சினிமா செய்தித் துளிகள்
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நமீதா
26 Mar,2016
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நமீதா
.
குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தார். எங்கள் அண்ணா முதல் படம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்
பிறகு இங்கிலீஸ்காரன், சாணக்யா, ஏய், பம்பரகண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, வியாபாரி, நான் அவனில்லை, உள்பட பல படங்களில் நடித்தார். நமீதா படங்கள் அனைத்திலும் அவரது கவர்ச்சிதான் பிரதானமாக காட்டப்பட்டது. நடிப்பதற்கு வாய்ப்பளித்து எந்த படமும் அமையவில்லை.
ஹார்மோன் பிரச்னை காரணமாக அவர் உடல் எடை திடீரென கூடியதால். அவரால் இனி கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று சினிமா அவரை ஓரம் கட்ட ஆரம்பித்தது. பில்லா, ஜெகன்மோகினி, இந்திரவிழா படங்களில் குண்டு உடம்புடன் நடித்து பார்த்தார் அதுவும் எடுபடவில்லை. வருடத்திற்கு 5 அல்லது 6 படகளில் நடித்து வந்த நமீதாவுக்கு 2011க்கு பிறகு படகள் குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வாய்ப்பே இல்லாமல் இருந்தார். கடை திறப்பு விழா, டி.வி ஷோக்களில் கலந்து கொள்வது, சினிமா விழாக்களில் கவர்ச்சி உடையில் வந்து போஸ் கொடுப்பது, மச்சான் என்று ரசிகர்ளை அழைத்து இப்படி தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டார்.
என்றாலும் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தார். அறுவை சிகிச்சை, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்றி என பல வழிகளில் முயற்சி செய்து தற்போது 90 கிலோவிலிருந்து 70 கிலோவாக உடல் எடையை குறைத்திருக்கிறார்.
உடல் எடை குறைத்த பிறகுதான் பொட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது. மேலும் வாய்ப்புகளை பெறும் வகையில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பாருங்கள் என்று ஒப்பீட்டு படங்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீதிவ்யாவுக்கு ஷாக் கொடுத்த மலையாள நடிகைகள்!
.
ஈட்டி, பெங்களூர் நாட்கள் படங்களுக்குப்பிறகு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில், பென்சில், காஷ்மோரா, மருது ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்
கொண்டிருக்கின்றன. இதில், காஷ்மோராவில் நயன்தாராவும் நாயகியாக நடித்துள்ளார். இருப்பினும், ஸ்ரீதிவ்யாவுக்கும் அழுத்தமான வேடம்தானாம். அதோடு, மருதுவில் கிராமத்து நாயகியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்று கலக்கியிருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.
அதேசமயம், இதற்கடுத்து நடிப்பதற்கு அவர் சில தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால், முதலில் அவருக்கு சான்ஸ் தருவதாக சொன்ன அவர்கள், இப்போது மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் பிரேமம் நாயகிகளான சாய்பல்லவி, மடோனா, அனுபமா போன்ற நடிகைகள் பக்கம் திரும்பி நிற்கிறார்களாம். குறிப்பாக, மேற்படி நடிககைள் சம்பள விசயத்தில் எகிறி பேசாததும் இதற்கு முக்கிய காரணமாம். ஆக, இந்த புதுவரவு நடிகைகளை எதிர்கொண்டு தான் மார்க்கெட்டில் நிற்க வேண்டுமென்றால் சம்பளத்தை குறைத்தாக வேண்டும் என்று முடிவு செய்துள்ள ஸ்ரீதிவ்யா, சில தயாரிப்பாளர்களிடம் தான் சம்பளத்தை குறைத்திருக்கும் விசயத்தை சொல்லி அனுப்பி, தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்.
டாக்டராக நடிக்கவுள்ள சாய் பல்லவி!
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘பிரேமம்’. இதில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது. மேலும் தற்போது சாய் பல்லவிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.இவர் அடுத்ததாக மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மலர் டீச்சராக ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி இந்த படத்தில் டாக்டராக நடிக்க இருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் சாய் பல்லவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாயகனாக கார்த்தி நடிக்கிறார். இவர் பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
மீண்டும் நீச்சல் உடைக்கு மாறுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை: - நயன்தாரா
தென் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடித்திருக்கும் நாயகி நயன்தாரா. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா நீச்சல் உடையில் நடிக்கப்போவதாகவும், அதற்கு கூடுதல் தொகை கேட்டதாகவும் ஒரு தகவல் பரவியது.இதற்கு நயன்தாரா அளித்த பதிலில், நான் மீண்டும் நீச்சல் உடையில் நடிக்கப்போவதாக தகவல் பரவி உள்ளது. அப்படி நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை.நானும் அதை விரும்பவில்லை. ஆரம்பத்தில் அது போன்ற கவர்ச்சி உடையில் நடித்தேன். இனி நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்.

உடலை காட்டும் உடை அணிந்து கவர்ச்சி காட்டுவதை விட, கண்களால் தான் கவர்ச்சியை வெளிப்படுத்த முடியும் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். உடைகளின் அளவை குறைத்து கவர்ச்சி காட்டினாலும் கண்களில் அதை பிரதிபலிக்கும்போது தான் இந்த கவர்ச்சியில் ஈர்ப்பு இருக்கும். எனவே நான் மீண்டும் நீச்சல் உடைக்கு மாறுவேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை என்றார்.
பேய் படத்தில் நடிக்க இருக்கும் ஜெய்!
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மணிமாறன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை 70 எம் எம் நிறுவனத்தை சேர்ந்த டி.என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு பிண்ணனி கொண்டுத் தயாரிக்கப்படும் இந்தப் படம் கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் கவனிக்க இருக்கிறார். இசையமைப்பாளர் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.