சினிமா செய்தித் துளிகள்
ஆடாத நடிகையையும் ஆட வைத்து விடும் லாரன்ஸ்:
16 Apr,2016
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்ததும் எமது திருமணம் நடைபெறும்! - விஷால் - வரலட்சுமி அறிவிப்பு
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த உடன் அங்குள்ள மண்டபத்தில் முதல் திருமணம் என்னுடையதுதான் நடைபெறும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். தன்னுடையது காதல் திருமணம்தான் என்றும் லட்சுமிகரமான பெயர்கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்றும் விஷால் கூறியுள்ளார். சென்னையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுகின்றனர். இதற்காக நட்சத்திர கிரிக்கெட் வரும் 17ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கான முன்னோட்டமாக சன் டிவியில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. நட்சத்திர சங்கமம், நடிகர்கள் சந்திப்பு என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இந்த வாரம் டப்மாஷ் செய்து நட்சத்திரங்கள் அசத்தினர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வருமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களை பட்டு சேலை, பட்டுவேட்டி கொடுத்து தமிழக நடிகர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
கன்னட நடிகர் யாஷ், நடிகர் விஷாலிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு விஷால், நான் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்னர், அதில் உள்ள திருமண மண்டபத்தில் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று கூறினார். உடனே அருகில் இருந்த நடிகை ரேகா, இது காதல் திருமணமா என்று கேட்க, ஆமாம், நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றார்.
உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சங்கீதா, காதல் மனைவியின் பெயரை சொல்லுங்களேன் என்று கூற, லட்சுமிகரமான பெயர் கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்று விஷால் கூறினார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் அனைவரும் கரஒலி எழுப்ப, நடிகர் சிவகுமார், ஒரு வித்தியாசமான ரியாக்சன் கொடுத்தாரே பார்க்கலாம் அதுதான் ஹைலைட்.
ஆடாத நடிகையையும் ஆட வைத்து விடும் லாரன்ஸ்: - நிக்கி கல்ராணியும் ஆடினார்!
ஜி.பி.பிரகாஷ் நடித்த டார்லிங் படம் வந்த நேரத்தில் தமிழில் விரைவில் முன்னணி நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார் அப்பட நாயகி நிக்கி கல்ராணி. ஆனால் அதையடுத்து அவர் ஆதியுடன் நடித்த யாகவராயினும் நா காக்க படம் தோல்வியடைந்து விட்டது. என்றாலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ-2, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இந்த படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றால் தமிழில் மார்க்கெட் உயரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் நிக்கி.

குறிப்பாக, ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை அதிகமாக எதிர்பார்க்கிறாராம் அவர். காரணம், இந்தபடத்தில் பாடல்களுக்கு மட்டுமே வந்து ஆடக்கூடிய வேடம்தான் என்றாலும், பின்னர் காமெடி ஏரியாவிலும் நிக்கியை இறக்கி விட்டார்களாம். அதோடு, தனது படங்களில் எப்போதும் பாடல் காட்சிகளில் ஆடாத நடிகையையும் ஆட வைத்து விடும் லாரன்ஸ், இந்த படத்தில் நிக்கியை ஒரு பாடலில் அதிரடி நடனமாட வைத்திருக்கிறாராம். அதோடு, வித்தியாசமான அசைவுகளில் அவரை ஆட வைத்திருக்கிறாராம் . அந்த நடனம் ரசிகர்களை பெரிதும் கவரும் என்று கூறி வருகிறார் நிக்கி கல்ராணி.
சினிமாவில் சாதிக்க நடிகைகளுக்கு தைரியம் அவசியம்’’ என்று தமன்னா கூறினார்.
‘‘நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறேன். இத்தனை காலமும் சினிமா எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் மட்டும்தான் எனக்குள் இருந்தது. வேறு எதுவும் தெரியாது.
நான் வட இந்திய கலாசாரத்தில் வளர்ந்த பெண். எனக்கு தென்னிந்திய மொழி படங்களில் வாய்ப்பு வந்தன. மொழி, பழக்கவழக்கங்கள் எதுவும் தெரியாமல் அந்த படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். எதற்கும் பயப்படவில்லை. தைரியம் மட்டும் எனக்குள் இருந்தது. அதுதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. அப்போது தெரியாத மொழி என்று நடிக்க தயங்கி இருந்தால் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது.
எனவே நடிகைகள் சாதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு தைரியம் அவசியம். சினிமாவில் வெற்றி தோல்வி பற்றி நான் கவலைப்படுவது இல்லை. கடினமாக உழைக்கிறேன். படம் ஜெயிப்பதும் தோற்பதும் ரசிகர்கள் கையில் இருக்கிறது. நடிகையாக இருப்பதை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். அனுபவங்கள் மூலம் நிறைய விஷயங்களையும் கற்றுக்கொண்டு விட்டேன். இது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை எனக்கு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது’’.
