சினிமா செய்தித் துளிகள்
இணையத்தைக் கலக்கும் தமன்னாவின் தாராள புகைப்படங்கள்
19 Mar,2016

இணையத்தைக் கலக்கும் தமன்னாவின் தாராள புகைப்படங்கள்
தமன்னா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் தங்கமென மின்னி வரும் நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் சில காலம்
காணாமல் போனவர் 'பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் மூலம் மீண்டும் வந்தார். 'பாகுபலி'யில் கிடைத்த பெயரை 'வா.ச.ஒ.ப' படத்தில் கொஞ்சம் இழந்தார். இருந்தாலும் 'தோழா' படம் தமிழில் தன்னை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு வரும் என நம்பிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் தமன்னா ஆடை விஷயத்தில் தாராள மனதுடன் நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
மிகப் பெரும் கோடீஸ்வரரான நாகார்ஜுனாவின் செக்ரெட்டரி கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். அதனால், அவருடைய ஆடைகள் அனைத்தும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இயல்பாகவே வெள்ளை வெளேர் என இருக்கும் தமன்னாவை இதுவரை பார்த்திருக்காத தோற்றத்தில் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.
கடந்த சில நாட்களாக இந்தப் படத்தில் தமன்னா நடித்துள்ள கதாபாத்திரத்தின் 'கிளாமர்' புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் வெளிவருவதால் 'தோழா' படம் வந்த பிறகு ஸ்ருதிஹாசன், சமந்தா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மற்ற நடிகைகளை தமன்னா எளிதில் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என்கிறார்கள்.
தோழா யாருக்குத் தோள் கொடுக்கிறதோ இல்லையோ தமன்னாவிற்குச் சரியாகத் தோள் கொடுப்பது நிச்சயம் என்கிறது
எமியுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி.?
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி - நயன்தாரா நடித்த படம் ‛நானும் ரவுடிதான்'. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதே
கூட்டணியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார் விக்னேஷ்சிவன். அதோடு, புதிய படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால், இதுவரை இணைந்து நடிக்காத திரிஷா-நயன்தாரா ஆகிய இருவரையும் அந்த படத்தில் இணைக்க முயற்சி எடுத்தார் விக்னேஷ்சிவன்.
ஆனால், அதுகுறித்து திரிஷாவை அவர் அணுகியபோது, கதையைகூட கேட்காமல் தான் பல படங்களில் பிசியாக இருப்பதாக சொல்லி நழுவி விட்டாராம். அதனால் வேறு சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்த அவர், இப்போது எமி ஜாக்சனை புக் பண்ணியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, ஆரம்பத்தில் பிரபலமில்லாத ஹீரோயின்களுடன் நடித்து வந்த விஜய்சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடித்த பிறகு தர்மதுரையில் தமன்னாவுடன் நடித்திருக்கிறார். தற்போது ஆண்டவன் கட்டளையில் ரித்திகா சிங்குடன் நடித்து வருபவர், அவரைத் தொடர்ந்து எமிஜாக்சனுடனும் நடிக்கப்போகிறார். இதேபோல் அவரது புதிய படங்களிலும் பிரபலமான கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சம்பள விசயத்தில் கறார் செய்யாத ஐஸ்வர்யா ராஜேஷ்!
.
அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜயசேதுபதியுடன் கூடமேல கூட வச்சு கூடலூரு
போறவளே என்ற பாடலில் நடித்து பிரபலமானார். அதையடுத்து, காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து இன்னும் பேசப்படும் நடிகையாகி விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், தற்போது சில படங்களில் ஹீரோயின் என்றாலும் பல படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வருகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை நான் கதாநாயகி என்று ஒருபோதும் நினைத்துக்கொள்வதில்லை. கேரக்டர் நடிகை என்றுதான் எண்ணிக்கொள்கிறேன். அந்த வகையில், எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் எனக்கு பிடித்திருந்தால் நடிப்பேன். அதோடு, பெரும்பாலும் ஹோம்லியான வேடங்களிலேயே நடித்திருந்தபோதும் சரியான மாடர்ன் ரோல்கள் கிடைத்தால் கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
அதோடு, இப்போது விஜயசேதுபதி, விதார்த், விஷ்ணு, உதயநிதி, அருள்நிதி என நடித்து வந்தபோதும், அடுத்தபடியாக மேல்தட்டு நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், கேரக்டர்கள் பிடித்து விட்டால் யாரிடமும் நான் சம்பள விசயத்தில் கறார் செய்வதே இல்லை. பல படங்களில் நான் நடிப்பதற்கான சம்பளத்தை அந்த படங்களின் தயாரிப்பாளர்கள்தான் முடிவெடுத்திருக்கிறார்கள். நானாக எனக்கு இவ்வளவு சம்பளம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதில்லை. அந்த வகையில, நான் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டுக்கேற்ற நடிகையாக இருந்து வருகிறேன் என்கிறார்.
பா.ஜ.க.எம்.எல்.ஏ.வை திட்டிய த்ரிஷாவுக்கு மிரட்டலா?
கௌரவக்கொலைகள் தொடங்கி மனிதர்களுக்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டார் த்ரிஷா.
அதே நேரம் ஆடு,மாடு,நாய்,குதிரை போன்ற ஜீவராசிகளுக்கு ஏதாவது என்றால் உடனே ட்விட்டரில் பொங்குவார்.
சில தினங்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் மாநில அரசுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி என்பவர், ஒரு குதிரையை தாக்கினார்.
இதனால் அந்தக்குதிரையின் கால் முறிந்தது.
அந்தக்குதிரையினால் இனி சொந்த காலில் நிற்பது கடினம் என்றும், அந்தக்குதிரைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது.
அடிபட்ட குதிரை நிலை குலைந்து கீழே விழுந்து கிடப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.
அதைப் பார்த்த த்ரிஷா, "மிகவும் வெட்கக்கேடான செய்கை. நீங்கள் நரகத்துக்குச் செல்ல நான் இறைவனை வேண்டுகிறேன்" என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட காரணமாக விலங்குகள் நல அமைப்பினா பீட்டாவின் விளம்பர தூதராக இருப்பவர் த்ரிஷா.
தெரு நாய்களுக்காக பல்வேறு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
குதிரை தாக்குதல் சம்பவத்தை வைத்து பாஜக எம்.எல்.ஏ. வை ட்விட்டரில் கடுமையாக சாடியதும் நடிகை த்ரிஷாவுக்கு சம்மந்தப்பட்ட கட்சியிலிருந்து மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த செய்தியை த்ரிஷா உறுதிப்படுத்தவில்லை.
மௌனமாகவே இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் பட மோசன் போஸ்டரை வெளியிடும் சமந்தா!
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் ஹீரோவாகிவிட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது புருஸ்லீ, எனக்கு இன்னொரு பேர்
இருக்கு படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக கெட்ட பையன்டா இந்த கார்த்தி, கடவுள் இருக்கிறான் குமாரு ஆகிய படங்களில் நடிக்கயிருக்கிறார். இப்படி பிசியாக நடித்து வந்தபோதும் விஜய்யின் தெறி படத்திற்கும் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும், மார்ச் 20-ந்தேதி தெறி படத்தின் ஆடியோ வெளியாகும் நிலையில், அவர் நாயகனாக நடித்துள்ள எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் மோசன் போஸ்டரை இன்று மாலை வெளியிடப்படுகிறது. அதை நடிகை சமந்தா தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். முன்னதாக, தெறி படத்தின் பாடல்களை கேட்டு விட்டு ஒருநாள் ஜி.வி.பிரகாஷ்க்கு போன் செய்து பாராட்டினாராம் சமந்தா. அப்போது எனது படத்தின் மோசன் போஸ்டரை உங்கள் கையினால்தான் வெளியிட வேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் கேட்டுக்கொள்ள, அதற்கு உடனே சம்மதம் சொன்னாராம் சமந்தா.