
வெள்ளை பன்றி நடிக்கும் 'ஜெட்லி': 2 ஹீரோயின்
.
ஆடு நடிச்ச படம் பார்த்திருக்கோம், மாடு நடிச்ச படம் பார்த்திருக்கோம், நாய் நடிச்ச படம் பார்த்திருக்கோம், யானை நடிச்சு பார்த்திருக்கோம், ஏன்
பாம்பு நடிச்சுகூட பார்த்திருக்கோம். ஆனால் பன்றி நடிச்ச படத்தை பார்த்திருக்கோமா.. பார்த்திருக்கோமோ... அந்த குறையை போக்க விரைவில் வருகிறது ஜெட்லி என்ற படம். இதில் பார்வதி நாயர், அருந்ததி நாயர் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஜெட்லி என்ற பன்றிதான் ஹீரோ. சத்யா இசை அமைக்கிறார், துலிப்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
"மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து கலாட்டாவாக தயாராகிறது இந்தப் படம். நிஜ பன்றியும், கிராபிக்ஸ் பன்றியும் இணைந்து கலக்கப்போகிறது. மக்களுக்கு அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துத் தான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டா தான் 'ஜெட்லி' “ ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரிகிறார்கள். நார்னியா, லயன் போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார்.
மிக உயரிய தொழில்நுட்பத்துடன் ஜெட்லி உருவாகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது" என்றார் இயக்குனர் ஜெகன் சாய்.

கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்!
.
மலையாளத்தில் பஹத்பாசில் நடித்து கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த மன்சூன் மேன்கோஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன்.
அதையடுத்து தமிழில் கழுகு கிருஷ்ணா நடிக்கயிருக்கும் வீரா படத்தில் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிமேனன் வரிசையில் நானும் ஒரு இடத்தை பிடித்து விடுவேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
மேலும் அவர் கூறுகையில், நான் மலையாள பெண்ணாக இருந்தபோதும் நான் வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை நந்தனத்தில்தான். அதனால் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்து வந்தது. ஆனபோதும் முதல்வாய்ப்பு மலையாளத்தில் பஹத்பாசிலுடன் கிடைத்ததால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். அந்த படத்தில் எனது பர்பாமென்ஸ்க்கு நல்ல பெயர் கிடைத்து. அதோடு, அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தமிழில் கிருஷ்ணா நடிக்கும் வீரா படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். அதனால் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் வீரா படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கிறேன்.
மேலும், ரஜினி சார் நடித்த படத்தின் டைட்டில்தான் அந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை முறைப்படி வாங்கி விட்டனர். ராஜாராம் என்ற புதியவர் இயக்கும் இந்த படம் வடசென்னை சார்ந்த கதையில் உருவாகிறது. இதில் ஊட்டியில் படித்து விட்டு வரும் பெண்ணாக நான் நடித்திருக்கிறேன். எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நிறைய ஸ்கோப் உள்ளது. இந்த படம் முழுக்க நான் ஹோம்லியான பெண்ணாகத்தான் நடித்திருக்கிறேன்.
அதோடு, இந்த வீரா படத்திற்கு பிறகுதான் அடுத்த நடிக்கும் படத்தில் கமிட்டாவேன். காரணம், இந்த படத்தில் எனது திறமையை நிரூபித்த பிறகுதான் என்னைப்பற்றி டைரக்டர்களுக்கு தெரியவரும். அப்போதுதான் நான் எதிர்பார்க்கிற மாதிரியான வெயிட்டான நாயகி வேடங்கள் கிடைக்கும். அதனால்தான் வீராவுக்கு பிறகே புதிய படங்களில் கமிட்டாவேன் என்று சொன்னேன் என்று கூறும் ஐஸ்வர்யா மேனன், கிளாமராக நடிப்பேன். ஆனால் எனது உடல் அமைப்புக்கு பொருந்தக்கூடிய காஸ்டியூம்களைத்தான் அணிவேன். வல்கராக இல்லாமல் அனைவரும் ரசிக்கக்கூடிய அளவிலேயே கிளாமர் காட்டுவேன். குறிப்பாக, சாட்ஸ் அணிந்தால் எனக்கு ரொம்ப க்யூட்டாக இருக்கும். அதனால் அந்த மாதிரி என்னை அழகுபடுத்திக்காட்டும் காஸ்டியூம்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா

அப்பாவுடன் இணைந்து பணி புரியும் நாளுக்காக காத்திருக்கிறேன்: - ஸ்ருதிஹாசன்
எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை! - அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறார் கீர்த்தி ஷெட்டி!