இவ்வாறு தமன்னா கூறினார்
புன்னகை இளவரசி’ சிநேகா... இப்போ மிக மகிழ்ச்சியாக உள்ளார்..!
இங்கனே ஒரு நிலபக்ஷி என்ற மலையாளப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் சிநேகா. அதன்பின் விரும்புகிறேன் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானாலும், திரைக்கு முதலில் வந்தது என்னவளேதான். அதன்பிறகு வந்த ஆனந்தம் படத்தின் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாட்டு பட்டிதொட்டியெங்கும் பரவ, 'யார் இந்தப் பொண்ணு’ என்று தேடத்தொடங்கி பிரபலமாக ஆரம்பித்தார் சிநேகா. அதே2001ல் தெலுங்கில் சிநேகா நடித்து வெளியான ’பிரியமைன நீக்கு’ (தமிழில், ‘காதல் சுகமானது’ என்றப் பெயரில் வெளியானது) சூப்பர் டூப்பர் ஹிட். அதன்பிறகு தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து பாலசந்தரின் பார்த்தாலே பரவசம் உட்பட தமிழிலும் கொடி கட்டிப் பறந்தார்.

சிநேகாவின் ஸ்பெஷாலிட்டியே, ‘Girl-Next-Door' முகம்தான். அதனால்தான் ஆனந்தம் படத்தின் குடும்பப் பாங்கான வேடத்திற்கு அத்தனை பொருத்தமாக இருந்தார். வசீகரா படத்திலும் கொஞ்சம் குறும்பு கலந்த வேடமாகவும் வசீகரித்தார். இவரது சிரிப்பழகினாலேயே ‘புன்னகை இளவரசி’ என்று அழைக்கப்பட்டார். பார்த்திபன் கனவு சிநேகாவின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. இரட்டை வேடம். ஒன்று கட்டுபெட்டியான மனைவி. இன்னொன்றில் மாடர்னான பெண். இரண்டிலும் வேறு வேறு பாணியைக் கடைபிடித்து இரண்டிற்கும் நியாயம் சேர்த்திருப்பார். அஜித், விஜய், கமல் என்று முன்னணி நாயகர்களோடு நடித்தாலும் தனக்கான பாணியை விட்டுக்கொடுக்காமல் நடித்திருப்பார்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஜானகியை மறக்க முடியுமா? பாப்பூ! கல்லூரி டீன் மகள். அதே கல்லூரியில் மருத்துவ மாணவனாக சேர்ந்திருக்கும் கமலை காதலிப்பார். கமல் கல்லூரியை விட்டு வெளியேறிய கடைசி காட்சியில், மைக் பிடித்து Satire-ஆக தன் தந்தையிடம் பேசும் காட்சியில் தன் திறமையை சரியாக வெளிப்படுத்தியிருப்பார். ஆட்டோகிராஃபில் திவ்யாவாக வந்து இவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே ஓர் உற்சாக டானிக் பாடல். சரி, இப்படி ஹோம்லியாக வலம் வந்து கொண்டிருந்தாலும் பவானி ஐபிஎஸ் போன்று வெரைட்டி காட்டவும் தவறவில்லை.
புதுப்பேட்டை படத்திலும் இவர் யாரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பார். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக ‘உன் சமையலறையில்’ படத்தில் பிரகாஷ் ராஜுடன் நடித்த இவர் வேடத்தை வேறெந்த நடிகையும் ஈடு செய்திட முடியாது என்கிற அளவில் நடித்திருப்பார். டான்ஸ் ஷோக்களில் ஜட்ஜாகவும் வந்தார்.
ஒரு நடிகையின் திருமணம், விமரிசையாக ஒளிபரப்பட்டது இவருடையதாகத்தான் இருக்கும். பிரசன்னா -= சிநேகா திருமணத்தை விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பி, ஊர் உலகமே வாழ்த்த, இப்போது விஹான் என்ற மகனுடன் ஹேப்பியாக இருக்கிறார். சினிமாவில் மோஸ்ட் வாண்டட் பரபரப்புடன் இருந்தவர், இப்போது ஹாப்பி ஹோம்மேக்கர். வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு.... இரண்டிலும் சிநேகாவின் டெடிகேஷன்... ஆவ்ஸம்..! ஒன்றிரண்டு விளம்பரங்களில் இவர் நடித்தாலும், பெரிய திரைக்கு இப்போது வருவாரா என்பது சந்தேகமே. ஆனால் அவருக்கான இடம், அப்படியேதான் இருக்கிறது.