சினிமா செய்தித் துளிகள்
தமன்னாவின் ரொமான்ஸை ரசிக்கும் சமந்தா!
29 Mar,2016
தமன்னாவின் ரொமான்ஸை ரசிக்கும் சமந்தா!
சமகாலத்து நடிகைகளான தமன்னா-சமந்தா ஆகிய இருவருமே தமிழ், தெலுங்கு படங்களில்தான் அதிகமாக நடித்து வருகின்றனர். இதனால் அவர்
களுக்கிடையே தொழில் போட்டி இருப்பது போன்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சமந்தா கூறுகையில், சினிமாவில் என்னைப்போன்று எத்தனையோ நடிகைகள் நடித்து வருகின்றனர். ஆனபோதும் நான் யாரையும் எனக்கு போட்டியாக நினைப்பதே இல்லை. இன்னொருவரின் படத்தை நான் அபகரிக்க வேண்டும் என்றும் நினைத்ததே இல்லை. என்னைத்தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
மேலும், இப்போதைய நடிகைகளில் என்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்த ஒரே நடிகை தமன்னா மட்டுமே. காரணம், அவர் ஹாட் ஒர்க் செய்வார். டெடிகேஷன் உள்ள ஆர்ட்டிஸ்ட். நடிப்பு என்று வந்து விட்டால் குறித்த நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார். அந்த அளவுக்கு தொழிலை மதிப்பார். இரவு பகல் என படப்பிடிப்பு நடந்தாலும் சளைக்காமல் நடிக்கக்கூடியவர். இதற்கெல்லாம் மேலாக இந்தி பெண்ணான அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசுகிறார். அது பாராட்ட வேண்டிய விசயம் என்று தமன்னாவைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகும் சமந்தா, அவரது நடிப்பை எடுத்துக்கொண்டால் அவர் செய்யும் ரொமான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.
பேயாக நடிக்கும் ரெஜினா!
கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் ஆகிய படங்களில் நடித்தவர் ரெஜினா. தெலுங்கு நடிகையான இவர், தற்போது தமிழில் நெஞ்சம்
மறப்பதில்லை, மாநகரம், ராஜதந்திரம்-2 ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வந்த ரெஜினா, தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்கள் புக்காகியிருப்பதால் இங்கு தற்போது கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
இதில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் ரெஜினா, அட்டகத்தி நந்திதா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். ஹாரர் கதையில் உருவாகும் இப்படத்தில் ரெஜினா பேய் வேடத்தில் நடிக்கிறாராம். அதற்காக ஒரு பாடல் காட்சிகளில் அவரை பல கெட் டப்புகளில் காண்பிக்கிறார்களாம். அந்த ஒரு பாடலில் மட்டும் 6 நாட்கள் நடித்திருக்கிறாராம் ரெஜினா. மேலும், தெலுங்கில் ரெஜினாவுக்கு நல்ல மார்க் கெட் இருப்பதால் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பேய் வேடத்தை கொடுத்திருக்கிறாராம் செல்வராகவன்.
தமிழுக்காக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்! - மியா ஜார்ஜ்
மலையாளத்தில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மியா ஜார்ஜ். அதையடுத்து இன்று
நேற்று நாளை படத்திலும் நடித்த மியா ஜார்ஜ், ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம், எமன் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் சிங்கிள் கதாநாயகியாக அழுத்தமான கதாபாத்திரங்கள் நடித்து வருவதாக சொல்லும் மியா ஜார்ஜ், மலையாள படங்களில் நடித்து வந்ததில் இருந்து மாறி தமிழுக்காக தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருவதாகவும் கூறுகிறார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், மலையாளத்தில் நான் முழுக்க முழுக்க பர்பாமென்ஸ் நடிகையாகத்தான் இருந்தேன். எந்த படத்திலும் கிளாமர் என்கிற வார்த் தையை என்னிடம் டைரக்டர்கள் சொன்னதில்லை. ஆனால் தமிழுக்கு வந்த துமே கிளாமராக சில காட்சிகளிலாவது நடித்தாக வேண்டும் என்று டைரக்டர் கள் கூறி விட்டார்கள். அதனால் வேறு வழியில்லாமல் என்னை தமிழுக்காக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறேன் என்கிறார்.
