சினிமா செய்தித் துளிகள்
எனக்கு யார் மீதும் காதல் வந்ததில்லை - ஹன்சிகா
10 Mar,2016
நயன்தாரா வாய்ப்பை தட்டிப் பறிக்கிறேனா!
சொந்த பிரச்னைகளை கடந்து, இன்று, தமிழில் மூன்று படங்கள்; தெலுங்கில் மூன்று படங்கள் என, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க போராடும் அஞ்சலி, மாப்ள சிங்கம்
படத்துக்காக, மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டினார். அவருடன் உரையாடியபோது...
மாப்ள சிங்கம் படத்தில் உங்க ரோல் என்ன?
முதல் முறையாக, இந்த படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். இதில், என் மேக் அப், ஹேர்ஸ்டைல் மாறி இருக்கு. இதுவரை வந்த படங்களில் பார்த்த அஞ்சலி வேற; இந்த படத்தில் பார்க்கப் போற அஞ்சலி வேற. விமலுக்கும், எனக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. மூன்றாவது முறையாக விமலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.
எந்த மாதிரி கதையை தேர்வு செய்வீங்க?
மரத்தை சுற்றி டூயட் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. நான் நடிக்கும் படம், எல்லாராலும் பேசப்படும் படமாக இருக்க வேண்டும். எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தேர்வு செய்து தான் நடிக்கிறேன்.
உங்க ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்க விரும்புகின்றனர்?
எல்லா ரசிகர்களின் ரசனையும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. ஒருவர், புடவையில் ஹோம்லியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார். மற்றொரு ரசிகர், மாடர்ன் உடைகளில் நடித்தால் தான் நல்லா இருக்கும் என்கிறார். என்னை பொறுத்தவரைக்கும், பக்கத்து வீட்டுப் பொண்ணு போல், ஹோம்லியாக நடிக்கத் தான் பிடிக்கும்.
சினிமாவுக்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. இதுவரை என்ன கற்றுக் கொண்டீர்கள்?
ஆரம்பத்தில் நடிக்க வந்தபோது, எப்படி இருந்தேனோ, அப்படித் தான் இன்னும் இருக்கிறேன். எதையும் வெளிப்படையாக பேசி விடுவேன். இயல்பாக இருக்க ஆசைப்படுவேன். என்னுடன் பழகியவர்களுக்கு இது, நன்றாக தெரியும். பொறாமையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பது தான், என்னுடைய சிறப்பம்சம்.
ஒரு நடிகையாக உங்கள், 'லிமிட்' என்ன?
படப் பிடிப்பில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை செய்து விட்டு, நம் வேலையை பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும். தேவை இல்லாத விஷயங்களை தவிர்த்து விடுவது நல்லது; அது நம்மோட வேலையும் இல்லை.
சமீப காலமாக, உங்க எடை கூடி விட்டதாக...
இப்போது என்னை பாருங்கள்; எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறேன். அந்தந்த படத்துக்கு தகுந்தாற்போல், உடல் எடையை கூட்டி, குறைத்து நடிக்கிறேன். ஆனால், குண்டாகி விட்டதாக வதந்தியை பரப்புகின்றனர். இறைவி படத்தில், ரொம்ப ஒல்லியாக இருக்க வேண்டும் என்றனர். அதற்காக, ஏழு கிலோ குறைந்தேன். இதற்கு மேல் எப்படி குறைக்க முடியும்.
நயன்தாராவுக்கு வரும் பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறீங்களாமே...?
அப்படியா... இது புதுசா இருக்கே. மற்றவர்கள் வாய்ப்பை தட்டிப் பறிக்க வேண்டிய நிலையில் எனக்கு இல்லை. எனக்கான படம், கண்டிப்பாக என்னை தேடி வரும். யாரும், யாருடைய
வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவும் முடியாது; பிடுங்கவும் முடியாது. வதந்திகளை நம்ப வேண்டாம்.
நடிகையர் பலரும், நகைக்கடை, ரியல் எஸ்டேட் என, சைடு பிசினசில் பிசியாகி விட்டனர்; நீங்கள்?
எனக்கு சினிமாவை தவிர, வேறு எதுவுமே தெரியாது. காஸ்ட்யூமில் ஆர்வம் உண்டு; ஆனால், அதை பிசினசாக மாற்றும் அளவுக்கு விவரம் தெரியாது. நிறைய டைம் இருக்கு;
எதிர்காலத்தில் பார்க்கலாம்.
