விரைவில் படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளேன்: நித்யா மேனன் பேட்டி
நடிகை நித்யா மேனன் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிபடங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் ரசிகர்களிடம், ‘ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2’ படங்கள் அவரை பிரபலப்படுத்தியது. ‘நூற்றியென்பது, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது சூர்யாவுடன் ‘24’ என்ற படத்தில் நடிக்கிறார். விரைவில் டைரக்டராகப்போவதாக நித்யா மேனன் அறிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘எனக்கு கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் நல்ல நல்ல கதைகளை எழுதி வருகிறேன். இந்த கதைகளை வைத்து விரைவில் படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளேன். இப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு மார்க்கெட் இருப்பதுவரை நடிப்பேன். படங்கள் குறைந்ததும் டைரக்டர் ஆகி விடுவேன். படப்பிடிப்புகளில் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு விட்டேன். டைரக்டர்கள் என்னிடம் கேட்டால் அவர்கள் எடுக்கும் படத்தில் திருத்தங்கள் சொல்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு கதை அறிவு உள்ளது. நல்ல படங்கள் அதிகம் வரவேண்டும். அதற்காகத்தான் நான் டைரக்டராகப் போகிறேன். நான் குள்ளமாக இருப்பதாக பலர் பேசுகின்றனர்.

இதனால் எனக்கு வருத்தம் இல்லை. என்னுடன் துல்கர் சல்மான், நிதின், சந்தீப் மேனன் உள்பட பல கதாநாயகர்கள் நடித்து இருக்கிறார்கள். எல்லோருமே உயரமானவர்கள். சில காட்சிகளை ஸ்டூலில் என்னை நிற்க வைத்துதான் படமாக்குகின்றனர். நான் குள்ளமாக இருப்பதால் உயரமாக இருப்பவர்கள் என்மீது அக்கறை காட்டுகின்றனர். எனக்கு ஆசி வழங்கி வாழ்த்தவும் செய்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.’’ இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
தொழில் அதிபராக அவதாரம் எடுக்க ஆசைப்படும் காஜல் அகர்வால்!
நடிகை காஜல் அகர்வால் சினிமாவிற்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பிரமோற்சவம் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஜீவாவுடன் கவலை வேண்டாம் படத்தில் நடித்து வருகிறார். தான் சிறந்த தொழில் அதிபராக வலம் வர விரும்புவதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் சிறந்த நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். நான் தேர்வு செய்து நடிக்கும் படங்களில் 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். எனது முதல் படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிறது. இப்போது நடிக்கும் படத்திலும் முதல் படம் போலவே நினைத்து அதே ஆற்றலுடன் நடிக்கிறேன். எனது தங்கை நிஷாவும், நானும் ஜூவல்லரி தொழில் ஆரம்பித்துள்ளோம். தென்னிந்தியாவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளேன். பொதுவாக எனது வாழ்க்கையை பற்றி திட்டமிடுவது இல்லை.

ஆனால் நிச்சயம் ஒரு நாள் தொழிலதிபராக வலம் வருவேன். தற்போது எனது சொந்த வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் சேர்ந்து கவனிப்பது சிரமமாக உள்ளது. எனது திருமணத்தை பற்றி முடிவு செய்யவில்லை. தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். யார் வேண்டுமானாலும் ஒரு படத்தில் வெற்றி பெற முடியும். அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது தான் உண்மையில் மிகப் பெரிய சாதனை. அதை நான் தக்கவைத்துள்ளேன் என்று கூறினார்.

இயக்குனர் சாஜித்கானுடன் திருமணம் செய்கின்றாரா தமன்னா!
பாகுபலி-2, தர்மதுரை, ஜீவாவின் புதிய படம் என தமிழில் பிஸியாக நடித்து வருகின்றார் தமன்னா. இந்நிலையில் இவர் பாலிவுட்டில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித்கானுடன் இவர் காதலில் விழுந்ததாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.இதுக்குறித்து தமன்னா கூறுகையில் ‘நான் யாரையும் தற்போதைக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை’ என கூறியுள்ளார்,

தான் படித்த பள்ளிக்கு தமன்னாவை அழைத்து வரவுள்ள கார்த்தி!
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தோழா’. இதில் கார்த்தி ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகியப் படங்களில் நடித்து அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுன் தமிழில் நடித்திருக்கிறார்.ஒரு மாற்று திறனாளிக்கும், மனரீதியாக பெரும் போராட்டத்தில் ஈடுபடும் ஒருவனுக்கும் நடக்கும் போராட்டமே 'தோழா' படத்தின் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை 26ம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.இந்த விழாவை கார்த்தி சிறுவயதில் படித்த பள்ளியான சென் பீட்ஸ் பள்ளியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். தான் சிறுவயதில் படித்த பள்ளிக்கு நாயகி தமன்னாவை கார்த்தி அழைத்து வர இருக்கிறார் என்றும் இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 2500 மாணவர்கள் முன்னிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.பி.வி.பி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ் ராஜ், விவேக், ஜெய சுதா, மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

நயன்தாராவுடன் நடிக்க மறுத்த பார்த்திபன்: ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நயன்தாராவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.அப்படியா!!! என்றால் தற்போது இல்லை, நயன்தாரா முதன் முதலாக நடிக்க வேண்டிய படம் குடைக்குள் மழை படத்தில் தானாம்.ஆனால், அவர் பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டாராம், இதன் பிறகு தான் அவர் ஐயா படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதை பார்த்திபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.மேலும், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் நயன்தாராவிடம் நல்ல வேலை நீங்கள் அந்த படத்தில் நடிக்கவில்லை, அப்படி நடித்திருந்தால் உங்கள் தலையெழுத்தே மாறியிருக்கும் என ஜாலியாக கூறியுள்ளார். அதான் பார்த்திபன்.