சினிமா செய்தித் துளிகள்
வாய்ப்புக்காக ஏங்கும் தமன்னா!
05 Mar,2016

சந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை
தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார்.
'வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்' என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி.
விஜய்சேதுபதிக்கு ரெண்டு லட்டு!
.
நானும் ரவுடிதான் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி ஜோடி மீண்டும் இணைகிறது. விக்னேஷ் சிவன் படமென்றால்
கதாநாயகி நயனாகத்தானே இருக்கும். ஆம், அந்த ஒரு லட்டு நயன்தாரா தான். ஆனால், இன்னொரு லட்டு யார் தெரியுமா இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸினு சொல்லுதா.. ஆம், .த்ரிஷாவே தான்.
இதற்கே ஆச்சர்யபடவேண்டாம், படத்தின் தலைப்பு “காத்து வாக்குல ரெண்டு காதல்”. எப்படிப்பா விஜய்சேதுபதிக்கு இப்படிலாம் படம் அமையுதுன்னு மத்த ஹீரோக்கள் வெளிப்படையாகவே புலம்பித் தள்ளும் அளவிற்கு ஏகப்பட்ட எதிப்பார்ப்பு படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், இந்த படத்தின் கூட்டணி மேலும் பிரமிப்பை ஏற்படுகிறது
ஹாக்கி பயிற்சியாளராக நடிக்கும் அனுஹாசன்
சுஹாசினி தங்கையும், ‘இந்திரா’ பட நாயகியுமான அனுஹாசன் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார். இதில் ஹாக்கி பயிற்சியாளராக வருகிறார். தற்போது லண்டனில் வசித்து வரும் அனுஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்காகவே சில மாதங்கள் சென்னையில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
சமீபத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. இப்போது அனுஹாசன் ஹாக்கி விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். ‘வில்வித்தை’, ‘விழா’ படங்களில் நடித்த ‘மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
ரூ.4 கோடி சம்பளம் கேட்பதால் நயன்தாரா மீது டைரக்டர்கள் அதிருப்தி
தமிழ், தெலுங்கு பட உலகில் ரசிகர்கள் ரசனை மாறி இருக்கிறது. காதல், அதிரடி படங்களுக்கு மவுசு குறைந்து பேய், திகில் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. வசூலிலும் இந்த படங்கள் சக்கைப்போடு போடுகின்றன. 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பேய் படங்களில் நடிப்பதற்கு நயன்தாரா டைரக்டர்களின் முதல் தேர்வாக இருக்கிறார். இவர் நடித்த மாயா பேய் படம் கடந்த வருடம் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இதில் பேய் வேடத்தில் நயன்தாரா மிரட்டி இருந்தார். சூர்யாவுடன் மாஸ் என்ற பேய் படத்திலும் நடித்தார்.
அத்துடன் அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளி வந்த தனி ஒருவன், நானும் ரவுடிதான் படங்களும் வசூல் அள்ளின. இதனால் நம்பர்-1 இடத்தில் வலுவாக தொடர்கிறார். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி இருக்கிறார். தற்போது திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படம் கைவசம் உள்ளன. தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளத்தை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். அதில் நடிப்பதற்கு நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஒதுக்கி விட்டு வேறு நடிகையை தேடினார்கள்.
தற்போது அந்த படக்குழுவினர் நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை தேர்வு செய்து இருக்கிறார்கள். அஞ்சலி ஏற்கனவே தெலுங்கில் வந்து வெற்றிகரமாக ஓடிய கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே பிரபல நடிகையாகவும் இருக்கிறார். சம்பளமும் ரூ.1 கோடிக்கு குறைவாக வாங்குவதாகவே கூறப்படுகிறது.
இதனால் நயன்தாராவை சுற்றிய பேய் கதை இயக்குனர்கள் அவர் சம்பளத்தை உயர்த்தியதால் அதிருப்தியாகி தற்போது அஞ்சலி பக்கம் தாவி அவரை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு போட்டியாக அஞ்சலி மாறி வருவதாக தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வாய்ப்புக்காக ஏங்கும் தமன்னா!
.
'வயதானாலும், பரவாயில்லை; கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விடக் கூடாது' என்பதில், உறுதியாக இருக்கின்றனர் தற்போதைய நடிகையர். இந்த
விஷயத்தில், தமன்னாவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே தான், கடுமையான போட்டி நிலவுவதாக கூறுகின்றன, கோடம்பாக்கம் வட்டாரங்கள். அதிலும், தமன்னா, வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, தன் பிடிவாதத்தை எல்லாம் கைவிட்டு, ரொம்பவே இறங்கி வந்துள்ளார். 'முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி சேருவேன்' என, சமீபகாலம் வரை, கறாராக கூறி வந்த அவர், இப்போது, 'இரண்டாம் வரிசையில் உள்ள நடிகர்களுடனும் ஜோடி சேரத் தயார்' என, அறிவித்துள்ளாராம். அதற்கு ஏற்ப, தன் சம்பளத்தையும் கணிசமாக அவர் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் தேடிவரவில்லை என்பதால், சோகத்தில் இருக்கிறாராம்.