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; பிரசாரத்துக்கு யாரும் அழைத்தால் செல்வீர்களா?
அய்யோ... ஆள விடுங்க; அது, நமக்கு தெரியாது. அதில் ஆர்வமும் இல்லை.
சித்தி, இயக்குனர் பிரச்னை எல்லாம் முடிந்து விட்டதா?
அது, முடியுதோ, முடியலையோ. அதைப் பற்றி பேசி, புதிதாக எந்த பிரச்னையிலும் சிக்க விரும்பவில்லை. அதையெல்லாம், மறந்து, பல நாட்கள் ஆகி விட்டன. இப்போது, அம்மா, அண்ணன் உடன், ஐதராபாத்தில் வசிக்கிறேன். நான், என் குடும்பம், சினிமா; இவ்வளவு தான் என் உலகம்
மிரள வைக்கும் நயன்தாரா
.
ஆந்திரா என்ற வார்த்தையை உச்சரித்தாலே டென்ஷனாகி விடுகிறார் நயன்தாரா. சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு படங்களிலும், நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நயன். ஆனால், படங்கள் வெளியாகும்போது, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், டேக்கா கொடுத்து வந்தார்
நயன்தாரா. கடுப்பான தெலுங்கு பட உலகம், நயன்தாராவுக்கு, ஒரு ஆண்டு காலம், படத்தில் நடிக்க தடை விதித்துள்ளது. தற்போது, அந்த தடை முடிந்துள்ளதை தொடர்ந்து, சில தெலுங்கு பட தயாரிப்பாளர்கள், அவரை அணுகினர். ஆனால், படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, பல கோடி ரூபாய் சம்பளம் கேட்டு, அவர்களை மிரள வைத்தாராம் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களின் வேண்டுகோளை தட்ட முடியாமல், அவர்களின் படங்களில் மட்டும் நடிக்க, சம்மதம் தெரிவிக்கிறாராம். ஆனாலும், நயன்தாராவுக்கு போகும் வாய்ப்புகளை எல்லாம், மற்றொரு பப்ளிமாஸ் நடிகை தட்டிப் பறிப்பதால், கடுப்பில் இருக்கிறாராம் அவர்.

எனக்கு யார் மீதும் காதல் வந்ததில்லை - ஹன்சிகா
'வல்லவன்' படத்தில் நடித்தபோது அப்பட நாயகி நயன்தாராவை காதலித்தார் சிம்பு. ஆனால் அந்த காதல் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.
எத்தனை சீக்கிரத்தில் உருவானதோ அத்தனை சீக்கிரத்தில் முறிந்து போனது. மேலும், நயன்தாராவைத் தொடர்ந்து 'வாலு' படத்தில் நடித்தபோது ஹன்சிகாவையும் காதலித்தார் சிம்பு. அதனால் முதல் காதலில் தோற்று விட்ட சிம்பு, இரண்டாவது காதலில் கட்டாயம் ஜெயித்து விடுவார் என்று கருதப்பட்டது. ஆனால், ஹன்சிகாவுடனான காதலிலும் தோல்வி கண்டார் சிம்பு. அவர்களது காதல் முறிவுக்கான காரணம் இரண்டுபேர் தரப்பில் இருந்தும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், சிம்புவை விட்டு ஹன்சிகா விலகி விட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்தது. இந்நிலையில், தற்போது ஹன்சிகா விடுத்துள்ள ஒரு செய்தியில், நான் சிம்புவை ஒரு போதும் காதலிக்கவில்லை. வாலு படத்தில் இயல்பாக நடித்ததை வைத்து அப்படியொரு செய்தியை பரப்பி விட்டனர். என்னைக்கேட்டால் சிம்புவை நான் காதலிப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி மட்டுமே. அதில் துளிகூட உண்மையில்லை.அதோடு, இதற்கு முன்பு என்னிடம் லவ் புரபோஸ் செய்தது ஒருயொரு நபர்தான். அது என்னுடன் 8-வது வகுப்பு படித்த ஒரு மாணவன். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. அதன்பிறகு இப்போதுவரை யாரும் என்னிடம் ஐ லவ் யூ சொன்னதில்லை. அதேபோல் யார் மீதும் எனக்கு இதுவரை காதல் வந்ததில்லை

இரவு பகலாக நடிக்கும் அஞ்சலி!
.
