சினிமா செய்தித் துளிகள்
முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன்
02 Mar,2016

கேரவன் இல்லாததால் ஸ்பாட்டுக்கு செல்ல மறுத்த அஞ்சலி!
மாயா படத்தில் நயன்தாரா நடித்த பிறகு அவரை வைத்து பேய் கதைகளில் நடிக்க சில டைரக்டர்கள் கதை சொன்னார்கள். ஆனால் அவரது
சம்பளத்தை கேட்டபோது பட்ஜெட் தாங்காது என்று பின்வாங்கினர். அப்படித்தான் தற்போது காண்பது பொய் படத்தை இயக்கி வரும் சர்வேஸ் நயன்தாராவிடம் அந்த கதையை சொல்லி அவரது சம்பளம் காரணமாக பின்னர் நயன்தாரா கதாபாத்திரத்திற்கு அஞ்சலியை புக் பண்ணினார். அதனால் இறைவி படத்தில் நடித்துக் கொண்டே காண்பது பொய் படத்தில் நடிக்கத் தொடங்கிய அஞ்சலி முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்தவர் இப்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடைபெற்றபோது, முதல்நாள் அஞ்சலியிடம், மதியம் 2 மணியில் இருந்து இரவு 2 மணி வரை கால்சீட் கேட்டிருந்தார்களாம். ஆனால் 2 மணிக்கு ஸ்பாட்டுக்கு செல்ல தயாரான அஞ்சலி, ஸ்பாட்டில் தனக்கு தனி கேரவன் கொடுக்கப்படாததால் ஹோட்டல் அறையை விட்டு வெளியேற மறுத்து விட்டாராம். பின்னர் மாலை 6 மணிக்கு அவருக்கான கேரவன் ஸ்பாட்டுக்கு கொண்டு சென்ற பிறகுதான் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறி ஸ்பாட்டுக்கு சென்றாராம் அஞ்சலி. இப்படி தனக்கான வசதிவாய்ப்புகள் சிறிதளவு குறைந்தாலும், அதை சரி செய்தால்தான் அடுத்த அடி எடுத்து வைக்கிறாராம். இதனால் அஞ்சலி விசயத்தில் காண்பது பொய் யூனிட் ரொம்ப கவனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
சவாரிக்கு பிறகு என் மார்க்கெட் உயரும்: ஷனம் ஷெட்டி
.
அம்புலி 3டி படத்தில் அறிமுகமானவர் ஷனம் செட்டி, அதன் பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக
அமையவில்லை. தற்போது அவர் சவாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வெளிவந்த பிறகு தனது மார்க்கெட் கும்முனு உயரும் என்று நம்புகிறார்.
அவர் மேலும் கூறியதாவது: சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று சொல்வேன். மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இயக்குனர் குகனும், ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாக பணியாற்றி, குறைந்த கால கட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி, கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமண தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். பல எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்கள் நிகழும்.
படத்தில் இடம் பெறும் ஒரு டூயட் பாடலுக்காக நான் கடலில் கட்டுமரத்தில் பயணிக்க வேண்டி இருந்தது. எனக்கு அது தான் முதல் கட்டுமரப் பயணம். அந்த ஷூட்டிங் முழுக்க நான் கட்டு மரத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழப் போவதும், ஒவ்வொரு முறையும் பெனிட்டோ என்னை இழுத்து பிடித்து கட்டு மரத்துக்குள் அமர வைப்பதுமாக மறக்க முடியாத அனுபவம் அது. தரமான படங்களுக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் சவாரி படம் ரொம்ப பொருத்தமான ஒன்று. படம் மார்ச் மாத மத்தியில் திரைக்கு வருகிறது. அதன் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் என்பது உறுதி" என்கிறார் ஷனம் ஷெட்டி.
பாடல் காட்சியில் நடிக்க மலேசியா செல்கிறார் அனுஷ்கா!
.
டைரக்டர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 5-வது படம் எஸ்-3. சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம்,
திருநெல்வேலி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தபடியாக மலேசியா செல்கிறது. வில்லனை சூர்யா வெளிநாடுகளுக்கு துரத்தி சென்று பிடிக்கும காட்சிகளை அங்குதான் படமாக்குகிறார் ஹரி. அதனால் கபாலி, இருமுகன் படங்களைத் தொடர்ந்து சூர்யாவும், ஹரியும் மலேசியாவில் அடுத்து முகாமிடுகிறார்கள்.
மேலும், இந்த படத்திற்கான பெரும்பகுதி வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால் அடுத்தபடியாக சேஸிங் காட்சிகள், பைட் சீன், பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் டைரக்டர் ஹரி. அதனால் இந்த படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் ரெடி பண்ணி வைத்திருந்த டியூன்களை கேட்டு தனக்கு பிடித்தமானதை ஓகே பண்ணியிருக்கும் ஹரி, அதில் அனுஷ்காவுக்கு இந்த படத்தில் இடம் பெறும் ஷோலோ பாடலை தற்போது பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதம் மலேசியா சென்றதும் அங்குள்ள எழில் மிகுந்த லோகேசனில் அந்த பாடலை படமாக்கப்போகிறாராம்.
முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன்: - நயன்தாரா அதிரடி
தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.சமீபத்தில் வந்த தகவலின்படி குயின் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளாராம்.இவர் நயன்தாராவிடம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூற, அவரும் சம்மதித்து விட்டார், மேலும் படத்தை யார் இயக்குவது என கேட்க, நானே தான் என தியாகராஜன் கூறியிருக்கிறார்.நயன்தாரா ‘முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன், நீங்கள் இயக்குவதாக இருந்தால் வேண்டாம்’ என நேரடியாக கூறிவிட்டாராம்.

நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை: - ஸ்ருதி மனம் திறக்கிறார்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வருகிறார்.இதுவரை ஸ்ருதி நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு பாடலாவது பாடி விடுவார். ஆனால், S3 படத்தில் எந்த ஒரு பாடலும் இவர் பாடவில்லையாம்.இதுக்குறித்து இவரிடம் கேட்கையில் ‘நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை, இயக்குனர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் விரும்பினால் மட்டுமே பாடுவேன்’ என கூறியுள்ளார்.