மேலும், விரைவில் ஒருநாள் கூத்து திரைக்கு வரவிருக்கும் நிலையில், சசிகுமாருடன் நடிக்கும் வெற்றி வேல் படத்தில் மியா ஜார்ஜ் 25 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறார்
தோழா' வெற்றி, சோகத்தில் ஸ்ருதிஹாசன்
'தோழா' படம் நிச்சய வெற்றி என தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். படம் சம்பந்தப்பட்ட அனைவரும்
, படத்தை வாங்கியவர்களும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர் மட்டும் சோகத்தில் இருக்கிறார், அவர்தான் ஸ்ருதிஹாசன். இப்போது தமன்னா நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் ஸ்ருதிஹாசன். சில நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்குச் சென்ற ஸ்ருதிஹாசன், திடீரென படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
அதன் பின் தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விஷயம் பஞ்சாயத்துக்குச் சென்றது. இரு தரப்பிற்கும் சுமூகமான முடிவைக் கொடுத்து பிரச்சனையை தீர்த்து வைத்தார்கள். தற்போது படம் தமிழ், தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி என்ற செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து, ஸ்ருதிஹாசன் சோகத்தில் ஆழ்ந்துவிட்டாராம். ஆரம்பத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்காது என்று நினைத்துதான் ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலகியதாகச் சொன்னார்கள். ஆனால், தமன்னாவின் கதாபாத்திரமும், அவருடைய ஆடைகளும் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துவிட்டன. தனக்குக் கிடைக்க வேண்டிய புகழ் தன்னுடைய அவசரத்தால் போய்விட்டதே என தற்போது ஸ்ருதி வருந்துகிறாராம். இரண்டு மொழிகளிலும் வெற்றி என்றால் சோகம் வராமல் என்ன செய்யும் ?
ஆஸ்கார் விருது வென்றதை போல் உணர்கிறேன்: இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் கருத்து
63-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் நேற்று(திங்கட்கிழமை) மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 'இறுதிச்சுற்று' படத்தில் நடித்ததிற்காக சிறப்பு தேசிய விருது (ஸ்பெஷல் ஜூரி) ரித்திகா சிங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய விருது கிடைத்திருப்பதை ஆஸ்கர் விருது கிடைத்தது போல் உணர்வதாக ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ரித்திகா சிங் பேசுகையில், "வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். ஆஸ்கர் விருது வென்றிருப்பது போன்று உணர்கிறேன். 'இறுதிச்சுற்று' மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் படத்திலேயே இப்படி ஒரு விருது கிடைக்கப் பெறுவது ரொம்ப பெரிய விஷயம். இன்னும் நன்றாக செயல்படுவதற்கான ஒரு ஊக்கமாக இதனை கருதுகிறேன்” என்று கூறினார்.
இதேபோல், விருது குறித்து ரித்திகா சிங் தனது பேஸ் புக் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:-
கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் இது போன்று எப்போது அழுததாக எனக்கு நினைவில்லை. என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான தருணம் இது. இந்த விருதுக்கு தகுதி பெறுவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஏனெனில் நான் படத்தில் சொந்த குரலில் கூட பேசவில்லை. என் அன்பிற்குரிய உமா மகேஸ்வரி தான் எனக்காக டப்பிங் செய்தார். இந்த விருதுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்த வாழ்க்கையை எனக்கு அளித்த எனது தாய், தந்தைக்கு நன்றி. நடிக்கக் காரணமாக இருந்த இயக்குநர் சுதா, தயாரிப்பாளர் சசி மற்றும் ராஜ்குமார் ஹிரானி, மாதவன் அனைவருக்கும் நன்றி. இந்த அழகான உள்ளங்கள் தான் எனக்கு முதலில் இந்த வாய்ப்பை தந்தனர். எனக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.