சினிமா செய்தித் துளிகள்
தான் நடிக்கும் திரைப்படங்களை தான் பார்ப்பதில்லை
29 Mar,2016
கார்த்தி-தமன்னாவின் வெற்றிக்கூட்டணி
கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்த பையா, சிறுத்தை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகின. அந்த படங்களில் அவர்களின்
கெமிஸ்ட்ரி பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. அதோடு, பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் அதிக தாராளம் காட்டி நடித்திருந்தார் தமன்னா. குறிப்பாக, பையா படத்தில் அவர்கள் நடனமாடிய அடடா மழைடா அடமழைடா -என்ற பாடல் இப்போது வரை இளவட்ட ரசிகர்களின் பேவரிட் பாடலாக இருந்து வருகிறது.
இப்படி நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டானபோதும் அதையடுத்து கார்த்தி-தமன்னா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், தெலுங்குப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜூனா-கார்த்தி நடித்துள்ள தோழா படம் மூலம் மீண்டும் கார்த்தியுடன் இணைந்துள்ளார் தமன்னா. அந்த வகையில், முதல் இரண்டு படங்களையும் போலவே இந்த படமும் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளில் மட்டும் 2.32 கோடி வசூலித்துள்ளது தோழா படம். இதன்மூலம் மூன்றாவது முறையாகவும் தாங்கள் வெற்றிக்கூட்டணி என்பதை கார்த்தியும், தமன்னாவும் நிரூபித்துள்ளனர்
தனி ஒருத்தியாக மாளவிகா மேனன்
விழா படத்தில் அறிமுகமான மாளவிகா மேனன். நிஜமா நிழலா என்ற படத்தில் தனி ஒருத்தியாக நடிக்கிறார். அதாவது ஹீரோயின் சப்ஜெக்டில்
நடிக்கிறார். விழா படத்திற்கு முன்பு மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த மாளவிகா மேனன் தமிழில் ஒப்பந்தமான முதல் ஹீரோயின் படம் இதுதான். 9வது வகுப்பு படிக்கும்போது இந்தப் படத்தில் நடித்தார். இப்போது பிளஸ்-2 வையும் முடித்து விட்டார். கத்துக்குட்டி, பிரம்மன், உள்பட சில படங்களிலும் நடித்து விட்டார்.
நிஜமா நிழலா படத்தில் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறார். அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் வரும் பிரச்சினைகளிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது கதை. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும், அதை வைத்து குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற ஒரு கும்பல் அவரை சிக்க வைக்கிறது. அந்த சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காட்டுகிறது படம். அகில்குமார் என்ற புதுமுகம் ஜோடியாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.வி.சீனிவாசன் இயக்குகிறார். சேகர் மூவீஸ் சார்பில் எஸ்.சேகர் தயாரிக்கிறார்.
ஆபாச பட நடிகை என்று என்னை ஒதுக்குகிறார்கள்: சன்னிலியோன்
‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சன்னிலியோன். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சன்னிலியோன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதனால் அவர் படங்களில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆடைகளை குறைத்து ஆபாசமாக நடிப்பதாக அவர் மீது போலீசில் புகார்களும் குவிந்தன.
முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோனை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில் ஷாருக்கான் படத்தில் நடிக்க சன்னிலியோனுக்கு வாய்ப்பு வந்து உள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஜீனத் அமன் நடித்து 1989-ல் வெளியான ‘குர்பானி’ படத்தில் இடம் பெற்ற ‘லைலா ஓ லைலா’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாட்டுக்குத்தான் இதில் அவர் ஆடுகிறார்.
ஷாருக்கான் படத்தில் நடிப்பது பற்றி சன்னிலியோன் கூறியதாவது;-
‘‘நான் ஷாருக்கானின் தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாகவே இருந்தது. ஆனால் என்னை ஆபாச பட நடிகை என்று பலரும் ஒதுகுகிறார்கள். பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர்களும் கண்டு கொள்ளவில்லை. இதற்காக நான் துவண்டு விடவில்லை.
தற்போது ஷாருக்கானின் ‘ரயீஸ்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் அவருடன் நடனம் ஆட எனக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கனவு உலகில் மிதப்பது போல் உணர்கிறேன். என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொள்ளவும் செய்கிறேன். ஷாருக்கானுடன் சேர்ந்து நடனம் ஆடப்போகும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
தான் நடிக்கும் திரைப்படங்களை தான் பார்ப்பதில்லை என நடிகை கரீனா கபூர் கவலை தெரிவிப்பு!
தான் நடிக்கும் திரைப்படங்களை தான் பார்ப்பதில்லை என பொலிவூட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். 35 வயதான கரீனா கபூர் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெற்றிகரமான பல படங்களில் நடித்த பொலிவூட்டின் முன்னிலை நடிகைகளில் ஒருவர். ஆனால், தனது திரைப்படங்களை பார்ப்பதற்கு தான் விரும்பவில்லை செவ்வியொன்றில் அவர் கூறுகிறார். “திரைப்படங்களில் உங்களைப் பார்க்கும்போது உங்கள் பிரதிபலிப்பு எப்படியிருக்கும்?” என கரீனா கபூரிடம் கேட்கப்பட்டது.

உருண்டு புரண்டாவது படத்தை ஓட வைக்க - 'லவ்' என்ற விஷயத்தை பற்ற வைத்த அஞ்சலி!
‘எங்கேயும் எப்போதும்’ காலத்திலிருந்தே அஞ்சலியும், ஜெய்யும் காதலாகி கசிந்துருகியதாக வந்த தகவலை அப்போது மறுத்து வந்த இருவரும் இப்போது ஒப்புக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. மார்க்கெட் லெவலில் இருவரின் பொசிஷானுமே இப்போது பூஜ்ஜியமாம். எந்த காலத்திலோ துவங்கப்பட்ட புகழ் படம் இப்போதுதான் ரிலீஸ் ஆகிறது. இது ஓடினால்தான் வாழ முடியும். எதை சொல்லியாவது, எப்படியாவது உருண்டு புரண்டாவது படத்தை ஓட வைக்க வேண்டுமே? அதனால்தான் தங்களுக்குள் லவ் என்ற விஷயத்தை தங்கள் வாயாலேயே பற்ற வைக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.