
ஜெய் சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் “புகழ்”
விவேக் சிவா – மெர்வின் சாலமன் இரட்டையர் இசையில், ஜி.பி.வெங்கடேஷின் படத்தொகுப்பில், ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் ரேடியன் ஈ மீடியா வருண் மணியன் வழங்க, மணிமாறனின் எழுத்து, இயக்கத்தில், சுஷாந்த் பிரசாத் தயாரித்திருக்கும் திரைப்பட மான புகழ் இப்படக் குழுவினருக்கு எத்தகைய புகழ் தேடித தரும்.. பார்ப்போம்ஸ
வாலாஜாநகராட்சி மார்கெட்டில் கடை எடுத்தும் ஹோல்சேல் பூ வியாபாரம், செய்கின்றனர் சகோதரர்களான கருணாஸும், ஜெய்யும் .அவ்வப்போது ஜெய்க்கு, ஏரியா அரசியல் பிரபலம் தாஸ் – மாரிமுத்துவுடன் முட்டல் மோதல் ஏற்படுகிறது. இருவரும் ஒரு விளையாட்டு மைதானத்திற்காக விளையாடும் அரசியல் விளையாட்டு தான் ‘புகழ்’ படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்!
ஜெய் – புகழாக பொளந்து கட்டியிருக்கிறார். லவ், ஆக்ஷன் எல்லாவற்றிலும் பேஷ், பேஷ் என பிய்த்து, பெடலெடுத்திருக்கிறார். ‘எனக்கு இந்த அரசியல் லயும், அரசியல்வாதி மேலயும் நம்பிக்கை இல்லன்னாஸ அதற்கு பதில் ஏதாவது கோயிலுக்கு வேண்டிகிட்டுஸ மொட்டை போடுறது ல கூட நல்லது நடக்கும்னு நம்புறவன் நான்.. ‘என்று நரம்பு புடைக்க ஜெய் பேசும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது!
2
சுரபி சும்மா வந்து போனாலே படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு காதல் ஹார்மோன் சுரபிகள் ஊற்றெடுக்கின்றன.
‘என்ன, எப்ப பார்த்தாலும் எம்.ஜி.ஆர் பாட்டே பாத்தகிட்டு, கொஞ்சம் ஜெமினி பட்டும் பாரேன்ஸ என சேனல் மாற்றுவதுஸ ரகளை.
‘மக்கள் பிரச்சினைக்காக உண்டியல் ஏந்தி ரோடுரோ டாக போராடிய காலம் எல்லாம் மாறிப்போச்சுஸ சாதாரண கான்சிலர் கூட பார்சினோ காரில் வந்து பந்தாவா இறங்குறான். நீசைக்கிளுக்கு காத்தடிக்க முடியாம கடன் சொல்லிட் டுநிக்கிறஸ’ என்று சிவப்பு துண்டு புரட்சியாளர் பிறைசூடனிடம் கொந்தளிக்கும் இடத்திலும், தம்பிக்காக தாஸை ஒரு கட்டத்தில் எதிர் இடத்திலும் கவனிக்க வைக்கிறார் கருணாஸ்.
வில்லன் கம் சேர்மன் தாஸ்ஸாக வரும் ‘கண்ணும் கண்ணும்’ மாரிமுத்து, அவரது பாஸ் மினிஸ்டர் கமலா தியேட்டர் வள்ளிநாயகம், பிறை சூடன், ஜெய்யின் நண்பர்கள் ஆர்-ஜே.பாலாஜி, வெங்கட் உள்ளிட்டவர் களும் கச்சிதம்.
விவேக் சிவா – மெர்வின் சாலமன் இரட்டையர் இசையில், ‘அடடடா என்ன அழகுஸ,’ உள்ளிட்ட அழகிய பாடல் களூடன்., ஜி.பி.வெங்கடேஷின் பக்கா படத்தொகுப்பில், ஆர்.வேல்ராஜின் அழகிய ஒளிப்பதிவில், மணிமாறனின் எழுத்து, இயக்கத்தில் .நச்’சென்று வந்திருக்கிறது புகழ் மொத்த படமும்!
ஒருமைதானத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பது நெருடலாக தெரியா வண்ணம். ஜனரஞ்சமாக இப்படத்தை காட்சிப்படுத்தியிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இப்பட இயக்குனர் மணிமாறன்.மொத்தத்தில் ”புகழ்” எட்டுத்திக்கும் பரவும்!

ஆகம் - விமர்சனம்
விஜய் ஆனந்த் ஸ்ரீராம்படித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போகாமல் இந்தியாவிலேயே வேலைப் பார்க்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட கல்லூரி மாணவன் இர்ஃபான். இதற்காக தனி இயக்கத்தையே நடத்துகிறார்.இன்னொரு பக்கம் இந்தியாவை வல்லரசாக்கும் கனவோடு ஒரு திட்டத்தை நாயகன் இர்ஃபான் துணையோடு உருவாக்கி வைத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். இந்த திட்டத்தைக் கைப்பற்றி அதை வைத்து பெரும் பணம் பார்க்க முயல்கிறார் ஒய்ஜி மகேந்திரன். இவர் மகன் ரியாஸ் கான் வேலையே குறுக்கு வழியில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதுதான். View Photosஇர்ஃபானின் சொந்த அண்ணனுக்கோ வெளிநாடு போய் சம்பாதிக்க ஆசை. ரியாஸ்கான் மூலம் வெளிநாடு போக முயற்சிக்க, அவனை சிக்கலில் மாட்டி வைக்கிறார் ரியாஸ்கான். அண்ணனை மீட்க வேண்டிய கடமை ஒருபக்கம், ஜெயப்பிரகாஷின் திட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பு மறுபக்கம். நாயகன் எப்படி இவற்றை நிறைவேற்றுகிறான் என்பது மீதி...வல்லரசு இந்தியா என்பதை விளக்க கிராபிக்ஸ் என்ற பெயரில் ஏக அமெச்சூர்த்தனங்கள்.தேசப்பற்று மிக்க இளைஞராக நடிக்க முயன்றுள்ளார் இர்ஃபான். நாயகி தீக்ஷிதாவுக்கு பெரிதாக வேலையில்லை. வந்து போகிறார். வில்லனாக வரும் ரியாஸ்கானும், காட்ஃபாதர் என்ற பெயரில் ஆராய்ச்சியாளராக வரும் ஜெயப்பிரகாஷும் தேர்ந்த நடிப்பால் கவர்கிறார்கள். ஜெயப்பிரகாஷை இன்னும் கூட பேச விட்டிருக்கலாம். இயக்குநர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் தன் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் வரும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் பாணியில் கதை சொல்ல வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் இயக்குநர். ஆனால் அதை சராசரி கோலிவுட் படத்தை விட குறைந்த தரத்தில்தான் தந்திருக்கிறார். காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அல்லாடுகின்றன. முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சினிமா எடுத்து விளக்க வேண்டும் இயக்குநர். எரிச்சல்தான் மிஞ்சுகிறது. விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் ஒன்றும் எடுபடவில்லை. பின்னணி இசையும் சுமார்தான்.படம் பார்த்து முடிந்ததும், ஒவ்வொரு ரசிகரும் 'ஆகம் பார்த்த ஐ யாம் பாவம்!' என்று நொந்தபடி செல்வதைப் பார்க்க முடிகிறது.