சினிமா செய்தித் துளிகள்
இசையுடன் இணையும் சமந்தா! வதந்திகளுக்காக தயங்குகிறாராம்!
23 Feb,2016

நான்கு கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா? - அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்
சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது நயன்தாராவிற்கு. ஆனால், இன்றும் அவருக்கான ஈர்ப்பு ரசிகர்களிடம் துளி அளவும் கூட குறையவில்லை.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார். இவர் நடிக்கும் படங்களுக்கு குறைந்தது ரூ 2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் இவரை கமிட் செய்ய பிரபல தயாரிப்பாளர் வர, அவரிடம் தன் சம்பளம் ரூ 4 கோடி என நயன்தாரா கூற, அவர் அச்சத்தில் உறைந்தே போய்விட்டாராம்.
சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது நயன்தாராவிற்கு. ஆனால், இன்றும் அவருக்கான ஈர்ப்பு ரசிகர்களிடம் துளி அளவும் கூட குறையவில்லை.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார். இவர் நடிக்கும் படங்களுக்கு குறைந்தது ரூ 2 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகின்றது.சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் இவரை கமிட் செய்ய பிரபல தயாரிப்பாளர் வர, அவரிடம் தன் சம்பளம் ரூ 4 கோடி என நயன்தாரா கூற, அவர் அச்சத்தில் உறைந்தே போய்விட்டாராம்.
இசையுடன் இணையும் சமந்தா! வதந்திகளுக்காக தயங்குகிறாராம்!
தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் முன்னணியில் இருப்பதால் தான் நடிகராக அறிமுகமாகும் படம் இருமொழிப் படமாக இருக்கவேண்டும் என்று முடிவுசெய்து, தெலுங்கின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர் ஒருவரை புக் செய்துவிட்டார் தேவி ஸ்ரீபிரசாத். தனக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவை வற்புறுத்துகிறாராம். இசையமைப்பாளராக இருந்தபோதே பிரணிதாவோடு தன்னை இணைத்து கிசுகிசுக்களைப் பரப்பியவர் என்பதால், அவரோடு ஜோடி சேர்ந்தால் தன்னையும் இணைத்து காது, மூக்கு வைத்து வதந்திகளை உருவாக்குவாரோ என்று தயங்குகிறாராம் சமந்தா.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் எமி ஜாக்ஸன் அனிருத் புகைப்படம்!
எமி ஜாக்ஸன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் சில கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது நெட்டில் வரும். இதை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.இந்த முறை இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதில் இருவரும் மிக நெருக்கமாக உள்ளனர். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

6 ஹீரோயின்கள் நடித்த இளமை ஊஞ்சல் ரிலீசுக்கு ரெடி
சின்னத்திரையில் ஒளிபரப்பான மங்கை தொடர் மூலம் புகழ்பெற்றவர் அரிராஜன். இவர் இயக்கியுள்ள திரைப்படம் மன்மத ராஜாக்கள். தற்போது
படத்தின் தலைப்பை இளமை ஊஞ்சல் என்று மாற்றி இருக்கிறார். கார்த்திக் பூபதிராஜா இசை அமைத்துள்ளார், கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் நமீதா, கிரண், மேக்னா நாயுடு உள்பட 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதுவும் கவர்ச்சியாக நடித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் ஒக்கேனக்கலுக்கு சுற்றுலாச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் ஜாலியா பொழுதை கழிக்கிறார்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொல்வது யார், ஏன் என்பதை சஸ்பென்சாக காட்டும் படம். கொலையை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நமீதா நடித்துள்ளார். இன்று படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.
நயன்தாரா, சமந்தாவை தொடர்ந்து தமன்னா!
.
இன்றைய கால சினிமா நடிகைகள் படத்தில் நடிப்பது, ஒரு சில நடிகைகள் அப்படத்தின் புரொமோஷன் விழாக்களில் கலந்து கொள்வது என்பதோடு இருந்து விடுவர். டப்பிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இருப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் கொடுக்க முன்வந்துள்ளனர்.
அதன் தொடக்கமாக நயன்தாரா, சமந்தா என தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்தனர்.
அவர்களை அடுத்து தற்போது தமன்னாவும் டப்பிங் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கில் ஊபிரி படத்திலும், தமிழில் தர்மதுரை படத்திலும் டப்பிங் பேச இருக்கிறாராம்.