சினிமா செய்தித் துளிகள்
அரசியல்வாதியாக மாறிய த்ரிஷா
18 Feb,2016

ஒரே படத்தில் உயர்ந்த நயன்தாரா சம்பளம்
.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயருடன் மட்டுமல்லாமல் தென்னிந்தியத் திரையுலகிலும் அதிக சம்பளம்
வாங்கும் நடிகை என்ற பெயரையும் நயன்தாரா பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை எடுத்தவர் நயன்தாரா. அவருடைய அழகும், நடிப்பும் ரசிகர்களை இன்னும் கவர்ந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம்.
இன்னமும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாத பலர் அவரைத் தங்களது படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் அந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது. சில வருடங்களுக்கு முன்பே 1 கோடி ரூபாய் சம்பளத்தைக் கடந்தவர் நயன்தாரா. அப்போதே அவருடைய போட்டியாளர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
தற்போது புதிய படம் ஒன்றிற்கு நயன்தாரா வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டால் அவர்கள் மயங்கி விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இயக்குனர் சற்குணம் தயாரிப்பில், அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்க உள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிப்பதற்காக அவருக்கு 3 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ஹீரோக்கள் கூட வாங்காத சம்பளம் அது ஹீரோக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
சம்மரில்' சமந்தாவின் நான்கு படங்கள் ரிலீஸ்
.
கோடை விடுமுறையை ஆங்கிலத்தில் 'சம்மர்' என அழைப்பது நம்மவர்களிடம் அதிகம் காணப்படும் பழக்கம். இந்த ஆண்டு 'சம்மர்', சமந்தாவின்
சம்மர் ஆக அமைய உள்ளது. தமிழ், தெலுங்கில் மட்டும் அவர் நடித்துள்ள நான்கு படங்கள் வெளிவர இருக்கிறது.
தமிழில் சூர்யா ஜோடியாக நடித்துள்ள '24', விஜய் ஜோடியாக நடித்துள்ள 'தெறி', தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்துள்ள 'பிரம்மோற்சவம்', நிதின் ஜோடியாக நடித்துள்ள 'அ ஆ' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. குறுகிய கால இடைவெளிக்குள் இந்தப் படங்கள் அடுத்தடுத்து ஏப்ரல், மே மாதங்களில் வெளியாக இருக்கின்றன.
அது மட்டுமல்லாமல் அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' படத்திலும், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'ஜனதா கேரேஜ்' படத்திலும், கிருஷ்ணவம்சி இயக்க உள்ள'ருத்ராக்ஷா' படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார். சம்மர் மட்டுமல்லாது இந்த ஆண்டு முழுவதும் சமந்தாவின் ஆண்டாகவே அமையப் போகிறது.
எவரையும் கவர்ந்து விடும் சின்னத்திரை
.
சின்னத்திரையில் பலரின் மனதை கவர்ந்த ஏன் இப்போதும் பல ரசிகர்கள் மனதில் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருப்பவர் டிடி.DD என்றால் தூர்தர்ஷன்
என்று தெரிந்த நமக்கு அதை மறக்க செய்து தன் பெயரை மட்டுமே ஞாபகம் வரச்செய்த திவ்ய தர்ஷினிக்கு இன்று பிறந்த நாள்.17 பிப்ரவரி 1985 அன்று பிறந்த திவ்யதர்ஷினி தொகுப்பாளினியாக தன் பயணத்தை பிரபல தொலைக்காட்சியில் தொடங்கிய போது 14 வயது. பின் ரஜினி, கமல் என பல ஜாம்பவான்களை உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக அறிமுகமானார்.பின் சிறு வேடங்களில் நள தமயந்தி, விசில் போன்ற படங்களில் தலையை காட்டி, பல நாடங்களிலும் நடித்தார். சரோஜா, கோவா போன்ற படங்களில் இவர் முக்கிய வேடங்களுக்கு டப்பிங் கொடுத்தார்
என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று.அதை தொடர்ந்து தன்னுள் இருக்கும் தொகுப்பாளினிக்கு மட்டும் உயிர் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பின் என்ன இவர் தொகுப்பாளராக இருக்கும் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஏன் இவர் தொகுத்த நிகழ்ச்சியினாலே அந்த தொலைக்காட்சியின் TRP எகிறியது என்று சொன்னால் மிகையாகாது. தனது அக்கா ப்ரியதர்ஷினி கூட நல்ல தொகுப்பாளினிதான் ஆனால் அவரின் சாயலோ, தாக்கமோ இருக்காது.இவரின் சிறப்பம்சமே இவரின் தனித்தன்மை தான், எளிதாக எல்லோர் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்து விடுவார். இவரின் நிகழ்ச்சியினால், இன்னும் சொல்லப்போனால் இவரின் கேள்விகளால் தான் பல நட்சத்திரங்களின் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிக்கொண்டு வந்தார்.வெள்ளித்திரையில் நயன்தாரவை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பது போல், சின்னத்திரையில் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது டிடியாகத்தான் இருக்கும். இனி எத்தனை தொகுப்பாளர்கள் வந்தாலும் ’டிடி போல் வராது” என நம்மை அறியாமல் நமது உதடுகள் உச்சரிக்கும்
எங்கள் காதல் அக்ஷய் குமாரால் தான் உருவானது: - தன் காதல் கதையை கூறிய அசின்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர் அசின். இவர் சமீபத்தில் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.திருமணம் முடிந்து இவர் அளித்துள்ள பேட்டியில் ‘ஹவுஸ்புல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்ல விமான நிலையத்தில் நானும் அக்ஷய் குமார் நின்றுக்கொண்டு இருந்தோம்.அப்போதும் அக்ஷய் தான், ராகுலை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார், அதை தொடர்ந்து உனக்கு ஏற்ற ஜோடி ராகுல் மிஸ் செய்யாதே என்றார்.ராகுலும் என் தொலைப்பேசி எண்ணை வாங்கி கொண்டார், பின் என் வீட்டிற்கே நேரடியாக வந்து என் அப்பாவிடம் ‘உங்கள் மகளை நான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்’ என கேட்டார்.இருவருக்குமே பிடித்து விட்டதால் அப்பாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார், குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக செல்கின்றது’ என அசின் கூறியுள்ளார்.

அரசியல்வாதியாக மாறிய த்ரிஷா: - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் அரிதான விஷயம் அல்ல. காலம் காலமாக பல நடிகைகள் அரசியலில் ஜெயிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.இப்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நடித்துவரும் த்ரிஷா, அதில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். படபிடிப்பிற்காக த்ரிஷா படத்துடன் ஒரு பிரம்மாண்ட பேனர் வைத்திருந்தனர். அதன் மூலம் இந்த செய்து கசிந்துள்ளது.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா நடிக்கின்றனர்.

விஜய்யுடன் நடிப்பது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
விஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நீண்ட நாட்களாக அவர் இதுக்குறித்து ஏதும் கூறாமல் இருந்தார்.தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் கீர்த்தி இதுக்குறித்து ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘ஆம், விஜய் சாருடன் நான் நடிப்பது உறுதியாவிட்டது.மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார். ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கீர்த்தி சுரேஷிற்கு தெரிவித்து வருகின்றனர்.