சினிமா செய்தித் துளிகள்
கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பாராம்:
15 Mar,2016
தினமும் ஓய்வே இல்லாமல் நடித்துக் கொண்டு இருக்க வேண்டும்: - சமந்தா
ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்று சமந்தா கூறினார்.இதுகுறித்து நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘என் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. தமிழில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டி உள்ளது. வீட்டுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவ்வப்போது குடும்பத்தினர் ஞாபகம் வந்து மனதுக்கு கவலையாய் இருக்கிறது. அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. எனக்கு வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் குலோப்ஜாமுன் சாப்பிடுவேன். உடனே வீட்டு கவலைகள் பறந்து போய்விடும். குலோப்ஜாமுன் சாப்பிட்டால் எப்படி வீட்டு ஞாபகம் இல்லாமல் போகிறது என்று என்னிடம் கேட்டால் பதில் சொல்ல முடியாது. தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘தெறி’ படமும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ‘24’ படமும் கோடையில் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கிலும் இரண்டு படங்கள் வருகின்றன. எல்லா படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. இப்படி நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். தனுசின் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்கிறேன். இந்த வருடம் அதிகமான படங்களில் நடிப்பதால் எனக்கு இது சிறப்பான ஆண்டாக அமைந்து இருக்கிறது. கடவுள் அருளும் எனக்கு நிறைய இருக்கிறது. தினமும் ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசையாக இருக்கிறது.இவ்வாறு சமந்தா கூறினார்
ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை என்று சமந்தா கூறினார்.இதுகுறித்து நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘என் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. தமிழில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். எப்போதும் படப்பிடிப்புகளிலேயே இருக்க வேண்டி உள்ளது. வீட்டுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவ்வப்போது குடும்பத்தினர் ஞாபகம் வந்து மனதுக்கு கவலையாய் இருக்கிறது. அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. எனக்கு வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் குலோப்ஜாமுன் சாப்பிடுவேன். உடனே வீட்டு கவலைகள் பறந்து போய்விடும். குலோப்ஜாமுன் சாப்பிட்டால் எப்படி வீட்டு ஞாபகம் இல்லாமல் போகிறது என்று என்னிடம் கேட்டால் பதில் சொல்ல முடியாது.
தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘தெறி’ படமும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ‘24’ படமும் கோடையில் திரைக்கு வர இருக்கிறது. தெலுங்கிலும் இரண்டு படங்கள் வருகின்றன. எல்லா படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. இப்படி நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம். தனுசின் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்கிறேன். இந்த வருடம் அதிகமான படங்களில் நடிப்பதால் எனக்கு இது சிறப்பான ஆண்டாக அமைந்து இருக்கிறது. கடவுள் அருளும் எனக்கு நிறைய இருக்கிறது. தினமும் ஓய்வே இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசையாக இருக்கிறது.இவ்வாறு சமந்தா கூறினார்
முன்னணி கதாநாயகனுடன் நடிக்க மறுத்த சமந்தா?
விஜய் சேதுபதி தற்போது ஹாட்ரிக் ஹிட் கொடுத்து விட்டார். நயன்தாரா, தமன்னா என முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.ஆனால், ஆரம்பத்தில் இப்படத்திற்கு ஹீரோயின் தேடுதலில் முதலில் படக்குழு அனுகியது சமந்தாவை தானாம்.அவர் இந்த படத்தில் நடிக்க மறுக்க, பிறகு தான் மடோனா கமிட் ஆகியுள்ளார்.

நான் எப்போதும் போலவே தான் இருக்கிறேன்: - சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த அஞ்சலி!
முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வளர்ந்து வரும் நேரத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினார் அஞ்சலி. இதை தொடர்ந்து மீண்டும் அப்பாடக்கர், மாப்ள சிங்கம், இறைவி என பிஸியாகிவிட்டார்.தற்போது இவர் முன்பு போல் இல்லை குண்டாகிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்தி உலா வருகின்றது. இதற்கு விளக்கம் அளித்த இவர் ‘நான் எப்போதும் போலவே தான் இருக்கிறேன்.இறைவி படத்திற்காக 7 கிலோ குறைத்துள்ளேன், யாரையும் நான் போட்டியாக கருதவில்லை, தற்போது என் அம்மா, அப்பாவுடன் ஐதராபாத்தில் வசிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பாராம்: - ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படம் படுதோல்வியடைந்தது.இதை தொடர்ந்து அரண்மனை-2வில் விட்ட இடத்தை பிடித்தாலும், போக்கிரிராஜா படம் ஹன்சிகா திரைப்பயணத்தில் இதுவரை கண்டிராத தோல்வியை அடைந்தது.இதனால், இனி முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பாராம்.

வழுக்கி வெண்டைக்காய் ஆகிப்போன த்ரிஷா.!
விஜயகாந்தாவது ஒரு கூட்டணிக்கு முடிவு சொல்லிவிடுவார் போலிருக்கிறது - இந்த த்ரிஷா மாதிரி வெண்ணை வழுக்கி வெண்டைக்காய் ஒன்று இருக்கவே முடியாது என்கிற அளவுக்கு நொந்தகுமாரன் ஆகிவிட்டார் விக்னேஷ்சிவன். ‘நானும் ரவுடிதான்’ படத்தை தொடர்ந்து இவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வராவிட்டாலும், அரசல் புரசலாக வந்து கொண்டுதான் இருக்கிறது. அதன்படி, இவரது படத்தில் நயன்தாராவும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

அரசியலில் அதிமுக- திமுக போல சம பலத்துடன் முண்டா தட்டினாலும், சமயங்களில் வீக் ஆகிவிடுவது த்ரிஷாவின் துரதிருஷ்டம். ஒரு வழியாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் ஏதேதோ சந்தேகங்களாலும், சம்பள பிரச்சனையாலும் தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம். “இல்லேன்னு சொல்லணும். இல்லேன்னா ஆமான்னு சொல்லணும். இப்படி வாயில பாலை ஊத்திட்டு வயித்து மேல சர்க்கரைய தடவுற டேக்டீஸ் நமக்கு ஆவாதுப்பா” என்று கதவை சாத்திக் கொண்டு வெடிக்கிறாராம் விக்னேஷ் சிவன்.