சினிமா செய்தித் துளிகள்
தயாரிப்பாளரை திருமணம் செய்யும் பாவனா
27 Feb,2016
நடிகைகளுக்குள் போட்டி இருப்பது அவசியம்: அனுஷ்கா
‘‘நடிகைகளுக்குள் ஒருவருக்கொருவர் பொறாமை இருக்கும் என்றும் ஒரு நடிகைக்கு பெயரும் புகழும் கிடைப்பதை இன்னொரு நடிகை விரும்பமாட்டார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன். பழைய நடிகைகள் மத்தியில் அடிக்கடி தகராறுகள் நடக்கும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒருவருக்கொருவர் நட்பாக பழகுகிறார்கள். ஒரு நடிகை திறமையாக நடித்து இருந்தால் அவரை போனிலோ நேரிலோ பாராட்டுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலைமை ஆகும். மற்ற நடிகைகள் சிறப்பாக நடித்து இருந்தால் அவர்களை நான் பாராட்ட தயங்க மாட்டேன்.
‘லிங்கா’ படத்தில் நானும் சோனாக்சி சின்காவும் இணைந்து நடித்து இருந்தோம். சோனாக்சி பிரமாதமாக நடித்து இருந்தார். நான் அவரை தொடர்பு கொண்டு நடிப்பை பாராட்டினேன். படம் ஓடாவிட்டாலும் உன் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று கூறினேன். இதுபோல் தமன்னாவையும் பாராட்டி இருக்கிறேன்.
நடிகைகளுக்குள் பொறாமை இருக்கக்கூடாது. ஆனாலும் நடிப்பில் போட்டி இருப்பது அவசியம். நானும் இதர நடிகைகளும் நட்பாக பழகுகிறோம். ஆனாலும் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. போட்டி இல்லை என்றால் சாதிக்க முடியாது. மற்ற நடிகைகளை விட சிறப்பாக நடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நடிகையும் நினைக்க வேண்டும்.
அதற்கான கதாபாத்திரங்களை தேட வேண்டும். அப்படி போட்டி மனப்பான்மை இருந்தால் தான் முன்னேற முடியும். ஒரு நடிகை நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கலாம் என்று நடிகைகள் நினைப்பது உண்டு. அதில் தவறு இல்லை. கடவுள் தயவால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்தன. பாகுபலி இரண்டாம் பாகம் வேடமும் நன்றாக அமைந்து இருக்கிறது. என்மேல்தான் எனக்கு பொறாமை இருக்கிறது.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

சமஸ்கிருதி பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகிறார்
.
9ம் வகுப்பு படிக்கும்போதே மை பேஃன் ராமு என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமஸ்கிருதி. காடு படத்தில் விதார்த்தின்
ஜோடியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சமீபத்தில் சேதுபூமி படத்தில் தமன் குமார் ஜோடியாக நடித்தார். வில் அம்பு படத்தில் ஸ்ரீயின் ஜோடியாக நடித்தார். இதுதவிர 5க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணா என்ற தமிழ் படத்திலும், ஹேப்பி பெர்த்டே என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
சமஸ்கிருதி நடித்தாலும் படிப்பை விடாமல் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இன்னும் ஒரு மாத்தில் பிளஸ் ஆண்டு இறுதி தேர்வு நடக்க இருப்பதால் வீட்டில் உட்கார்ந்து சீரியசாக படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும்
ஏதாவது ஒரு டிகிரி படிக்க வேண்டும், பரத நாட்டிய பயிற்சியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருக்கிறார். தேர்வுக்கு பிறகுதான்
இனி நடிப்பு என்றும் முடிவு செய்திருக்கிறார். யாராவது கதை சொல்ல சென்றால்கூட அவருக்கு பதில் அவரது அம்மாதான் கதை கேட்கிறார்.
அரசியலுக்கு நிச்சயம் வருவேன்: ராதிகா சரத்குமார் உறுதி
.
