சினிமா செய்தித் துளிகள்
இயக்குனருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த ஜனனி அய்யர்!
13 Apr,2016
மே மாதம் வருகிறார் 'தர்மதுரை' விஜயசேதுபதி!
.
விஜயசேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக்கியவர் சீனுராமசாமி. அதையடுத்து அவர்கள் இடம் பொருள் ஏவல் படத்திலும்
இணைந்தனர். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால் மூன்றாவதாகவும் விஜயசேதுபதியை வைத்து தர்மதுரை என்ற படத்தை மின்னல் வேகத்தில் முடித்து விட்டார் சீனுராமசாமி. அதோடு அவருக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டான்கே என மூன்று நடிகைகள் நடிக்க வைத்திருப்பவர், நானும் ரவுடிதான் படத்தில் விஜயசேதுபதியின் அம்மாவாக நடித்த ராதிகாவையே இந்த படத்திலும் நடிக்க வைத்துள்ளார்.
மேலும், கதைப்படி இப்படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார் விஜயசேதுபதி, நகரத்தில் படித்தவர், கிராமத்துக்கு சென்று ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் அவர் மீது மக்கள் மத்தியில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதோடு இடம்பொருள் ஏவல் படம் எப்போது ரிலீசாகிறது என்பதே தெரியாத நிலையில், தர்மதுரை படத்தை மே மாதம் இறுதியில் வெளியிட்டு விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சீனுராமசாமி, ஆடியோ விழாவை மே 5-ந்தேதி நடத்துகிறாராம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பதால் விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்களாம்
60வது படத்துக்காக கெட்டப்பை மாற்றும் விஜய்!
.
'புலி'-யில் சரித்திர கதையில் நடித்த விஜய், இப்போது அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தில் ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைலில் நடித்திருக்கிறார்.
அதோடு பாடல் காட்சிகளை வித்தியாசமான லொகேசன்களில் மாறுபட்ட காஸ்டியூமில் ஷங்கர் படங்களின் பிரமாண்டங்களுக்கு இணையாக படமாக்கியிருக்கும் அட்லி, விஜய்யை பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்க வைத்திருக்கிறார். அதோடு, பேமிலி செண்டிமென்ட் கதையில் உருவாகியிருக்கும் தெறி படத்தில் விஜய் ஆக்சன் அவதாரம் எடுக்கும் காட்சிகளில் வசனங்களும், சண்டை காட்சிகளும் அனல் பறக்கிறதாம். அதனால் தெறி வெளியாகும் தியேட்டர்களில் பொறி பறக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்றைய தினம் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கும் என்கிறார்கள். மேலும், அழகிய தமிழ் மகனைத் தொடர்ந்து இந்த படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருக்கும் நிலையில், இந்த படத்தின் ஒரு கெட்டப்பில் படம் முழுக்க மொட்டைத்தலையில் லேசாக முடி வளர்ந்த கெட்டப்பிலேயே நடிக்கிறாராம் விஜய். நேற்று பூஜையில் கலந்து கொண்ட விஜய், அதே கெட்டப்பில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
அதர்வா ஜோடியாக அனைகா!
.
மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, அதன்பிறகு பாலாவின் பரதேசி
படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் அவர் நடித்த சில படங்கள் சறுக்கியபோதும், ஈட்டி, கணிதன் படங்கள் அதர்வாவை தூக்கிவிட்டன. தற்போது ருக்குமணி வண்டி வருது படத்தில் நடித்து விட்டவர், தனது சொந்த தயாரிப்பில் செம போத ஆகாத என்ற படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு கதாநாயகி கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகைகள் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்பதுதான் அதர்வாவின் ஆசையாக இருந்ததாம். ஆனால் அவர்களை புக் பண்ணினால் பட்ஜெட் எகிறி விடும் என்பதால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவை மாற்றி விட்டாராம். அந்த வகையில், இப்போது செம போத ஆகாத படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மிஷ்டி, அனைகா ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். இதில் அனைகா, வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தவர்
இயக்குனருக்கு, தயாரிப்பாளர் கொடுத்த ஜனனி அய்யர்!
.
அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். தமிழ் நடிகையான இவர் அதையடுத்து தெகிடி, பாகன் படங்களில் நடித்தார்.
அந்த நேரத்தில் அதர்வாவுடன் அவரை இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரவியது. அதனால் தமிழுக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுப்போம் என்று மலையாளத்துக்கு சென்ற ஜனனி அய்யர் அங்கு நான்கு படங்களில் நடித்து விட்டவர் இப்போது மறுபடியும் தொல்லைக்காட்சி, உல்டா ஆகிய படங்கள் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
மேலும், என்னதான் தமிழில் மறுபடியும் நடித்தாலும் மலையாளத்தில் கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மலையாளத்திலும் நடித்து வரும் ஜனனி அய்யர், தமிழில் இதுவரை தான் வெயிட்டான வேடங்களில் நடிக்கவில்லை என்பதால் அழுத்தமான கதாநாயகி வேடங்களை தேடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு புதுமுக இயக்குனர் அவரிடத்தில் சொன்ன கதை அதிகமாக பாதித்து விட்டதாம். கதாநாயகியை சுற்றி பின்னப்பட்ட கதையாம். இந்நிலையில், அந்த படத்தை தயாரிக்க சரியான தயாரிப்பாளர் இல்லை என்று அந்த இயக்குனர் சொன்னபோது, தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளரை அவருக்கு கைகாட்டி விட்டிருக்கிறாம் ஜனனி அய்யர்.
ஓட்டல் தொடங்குகிறார் த்ரிஷா
.
திரைப்பட நடிகைகள் வேறு தொழில் தொடங்குவது சகஜம். பெரும்பாலும் ஈவண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்குவார்கள் பேஷன் கடைகள் திறப்பார்கள். நடிகை த்ரிஷா ஓட்டல் தொடங்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு சாப்பாட்டு ராணி. பிடித்த உணவுகளை தேடி தேடி சென்று சாப்பிடுவேன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டு ஸ்பெஷல் என்ன என்று கேட்டு தேடிச் சென்று சாப்பிடுவேன். இதனால் ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்கான முயற்சியில் தற்போது இறங்கிருக்கிறேன். பணம் இருக்கிறது ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக இதனை செய்யவில்லை உணவுகள் மீது இருக்கும் பிரியத்தின் காரணமாகவே இதனை தொடங்க இருக்கிறேன். இதற்காக ஓட்டல் நிர்வாகம் பற்றிய புத்தகங்களை படித்து வருகிறேன். விதவிதமான உணவுகளை சமைக்கவும் கற்று வருகிறேன். உலகின் பிரபலமான உணவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு செய்வேன் என்கிறார் த்ரிஷா.