
குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்
21 Apr,2016
அடுத்த வருடம் திருமணமா?: தமன்னா பேட்டி
என்ஜினீயருடன் அடுத்த வருடம் திருமணம் நடக்கப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகை தமன்னா பதில் அளித்தார்.
தமன்னா 2006-ல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கல்லூரி படம் அவரை பிரபலபடுத்தியது. விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, தனுசுடன் படிக்காதவன், ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இந்தி படமொன்றிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியது. மணமகன் என்ஜினீயராக இருக்கிறார் என்றும் இருவரும் நீண்ட நாட்களாக காதலிப்பதாகவும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக தமன்னா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
அசின் சமீபத்தில் தொழில் அதிபரை மணந்து சினிமாவை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் பற்றிய தகவலுக்கு தமன்னா பதில் சொல்லாமல் இருந்தார். இதனால் திருமணம் நடக்கப்போவது உண்மைதான் என்று பட உலகினர் கிசுகிசுத்தனர். இதற்கிடையில் தமன்னா தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
‘‘எனக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் உண்மை இல்லை. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது.’’
இவ்வாறு தமன்னா கூறினார்.
குரலில் டப்பிங் பேசும் கீர்த்தி சுரேஷ்
முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவர் நடிக்கும் படங்களில் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறாராம்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவர் பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளாவார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமானது ‘ரஜினி முருகன்’ படத்தில்தான். ஆனால், அதன்பிறகு இவர் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் முதலில் வெளிவந்து எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இருப்பினும் அதன்பிறகு வெளிவந்த ‘ரஜினிமுருகன்’ கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘தொடரி’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
தற்போது விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் இவர்தான் கதாநாயகி. இப்படி குறுகிய படங்களிலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் படங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசி வருகிறாராம்.
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறமைகொண்ட கீர்த்தி சுரேஷ், இரண்டு மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங் பேசுகிறாராம். இதனாலேயே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அஜித்தின் 57வது படத்தில் நடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கிய கீர்த்தி சுரேஷ்!
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நாயகிகளின் ஒரே ஆசை தல அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது தான்.தற்போது அஜித் 57வது படத்திற்கான தகவலை அறிவித்துவிட்டார். இப்படத்திற்கான கதை அமைப்பதில் பிஸியாக இருக்கும் சிவா நாயகி யார் என்பதையெல்லாம் இன்னும் அறிவிக்கவில்லை.இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தில் கமிட்டாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் தலயின் 57வது படத்தில் நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இயக்குனர் சிவா பிஸியாக இருப்பதால் இன்னும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்க, ஒரு கட்டத்தில் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நாயகிகளின் ஒரே ஆசை தல அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது தான்.தற்போது அஜித் 57வது படத்திற்கான தகவலை அறிவித்துவிட்டார். இப்படத்திற்கான கதை அமைப்பதில் பிஸியாக இருக்கும் சிவா நாயகி யார் என்பதையெல்லாம் இன்னும் அறிவிக்கவில்லை.இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தில் கமிட்டாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் தலயின் 57வது படத்தில் நடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இயக்குனர் சிவா பிஸியாக இருப்பதால் இன்னும் பதில் சொல்லாமல் இழுத்தடிக்க, ஒரு கட்டத்தில் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டாராம் கீர்த்தி சுரேஷ்
பிரபாஸ் - காஜல் அகர்வால் நடிப்பில் வருகிறது ‘பிரபாஸ் பாகுபலி’
இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’ படத்தின் நாயகன் பிரபாஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருகிறார். இதனால், இவர் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரபாஸ் - காஜல் அகர்வால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான ‘டார்லிங்’ படத்தினை தமிழில் ‘பிரபாஸ் பாகுபகு’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’ படத்தின் நாயகன் பிரபாஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருகிறார். இதனால், இவர் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரபாஸ் - காஜல் அகர்வால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான ‘டார்லிங்’ படத்தினை தமிழில் ‘பிரபாஸ் பாகுபகு’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டுள்ளது.
’செல்வந்தன்’, ’இது தாண்டா போலீஸ்’, ’புருஸ்லீ’, ’மகதீரா’, ’எவன்டா போன்ற’ மொழிமாற்று படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். இதே நிறுவனம் ’கபர்சிங்’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கிறது. அத்துடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘கரைனோடு’ என்ற படத்தையும் வெளியிட உள்ளனர். பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யாசீத்தாலா, வெங்கட்ராவ் ஆகியோர் தயாரிக்கும் ‘பிரபாஸ் பாகுபலி’ படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் முகேஷ் ரிஷி, துளசி, ஆகுதி பிரசாத், சந்திரமோகன், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.நாராயணா, சந்திரபோஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆண்ட்ரூ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மீனாட்சி சுந்தரம், சுவாதி, அருண் பாரதி, திருமலை மோகன், மோகன் எஸ்.பி.ஐ ஆகியோர் பாடல்கள் எழுத, கே.வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பு செய்துள்ளார். அசோக் கலையை நிர்மாணிக்க, ராஜுசுந்தரம், பிருந்தா ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். பீட்டர் ஹெயின் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். கருணாகரன் இயக்கியுள்ள இப்படத்தினை தமிழாக்கம் செய்து வசனம் எழுதியிருக்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா.
படம் குறித்து ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறுகையில், “இளம் காதல் கதையாக உருவாகி உள்ளது. பிரபாஸ் - காஜல் அகர்வால் சிறு வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க நினைகிறார்கள். அப்படி சந்திக்கிறவர்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நண்பர்கள் எப்படி காதலர்களாகிறார்கள் என்பது வருஷம் 16 மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதுடன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது” என்றார்.