சினிமா செய்தித் துளிகள்
மெச்சூரிட்டியான வேடம் தேடும் சாயாசிங்!
07 Apr,2016
ஆரம்பமானது இரண்டாவது இன்னிங்ஸ்
நினைத்ததை சாதித்து விட்ட திருப்தியில் இருக்கிறார், ராகுல் ப்ரீத் சிங். கோலிவுட்டில், முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் கருணைப் பார்வை
படாததால், தெலுங்கு திரையுலகிற்கு மூட்டையை கட்டினர். ராகுலின் அழகில் சொக்கிப் போன தெலுங்கு ஹீரோக்கள், அவரை, வரிசையாக தங்கள் படங்களில், 'புக்' செய்தனர். இதனால், டோலிவுட்டில், 'டாப் - 5' நடிகையரின் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து, எப்படியாவது, கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என, நினைத்த ராகுலுக்கு, இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மிஸ்கின் இயக்கும், துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். 'எவ்வளவு வேண்டுமானாலும், கவர்ச்சி காட்ட ரெடி' என்ற அதிரடி ஸ்டேட்மென்ட்டையும் அவர் விடுத்துள்ளதால், கோலிவுட் முன்னணி நடிகையர் மிரண்டு போயுள்ளனர்
அஜித் ஜோடியாக ஹிந்தி நடிகை.?
'வீரம், வேதாளம்' படங்களுக்குப் பிறகு அஜித் - இயக்குனர்சிவா கூட்டணியில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள படம் மே மாதத்தில் ஆரம்பமாக
உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தின் கதாநாயகி யார் என்று இன்னமும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த முறை இதற்கு முன் நடித்த நடிகைகள் யாரும் வேண்டாம், புதிதாக யாரையாவது அழைத்து வாருங்கள் என இயக்குனர் சிவாவிடம் அஜித் சொல்லிவிட்டாராம். அதனால், இதுவரை தமிழில் நடிக்காமல் வேறு மொழிகளில் நடித்த நடிகைகளை வலை வீசித் தேடி வருகிறார்களாம்.
அதில், சில பிரபலமான ஹிந்தி ஹீரோயின்களும் அடக்கம் என்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்கும் சம்பளம் சில பல கோடிகளில் இருக்கும் என்பதால் கொஞ்சம் பிரபலமில்லாத நாயகிகளைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம். அவர்களில் தற்போதைய நிலவரப்பட கிரீத்தி சனான் என்ற நடிகை தேர்வுப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் என்கிறார்கள். டில்லியைச் சேர்ந்த கிரீத்தி தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக '1 நேநொக்கடைன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். ஹிந்தியில் 'ஹீரோபான்ட்டி, தில்வாலே' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் அஜித்துடன் ஏற்கெனவே ஜோடி சேர்ந்த பல முன்னணி கதாநாயகிகளும் எப்படியாவது இந்தப் படத்தில் நடித்துவிட வலை வீசி வருகிறார்களாம். கடைசியில் அஜித் யாரை டிக் செய்கிறாரோ அவர்தான் கதாநாயகி என்பது ஊரறிந்த விஷயம். அஜித் சொல்வதை இயக்குனர் சிவா அப்படியே கேட்பதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் படத்தை இயக்குகிறார் எனச் சொல்கிறது கோலிவுட் வட்டாரம்.
மெச்சூரிட்டியான வேடம் தேடும் சாயாசிங்!
தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை சாயா சிங். அந்த படத்தில் துறுதுறு பெண்ணாக நடித்திருந்த அவர்,
மன்மதராசா பாடலில் தனுசுடன் போட்டி போட்டு நடனமாடியிருந்தார். அதையடுத்து கவிதை, அருள், ஜெயசூர்யா, வல்லமை தாராயோ, அனந்தபுரத்து வீடு போன்ற படங்களில் நடித்தவர், விஜய்யின் திருப்பாச்சியில் கும்பிட போன தெய்வம், குறுக்கே வந்ததம்மா -என்ற பாடலில் மன்மதராசா பாடலுக்கு இணையாக அதிரடி ஆட்டம போட்டிருந்தார் சாயாசிங்.