ரீ-என்ட்ரியில் அஞ்சலி தமிழில் ஜெயம்ரவியுடன் நடித்த சகலகலா வல்லவன் படம் வெற்றி பெறவில்லை என்றபோதும், அவருக்கான படங்கள் குறையவில்லை. இப்போதுதான் முன்பைவிட அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளில் கமிட்டாகி நடித்து வருகிறார் அஞ்சலி. அந்த
வகையில், மாப்ள சிங்கம் படத்தை அடுத்து இறைவி, தரமணி, யார் நீ, காண்பது பொய், பேரன்பு என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில், காண்பது பொய் தமிழ், தெலுங்கிலும், பேரன்பு தமிழ், மலையாளத்திலும் தயாராகின்றன. ஆக, ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி ரசிகர்களை சந்திக்க போகிறார் அஞ்சலி.
ஆக, ரீ-என்ட்ரியின் தொடக்கத்தில் தொய்வு நிலையில் இருந்து வந்த அஞ்சலி இப்போது திடீர் பரபரப்பில் சிக்கியிருக்கிறார். இந்த நேரத்தில் கால்சீட் பிரச்சினை ஏற்பட்டால் தயாரிப்பாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்திற்கும் கால்சீட் கொடுத்திருக்கும் அஞ்சலி, ஒருவேளை தான் குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அந்த தயாரிப்பாளர் தன்னால் நஷ்டப்படக்கூடாது என்பதற்காக, சிலநாட்களில் இரவு பகலாக கண்விழித்து நடித்துக்கொடுக்கிறாராம்.
இதன்காரணமாக, பகலில் சொன்னபடி அஞ்சலி ஸ்பாட்டுக்கு வராதது நினைத்து கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இரவு முழுக்க கண்விழித்து அவர் நடித்துக் கொடுப்பதைப்பார்த்து அதிருப்தி மனநிலையில் இருந்து மாறி அஞ்சலியிடம் சகஜமாக பேசத் தொடங்கிவிடுகிறார்களாம். அந்த வகையில் செகண்ட் இன்னிங்சில் யார் மனசும் நோகாதபடி கவனமாக செயல்பட்டு வருகிறார் அஞ்சலி
ஹன்சிகா வேண்டாம்.... நிராகரித்த தயாரிப்பாளர்
.
பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு', கௌதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களில் நடித்து
முடித்துவிட்டார் சிம்பு. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது 'வாலு' படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.
இந்த படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற 'டெம்பர்' படத்தின் ரீ-மேக் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் ஹன்சிகாவை கதாநாயகியாக புக் பண்ணும்படி இயக்குநர் விஜய் சந்தரிடம் சொன்னாராம் சிம்பு. அவரது ஆசையை இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பாளரிடம் சொல்ல, மைக்கேல் ராயப்பன் அதற்கு உடன்படவில்லையாம். ஏற்கனவே சிம்பு-ஹன்சிகா இடையேயான காதல் பிரேக்-அப், அவர்களது படங்கள் டிராப்பானது உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது
கவர்ச்சி நடிகைகளுக்கு சமந்தா கொடுத்த அதிர்ச்சி!
.
தமிழில், பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக அமைந்ததால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார். குறிப்பாக, அங்கு மிதமான கிளாமராக நடித்து
வந்த சமந்தா, படுகவர்ச்சியாக நடித்த நடிகைகளையே ஓரங்கட்டி முன்னணி வகித்து வந்தார். என்றாலும், தமிழிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டேயிருந்ததால் கெளதம்மேனனின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தவர், அஞ்சான், கத்தி, தங்கமகன், பத்து எண்றதுக்குள்ள, தெறி, 24 என பல படங்களில் நடித்து விட்டார். அந்தவகையில், தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா.
ஆனால், இப்படி தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் காட்டியதால் தெலுங்கில் அவருக்கான படங்களை மற்ற நடிககைளை கைப்பற்றி வந்தனர். இந்த நிலையில், தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் சறுக்கியதால், இப்போது மறுபடியும் தெலுங்கில் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார் சமந்தா. அந்த வகையில், முன்பு தான் தொடர்ச்சியாக நடித்து வந்த முன்னணி தெலுங்கு நடிகர்களான மகேஷ்பாபு, நாக சைதன்யா, ராம் சரண் தேஜா போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கும் சமந்தா, இந்த படங்களில் தமிழில் அஞ்சானில் நடித்தது போன்று பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து, ஆந்திராவின் கவர்ச்சி கதாநாயகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.