சினிமா செய்தித் துளிகள்
காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு குடும்ப பெண்ணாக நடிப்பது நிறைவை தருகிறது: - சமந்தா
04 Apr,2016
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா!
சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்ற இடத்திற்கு வந்து விட்டார். இவர் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் முடித்த கையோடு அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.இப்படத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் செய்துள்ளார்களாம்.

கதையில் தனக்கு பெரிய இடம் இல்லாததால் நடிக்க மறுத்த ஹன்சிகா!
ஹன்சிகா இதுநாள் வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி விட்டார். ஆனால், இனி வரும் படங்களில் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளாராம்.இதை நாம் முன்பே நம் தளத்தில் கூறியிருந்தோம். இதை நிரூபிக்கும் பொருட்டும் ஒரு செய்தி வந்துள்ளது.ஹன்சிகாவை சமீபத்தில் ஒரு தெலுங்கு இயக்குனர் சந்தித்து கதை கூறினாராம், படத்தில் பெரிய ஹீரோ இருந்தாலும், கதையில் தனக்கு பெரிய இடம் இல்லாததால் நடிக்க மறுத்து விட்டாராம்.
ஹன்சிகா இதுநாள் வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி விட்டார். ஆனால், இனி வரும் படங்களில் கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவுள்ளாராம்.இதை நாம் முன்பே நம் தளத்தில் கூறியிருந்தோம். இதை நிரூபிக்கும் பொருட்டும் ஒரு செய்தி வந்துள்ளது.ஹன்சிகாவை சமீபத்தில் ஒரு தெலுங்கு இயக்குனர் சந்தித்து கதை கூறினாராம், படத்தில் பெரிய ஹீரோ இருந்தாலும், கதையில் தனக்கு பெரிய இடம் இல்லாததால் நடிக்க மறுத்து விட்டாராம்.
காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு குடும்ப பெண்ணாக நடிப்பது நிறைவை தருகிறது: - சமந்தா
கிளாமர் வேடங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரங்கள் அவருக்கு மனநிறைவை தருவதாக கூறியிருக்கிறார்.தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. பெரும்பாலும் காதல் கதைகளில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக பிரபல நாயகர்களின் மனைவியாக குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறார்.

தங்க மகன் படத்தில் அவரது மனைவியாக நடித்தார். இப்போது தெறி படத்தில் விஜய் மனைவியாகவும், நைனிகாவின் அம்மாவாகவும் நடித்திருக்கிறார். இது பற்றி சமந்தாவிடம் கேட்ட போது...காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு குடும்ப பெண்ணாக நடிப்பது நிறைவை தருகிறது. இதில் அன்பு, பாசம் கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்கும் போது திருப்தியாக இருக்கிறது. நடிப்பின் அனைத்து கட்டத்துக்கும் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.நான் திரைப்பட நடிகை ஆகி 6 வருடங்கள் ஓடிவிட்டன. இனி வித்தியாசமான வேடங்களை தேடிப்பிடித்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தான் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறேன். நடிப்பு திறமையை காட்டும் நல்ல வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். அதற்கு ஏற்ப என்னை தயார் படுத்தி வருகிறேன் என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா மீது பட அதிபர் புகார்
நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்புக்கு வர மறுத்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என்று படஅதிபர் புகார் கூறினார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா மீது பட அதிபர் புகார்
நடிகை ஐஸ்வர்யா தத்தா
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பாயும் புலி, ஆறாது சினம் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது துருவா ஜோடியாக ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தை ராகேஷ் இயக்குகிறார். மதியழகன், ரம்யா, பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டனர். இதற்காக படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பில் திரண்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா தத்தா மட்டும் வரவில்லை. இதனால் படப்பிடிப்பை நடத்தமுடியாமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா கூறும்போது, ‘‘ஐஸ்வர்யா தத்தாவுக்கு கொடுக்க வேண்டிய முழு பணத்தையும் கொடுத்து விட்டோம். அந்த பணத்தை அவருடைய மானேஜர் ஷான் வாங்கிச்சென்றார்.
ஆனால் திட்டமிட்டபடி ஐஸ்வர்யா படப்பிடிப்புக்கு வரவில்லை. அவர் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடத்துக்கான வாடகை, துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கான சம்பளம் என்று ரூ.3 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா தத்தா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்படும். போலீசிலும் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.