ஃபரீதா இரண்டாமிடம், மூன்றாமிடம் ராஜகணபதி..
விஜய் டி.வி நடத்திய சூப்பர் சிங்கர் பாடல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆனந்த் அரவிந்த் அக்ஷன் முதலிடம் பிடித்தார், இவருக்குக் கிடைத்த வாக்குகள் 6.79.619 ஆகும் இரண்டாவது இடம் பிடித்த ஃபரீதாவுக்குக் கிடைத்த வாக்குகள் 4.80.707 ஆகும்.
மூன்றாம் இடம் பிடித்த ராஜகணபதி மத்தியஸ்த்தர்கள் வழங்கிய புள்ளியில் 746 புள்ளிகள் பெற்று மத்தியஸ்தர் தேர்வில் முன்னணி இடம் பிடித்தார், இருப்பினும் போட்டியில் இவர் பெற்றது மூன்றாமிடமாகும்.
முதலிடம் பெற்ற ஆனந்த் அரவிந்த் அக்ஷனுக்கு 70 லட்சம் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்படும், பரீதாவுக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்பட்டது, ராஜகணபதி 10 லட்சம் ரூபா பரிசு பெற்றார்.
நாலாவது இடம் பெற்ற லக்சுமிக்கு மூன்று இலட்சம் வழங்கப்பட்டது, ஐந்தாவது இடம் பிடித்த சியாத்திற்கு 2 லட்சம் ரூபா பரிசு கிடைத்தது.
முதல் இரண்டு பரிசு பெற்றவர்களுக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண் தனது இசையமைப்பில் பாட வாய்ப்பளிப்பதாக மேடையில் வைத்து தெரிவித்தார்.
வெற்றி பெற்ற அரவிந்த் ஆனந்த் அக்ஷயன் உலகம் முழுவதும் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறினார், அவருடைய பெற்றோரும் மேடைக்கு வந்து வாழ்த்துரைத்தார்கள்.
மிகவும் பிரமாண்டமான மேடையில் போட்டி நடைபெற்றாலும் எண்ணற்ற சிறப்புப் பாடகர்கள் பாடல்களை பாடியது, நடனமாடியது என்று ஆர்பாட்டமாக நிகழ்ச்சி நடைபெற்றது.
தொலைக்காட்சியில் மோசமான விளம்பரங்களை போட்டு நிகழ்ச்சியின் தரத்தை நாலாந்தரத்திற்கு பின்தங்க வைத்திருந்தார்கள்.
இம்முறை திரைப்பிரபலங்களை தவிர்த்திருந்தார்கள் சென்ற தடவை தனுஷ் – சிவகார்த்திகேயன் ஆடிய கூத்துக்களால் நொந்து போயிருந்ததை இந்தத் தடவை செயலால் உணர்த்தியுள்ளார்கள்.
பிழைப்பை குறியாகக் கொண்டு தரத்தை கோட்டை விட்டிருந்தார்கள்.. போட்டியாளர்களுக்கு கொடுத்த வாய்ப்புக்கள் குறைவு.
அதைவிட மோசம் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக விளம்பரங்களை போட்டு பார்வையாளர்களை உறக்கத்தில் ஆழ்த்தினார்கள்.
முந்தய சூப்ப சிங்கர்களுடன் ஒப்பிட்டால் இதனுடைய தரம் போதியதாக அமையவில்லை என்றே கூறவேண்டும்.