சினிமா செய்தித் துளிகள்
விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா ராகுல் பிரீத் சிங்!
19 Apr,2016

ப்ரியா ஆனந்த் செம அப்ஸெட்.... ஏன்?
நடிகர் அதர்வா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து தயாரிக்கும் முதல் படம் - 'செம போத ஆகாத'. தனது நிறுவனத்துக்கு 'கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்' என பெயரிடப்பட்டிருக்கும் அதர்வா, தன்னை 'பாணா காத்தாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்
செய்த பத்ரி வெங்கடேஷுக்கு தனது முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். தனது நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் அதர்வாவே கதாநாயகனாக நடிக்கிறார்.
அதர்வா தயாரிப்பாளர் என்றதும் இந்தப் படத்தின் கதாநாயகி வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் ஏற்கனவே அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகள் முயற்சி செய்துள்ளனர். முக்கியமாக இரும்பு குதிரை படத்தில் அதர்வா உடன் நடித்த ப்ரியா ஆனந்த், மிக நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார். காரணம்... ப்ரியா ஆனந்தும், அதர்வாவும் செம க்ளோஸ். இன்னொரு பக்கம், ஜனனி அய்யர் என்ற நடிகையும் தன்னுடைய பி.ஆர்.ஓ. மூலம் அதர்வாவை துரத்தி இருக்கிறார். கடைசியில் 'காவியத்தலைவன்' படத்தில் நடித்த அனைகாவை கதாநாயகியாக்கிவிட்டார். இதனால் ப்ரியா ஆனந்த் செம அப்ஸெட்டாகிவிட்டாராம்.
ஜனனி ஐயர் நடிக்கும் “விதி மதி உல்டா”
டார்லிங்-2 படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்க “விதி மதி உல்டா” என்ற வித்யசமன் பெயரில் புதிய பட்த்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்ட்து. விதியை வெல்லக்குடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும்? அது தான் “விதி மதி உல்டா” பட்த்தின் கதையாகும் இதை தன் காதல், காமெடி, ஃபன்டஸி கலந்த் த்ரில்லிங் படமாக் உருவாக்கி வருகிறார்கள்.
இந்தப்பட்த்தில் கதா நாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். வித்தயாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன் நடித்து வருகிறார்கள். முக்கிய வெட்த்தில் சென்ராயன், சித்ராலட்சுமணன், ஞானசம்பந்தம், ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி, பெங்க்ளுர் பொன்ற முக்கியமான பகுதிகளில் நடந்து வளர்ந்து வருகிறார்கள்.
ரஜினியுடன் செல்பி : மகிழ்ச்சி வெள்ளத்தில் எமி!
மதராசப்பட்டினம் படத்துக்காக கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால்
அதையடுத்து விக்ரம், விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடித்த அவர், தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ரஜினியுடன் நடிப்பது இந்திய நடிகைகளுக்கே குதிரைக்கொம்பாக இருந்து வரும் நிலையில், எமிக்கு வந்த வேகத்திலேயே கிடைத்திருப்பது சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. அதோடு அவரை அதிர்ஷ்டக்கார நடிகையாகவே மற்ற நடிகைகள் பார்க்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் தான் ரஜினியுடன் நடிப்பதற்கு முன்பு தொடங்கி நடிக்க ஆரம்பித்தது வரை அவ்வப்போது தனது உணர்வுகளை டுவிட்டரில் பதிவு செய்து வந்த எமிஜாக்சன், தற்போது ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பியை பதிவு செய்திருக்கிறார். அதோடு, நான் மிக சந்தோசமாக எடுத்துக் கொண்ட படம் இது. இதற்கு முன்பு இவ்வளவு சந்தோசமாக நான் எந்த போட்டோவையும் எடுத்துக்கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் எமிஜாக்சன்.
மெகா சீரியல் தேடும் தேவயானி!
சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக இருந்தவர் தேவயானி. ஆரம்பத்தில் தொட்டா சிணுங்கி உள்ளிட்ட சில படங்களில் கிளாமராக நடித்தபோதும
காதல் கோட்டைக்குப்பிறகு குடும்ப குத்து விளக்காகி விட்டார். அதையடுத்து நீண்டகாலம் சினிமாவில் பயணித்தவருக்கு திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் பிரவேசித்தார். அந்த வகையில், திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் தேவயானி நடித்த அபி என்ற கேரக்டர் அவரை சின்னத்திரையிலும் நம்பர்-ஒன்னாக்கியது.
அதையடுத்து, சினிமாவில் அவ்வப்போது நடித்துக்கொண்டே மஞ்சள் மகிமை, கொடிமுல்லை, முத்தாரம் போன்ற தொடர்களிலும் நடித்தார். இந்த நேரத்தில், தனது பிள்ளைகள் பயிலும் சர்ச் பார்க் கான்வென்டில் ஒரு ஆசிரியை விடு முறைக்கு செல்ல, அவர் இடத்தில் சில மாதங்கள் ஆசிரியையாக வேலை பார்த் தார் தேவயானி. விளைவு, அவர் முழுநேர ஆசிரியையாகி விட்டதாக செய்திகள் வெளியானது. அதனால் அதையடுத்து அவரை சினிமா, சின்னத்திரையில் நடிக்க புக் பண்ணுவது குறைந்து விட்டது.
இருப்பினும் சகாப்தம், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள தேவயானி, சமீபத்தில் பாரதிதாசன் கல்லூரிக்கான ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து மெகா சீரியல்களில் மீண்டும் நடிப்பதற்கும் தயாராக உள்ளாராம். தேவயானி தரப்பில் இருந்து இந்த செய்திகள் வெளியாகி தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா ராகுல் பிரீத் சிங்!
பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். துப்பறிவாளன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது.இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது இப்படத்தில் நடிக்க ராகுல் பிரீத் சிங் ரூ. 1 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.

சென்னையில் தெறி நான்கு நாட்களில் ரூ 3.06 கோடி வசூல்: - அதிர்ந்த கோலிவுட்
இளைய தளபதி விஜய் நடித்த தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் சென்னையில் முதல் நாளே ரூ1 கோடி வசூல் செய்து சாதனை புரிந்தது.இந்நிலையில் படம் வெளியாகிய 4 நாள் முடிவில் தெறி ரூ 3.06 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில், ஒரு சில முக்கிய திரையரங்குகளில் தெறி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.படம் சில திரையரங்கில் வெளியாகமல் இத்தனை கோடி வசூல் செய்வது சாதரண விஷயமில்லை. இதைக்கண்டு கோலிவுட்டே அதிர்ந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கமாட்டார்: - ரசிகர்கள் அதிர்ச்சி
ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியா சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மீண்டும் மலையாளத்தில் நடித்த kali படமும் செம்ம ஹிட்.இதை தொடர்ந்து இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.ஏனெனில், இந்த கதாபாத்திரம் கொஞ்சம் வயது அதிகமாக இருப்பவர் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. இதனால், தமிழில் இந்த முறையும் சாய் பல்லவியை பார்க்க முடியாத ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.