சினிமா செய்தித் துளிகள்
சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா
15 Mar,2016
மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா
.
நயன்தாராவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும் அவரது சினிமா மார்க்கெட்டும் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. கைநிறைய படங்கள் வைத்திருக்கும் அவர், தான் நடிக்கும் எல்லா படங்களிலுமே முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில்தான் நடித்து
வருகிறார். அந்த வகையில், தற்போது மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் குறைந்து விட்டதால், இளவட்டங்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி வருகிறார் நயன்தாரா.
அந்த வகையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, அடுத்தபடியாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்கிறாராம். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ரெமோ படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அந்த படத்தையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். அந்த படத்தை அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் உள்பட பல படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறாராம்.
முன்னணி ஹீரோக்களுடன் ஷாம்லி
.
மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய, மாநில அரசு விருதுகளை பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்த அவர், குமரியான பிறகு தனது மச்சான் அஜீத் நடித்த
கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் மற்றும் ஒய் தெலுங்கு படத்திலும் நடித்தார். பின்னர் வெளிநாடு சென்று படிப்பைத் தொடர்ந்தவர், இப்போது மறுபடியும் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிக்கும் வீர சிவாஜி படத்தில் நடிப்பவர், மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கும் வள்ளியும் தேட்டி புள்ளியும் தேட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே தனுஷின் கொடி படத்திலும் நடிப்பதாக இருந்தார். ஆனால், வள்ளியும் தேட்டி புள்ளியும் தேட்டி மலையாள படத்திற்கு கொடுத்திருந்த அதே தேதியில் தனுஷின் கொடி படத்திற்கும் கால்சீட் கேட்டதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் ஷாம்லி. மேலும், தற்போது விக்ரம் பிரபுவுடன் நடித்து வரும் ஷாம்லி, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால்தான் முன்னணி ஹீரோயினாக முடியும் என்பதால் தற்போது சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
தோல்வி அதிர்ச்சியில் ஹன்சிகா
.
தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோயின்களில் ஹன்சிகாவும் ஒருவர். விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து
நடித்தாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடிக்கும் தாராள குணம் கொண்டவர். அப்படித்தான் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நடித்தார். சித்தார்த்துடன் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ' மான் கராத்தே' படத்திலும் நடித்தார். அந்தப் படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
ஒரு பக்கம் வெற்றிப் படங்களில் நடித்தாலும் மறுபக்கம் 'சேட்டை, பிரியாணி, மீகாமன், ஆம்பள, வாலு, புலி' ஆகிய தோல்விப் படங்களிலும் நடித்தார். வெற்றியும், தோல்வியும் ஹன்சிகாவிற்கு மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் வெளிவந்த 'ரோமியோ ஜுலியட்', ஜனவரியில் வெளிவந்த 'அரண்மனை 2' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'போக்கிரி ராஜா' படம் தந்த தோல்வி ஹன்சிகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். இனிமேல், வளரும் ஹீரோக்களுடன் நடிக்கக் கூடாது என அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளது. தற்போது உதயநிதியுடன் நடிக்கும் 'மனிதன்' படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. ஜெயப்பிரதா மகன் சித்துவுடன் ஜோடியாக நடித்துள்ள 'உயிரே உயிரே' படம் நீண்ட காலமாக தயாரிப்பில் உள்ளது.
அடுத்து பெரிய ஹீரோக்களுடன் மட்டுமோ அல்லது ஹிட்டான ஹீரோக்களுடன் மட்டுமோ நடித்து தன்னுடைய மார்க்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் ஹன்சிகா.
சூர்யாவை ஒருதலையாக காதலிக்கும் ஸ்ருதிஹாசன்!
.
சிங்கம்-2 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார் ஹன்சிகா. கதைப்படி அந்த பள்ளியில் என்சிசி ஆசிரியராக இருப்பார் சூர்யா. அப்போது சூர்யா மீது
காதல கொள்ளும் ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்லும்போது, தனது காதலி அனுஷ்காவையே தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும், அவர் தனக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்வார் சூர்யா. அதையடுத்து தனது மனதை மாற்றிக்கொள்வார் ஹன்சிகா.
அதேபோல் இப்போது சிங்கம்-3யான எஸ்-3 படத்திலும் முந்திய பாகத்தில் நடித்த ஹன்சிகாவைப்போன்று ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார். ஆனால் அவர் ரகசிய போலீசாக நடிக்கிறார். காவல்துறையின் உயரதிகாரியான சூர்யாவுக்கு உதவி செய்யும் வேடம். மேலும், சூர்யாவின் திறமையைக்கண்டு வியந்து அவர் மீது ஒருதலையாக காதல் கொள்வாராம் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் சூர்யா-ஸ்ருதிஹாசனுக்கிடையே ஒரு டூயட் பாடலும் உள்ளதாம். அதோடு, இந்த படத்தைப்பொறுத்தவரை ரகசிய உளவாளியான ஸ்ருதிஹாசனுக்கு ஒரு ஆக்சன் காட்சியும் உள்ளதாம்.
பிரபல நடிகைகள் நடிக்கும் குறும்படம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா. இவர்கள் மூவரும் ஒரே குறும்படத்தில் நடிக்கவுள்ளனர்.ஆனால், நீங்கள் நினைப்பது போல் சினிமா சார்ந்த குறும்படங்கள் இல்லை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி ஒரு குறும்படத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா, சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா. இவர்கள் மூவரும் ஒரே குறும்படத்தில் நடிக்கவுள்ளனர்.ஆனால், நீங்கள் நினைப்பது போல் சினிமா சார்ந்த குறும்படங்கள் இல்லை, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.இந்த தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி ஒரு குறும்படத்தை எடுக்கவுள்ளனர். இதில் ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா, சித்தார்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.