மேலும், 2012ம் ஆண்டு அனந்தபுரத்து வீடு படத்தில் வில்லனாக நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட சாயாசிங், இப்போது கேரக்டர் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். இது கதிர்வேலன் காதல், உயிரே உயிரே படங்களைத் தொடர்ந்து உள்குத்து, பட்டினப்பாக்கம் போன்ற படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ளார். அதோடு, கிளாமர் இல்லாமல் என் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியான வேடங்கள் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் சாயாசிங்.
வெயிலுக்கு பயந்து, வெளிநாட்டுக்கு ஓட மாட்டேன்: தமன்னா
பாலில் கோர்த்த முத்துக்களை போல், நிறத்திலும், உடையிலும், பாங்கான பேச்சிலும் நம்மை கவர்ந்து விடுகிறார், அழகு தேவதை தமன்னா. சென்னைக்கு வந்த தமன்னா, தோழா வெற்றியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கதையை கேட்டதும், இந்த படத்தை, 'மிஸ்' பண்ண கூடாதென முடிவு செய்தேன். தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி ஆகிய இருவருடனும், ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, யாருக்கும் கிடைக்காது. இப்போது, படம் வெளியாகி பாராட்டு வரும்போது, சந்தோஷமாக இருக்கிறது.
கார்த்தி பற்றி?
கார்த்தி, ஒரு உதவி இயக்குனர் போல், இந்த படத்துக்கான எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தார். இயக்குனர் வம்சிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது, நாகார்ஜுனா சாருக்கு, 'டப்பிங்' சொல்லிக் கொடுப்பது, இப்படி நிறைய வேலைகள் பார்த்தார்.
திருமணத்துக்கு பின், கார்த்தியிடம் எதுவும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
அவருடைய ரோலில் எப்போதும் கவனம் செலுத்துவார். முதல் முறையாக இந்த படத்துக்காக தெலுங்கு பேச வேண்டியிருந்ததால், அதற்காக ரொம்பவே மெனக்கெட்டார். எந்த ரோல் கொடுத்தாலும், அதற்கேற்ப, தன்னை மாற்றிக் கொள்வதில், கார்த்திக்கு நிகர், வேறு யாருமில்லை. திருமணத்துக்கு பின், அவரது நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை; ஆனால், அவர் நடிப்பில் முன்னேற்றம் உள்ளது. தமன்னா, பாகுபலிக்கு பின், ரொம்ப மாறிட்டாங்க போல. அப்படி எல்லாம் எதுவுமில்லை. நான், நானாகவே இருக்கிறேன்; எந்த மாற்றமும் இல்லை. பாகுபலிக்கு பின், கதைகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளேன். என் கேரக்டர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.
ப்போது, சினிமாவில் போட்டி அதிகமாகி விட்டதே?
தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிசியாகவே இருக்கிறேன். போட்டி பலமாக இருந்தாலும்,திறமை இருந்தால், நம்மை, வாய்ப்பு தேடி வரும்.
சவாலான கேரக்டர்களில் நடிக்க ஆசை உள்ளதா?
எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புமே சவாலாக தான் உள்ளது. பாகுபலி, தோழா ஆகிய படங்களை தொடர்ந்து, விஜயசேதுபதி ஜோடியாக நடிக்கும் தர்மதுரையிலும் எனக்கு சவாலான ரோல் தான். இந்த படத்தில், என் ரோல், ரொம்ப புதிதாக இருக்கும்; மற்றபடி, எந்தவிதமான இமேஜ் வட்டத்துக்குள்ளும் சிக்க விரும்பவில்லை.
யாருடன் ஜோடியாக நடிக்க விருப்பம்?
விஷால், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் இதுவரை நடித்தது இல்லை. அவர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால், கண்டிப்பாக நடிப்பேன்.
கோடை வெயிலை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
வெயிலுக்கு பயந்து, வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு சென்னையில் தான், 'டேரா!' பிரபுதேவாவுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் தான் நடக்கிறது. வறுத்து எடுக்கும் வெயிலை பொருட்படுத்தாது, முழு வீச்சில் நடிக்க தயாராகிவிட்டேன்.
உங்க நகைக்கடை பிசினஸ் எப்படி போகுது?
என் அப்பா, 'ஆன்லைன்' மூலமாக இந்த பிசினஸ் செய்கிறார். அவ்வப்போது, அவருக்கு நான் உதவுகிறேன். இப்போதைக்கு, மும்பையை மையமாக வைத்து செயல்படுகிறோம். மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.