சினிமா செய்தித் துளிகள்
தோழா படம் சந்தோஷத்தில் தமன்னா
24 Mar,2016
தோழா படம் சந்தோஷத்தில் தமன்னா
.
தோழா படத்தின் ஹீரோயின், தமன்னா, ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, நாகார்ஜுனா, அடிக்கடி,
தமன்னாவிடம் வந்து, 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பை விட, உங்க அழகு தான், எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு' என, ரொமான்ஸ் விட்டாராம். தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகார்ஜுனா, தன்னுடைய அழகை பாராட்டியதில் கிறங்கி போய் விட்டாராம் தமன்னா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், தமன்னாவே இந்த விஷயத்தை கூறினார். ஆனாலும், படத்தில், தனக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்தி, படப்பிடிப்பின்போது, தன்னை கண்டுகொள்ளவில்லை என, வருத்தப்படவும் செய்தார். தோழாவுக்கு அடுத்ததாக, விஜயசேதுபதி ஜோடியாக நடிக்கும் தர்மதுரை படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் தமன்னா. நீண்ட நாட்களுக்கு பின், கிராமத்தை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடிப்பது தான், இதற்கு காரணம்.
போட்டியில் வெல்லப் போவது நயன்தாராவா ? அனுஷ்காவா ?
.
தமிழ்நாட்டில் எப்படி ரஜினிகாந்த்தோ, அப்படித்தான் தெலுங்கில் சிரஞ்சீவியும். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு மீண்டும் ஒரு படத்தில்
நடிக்க முடிவெடுத்தார். எவ்வளவோ கதைகளைக் கேட்டு திருப்தியடையாத சிரஞ்சீவி கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தை ரீமேக் செய்து நடிக்க முடிவெடுத்தார். படத்திற்கான கதை விவாதம் தெலுங்குக்கு ஏற்றபடி நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆனாலும், படத்தின் நாயகி யார் என்பது குறித்து இதுவரை முடிவெடுக்காமலே இருக்கிறார்கள்.
தற்போது முன்னணியில் இருக்கும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோரில் ஒருவரை ஜோடியாகப் போட முடிவெடுத்தார்களாம். ஆனால், சிரஞ்சீவி காஜல் அகர்வாலை முதல் தேர்விலேயே வேண்டாமென்று சொல்லிவிட்டாராம். அவருடைய மகன் ராம் சரணுடன் ஏற்கெனவே சில படங்களிலும் தற்போது தம்பி பவன் கல்யாணுடனும் நடித்து வருவதாலும் காஜலை வேண்டாமென்று சொல்லிவிட்டாராம்.
இயக்குனர் தரப்பிலிருந்து அனுஷ்காவைக் கதாநாயகியாகப் போட்டால் 'பாகுபலி' புகழும் சேர்ந்து இந்தப் படத்திற்குக் கிடைக்கும் என்கிறாராம். ஆனால், சிரஞ்சீவியோ நயன்தாராவை நாயகியாகப் போடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம். அதனால், நயன்தாரா கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கவும் தயாராகி வருகிறார்களாம். அனுஷ்கா, நயன்தாரா இருவரில் யாருடைய தேதி கிடைக்கிறதோ அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
2.ஓ வில் பறந்து பறந்து சண்டை போடும் எமிஜாக்சன்!
.
மதராசப்பட்டினம் படத்துக்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்டவர் எமிஜாக்சன். லண்டன் நடிகையான இவர், முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை
பதித்ததால், அடுத்தடுத்து தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி என பல படங்களில் நடித்து விட்டவர், தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி நார்மலான கதாநாயகியாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆக்சன் ரோலில் நடிக்கிறாராம்.கதைப்படி, டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிரப்ட் என்கிற கதாபாத்திரத்தை தழுவி இவரது வேடம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அதோடு, சேஸிங் காட்சிகள் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளதாம். அந்த காட்சியில் ஹாலிவுட் பட பாணியில் பறந்து பறந்து சண்டை போடப்போகிறாராம் எமி. இதற்கான ஒத்திகையை ஏற்கனவே நடத்தி விட்ட ஷங்கர், தற்போது டில்லியில் ரஜினி-அக்சய்குமார் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியை படமாக்கி வருபவர், அதையடுத்து எமி சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சியும் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
ரஜினி-விஜய்-சூர்யாவினால் பின்வாங்கிய 3 ஹீரோக்கள்!
இப்போதெல்லாம் படமெடுப்பதைவிட படங்களை சரியான நேரத்தில் சரியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதே தயாரிப்பாளர்களுக்கு பெரிய
போராட்டமாக உள்ளது. அதிலும், முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசாகிறது என்றால் அவர்களுக்குத்தான் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கிறது. இரண்டாம், மூன்றாம் தட்டு ஹீரோக்களின் படங்களுக்கு அந்த தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதன்காரணமாக மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே மற்ற நடிகர்களின் படங்கள் பின்வாங்கி விடுகின்றன.
அந்த வகையில், சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா, ஜீவாவின் திருநாள், விஜயசேதுபதியின் இறைவி ஆகிய படங்கள் திரைக்கு வரத்தயாராகி விட்டன. ஆனால் ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படங்கள் இப்போது மே மாதம் 27-ந்தேதிக்கு சென்று விட்டன. காரணம், ஏப்ரல், மே மாதங்களில் ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. இதனால் அவர்களுக்கு அதிக பட்ச தியேட்டர்கள் கிடைத்து விடும் என்பதால், சிம்பு, ஜீவா, விஜயசேதுபதியின் படங்களை ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மே மாதம் இறுதியில் வெளியிட அப்படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்
பைலட் கார்த்தி, டாக்டர் சாய் பல்லவி
.
மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் கார்த்தி, 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான்தான் படத்திற்கு இசையமைப்பாளர். இதுவரை இவை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி தற்போது 'காஷ்மோரா' என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மணிரத்னம் படத்தில் கலந்து கொள்வார் என்கிறார்கள். மணிரத்னத்திடம் இதற்கு முன் உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கார்த்தி, பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். நிஜ வாழ்விலும் சாய் பல்லவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான காதல் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.