அரசியலுக்கு உரிய தலைமை பண்பு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்திடம் இல்லை, என, நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.ராதிகா சரத்குமார், தற்போது நடிகர் விஜய்க்கு அம்மாவாக, தெறி படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா, குடும்ப பணிகள், அரசியலுக்கு வருவது குறித்து, ராதிகா சரத்குமார் கூறியதாவது: சினிமாவில் இதுவரை, 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஒவ்வொரு படமும் எனக்கு பாடமாக அமைந்து வருகிறது. ஒவ்வொருரிடமும் தனித்தனியே கற்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. நாம் எந்த பணியை செய்தாலும், அதில் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்; பயத்தை காட்டினால், அவ்வளவு தான்.
வதந்தி பரப்பினர் : என் கணவர் சரத்குமாரின் கட்சி விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை. அவர், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கு நான்
காரணமாக இருக்கலாம் என, சிலர் வதந்தியை பரப்பினர். கட்சியை பொறுத்தவரை, சரத் எடுக்கும் முடிவு தான்; நான் தலையிடுவதில்லை. அவரது மாநாட்டு முடிவை உங்களை போலவே நானும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளேன்
நிச்சயம் அரசியலுக்கு வருவேன் : இப்போதைக்கு, நான் அரசியலுக்கு வரமாட்டேன்; ஆனால், நிச்சயம் வருவேன். எந்த வேலையாக இருந்தாலும், அதில், 100 சதவீதம் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்போது வந்தால், முழு கவனத்துடன் செயல்பட முடியாது. நிறுவனம், குடும்ப பணிகளே நிறைய உள்ளன. சட்டசபை தேர்தலில், வேட்பாளராக களம் இறங்குவேனா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. கட்சி மற்றும் தேர்தல் விஷயங்களை சரத்குமாரே பார்த்துக் கொள்கிறார். அதில், அவர் நேர்மையாக, 100 சதவீத உழைப்புடன் பணியாற்றி வருகிறார்.
விஜயகாந்த் சரிப்பட்டு வர மாட்டார் : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளேன். சிறந்த மனிதர்; உதவும் குணம் கொண்டவர். ஆனால், சராசரியான மனிதராக இருந்து பார்க்கும்போது, தலைமை பண்புக்கு விஜயகாந்த் சரிப்பட்டு வர மாட்டார். திட்டி பேசும் அவரது அரசியல் பாணி, தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. காஞ்சிபுரம் மாநாட்டில் அவர் பேசியதை புரிந்து கொள்ளவே முடியவில்லை. என் கணவரிடம், விஜயகாந்த் பேசியதை ஒலிபரப்பி, புரிந்தால் சொல்லுங்கள் என்றேன். அவர் சிரித்தபடியே சென்று விட்டார்.
குஷ்பு பற்றி நோ கமென்ட்ஸ் : நடிகை குஷ்புவை பற்றி, நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. சமீபத்தில், பத்திரிகை, கார்ட்டூன் ஒன்றை பார்த்தேன். அதில், காந்தி, நேரு வளர்த்த காங்கிரசுக்கு சமர்ப்பணம் என, எழுதப்பட்ட வாசகத்தின் அருகே, நக்மாவும், குஷ்புவும் இருந்ததை பார்த்தேன்.
என் மகள் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. அதற்கான பணிகளில்,பிசியாக உள்ளேன். மக்கள் தற்போது அமைதியாக இருப்பதை பார்க்கும் போது நிச்சயம், நல்ல முடிவையே எடுப்பார்கள் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் நடிகை பூனம்!
உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூணம். இவர் நிறைய தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கூட Bangles என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில் இவருக்கு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கரண் சிங் கிரோவர் நடிக்கும் இப்படத்தில் தான் நாயகியாக பூனம் நடிக்கிறார். அன்கூஷ் பட் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்குமாம்.
உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூணம். இவர் நிறைய தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கூட Bangles என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.இந்நிலையில் இவருக்கு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கரண் சிங் கிரோவர் நடிக்கும் இப்படத்தில் தான் நாயகியாக பூனம் நடிக்கிறார். அன்கூஷ் பட் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்குமாம்.
தயாரிப்பாளரை திருமணம் செய்யும் பாவனா
பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் திரைப் படங்களிலும் பாவனா நடித்துள்ளார்.
டைரக்டர் மிஷ்கின் டைரக்ஷனில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து அஜித் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானார்.
தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என்று தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாக திரை உலகில் கிசு கிசு கிளம்பியது. அதை பாவனா மறுத்துவந்தார். தற்போது பாவனா தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை.
எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.