
காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக வந்து பரபரப்பு ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக வந்து பரபரப்பு ஏற்படுத்திய சிம்பு-நயன்தாரா
இன்று காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர், நடிகர்களும் காதலர் தினத்தை வரவேற்று, அதை கொண்டாடியும் வருகிறார்கள்.
இந்நிலையில், சினிமாவில் மட்டுமில்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் இன்றைய காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள்.
சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே, இந்த காட்சி எடுக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காதலர் தினமான இன்று ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், சிம்புவும், நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீ

கார் கவிழ்ந்து விபத்து: பிரணிதா உயிர் தப்பினார்
கார்த்தி ஜோடியாக ‘சகுனி’ படத்தில் நடித்தவர் பிரணிதா. ‘மாசு’ படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பிரணிதாவுக்கு 23 வயது ஆகிறது. அவரது சொந்த ஊர் பெங்களூரு. பிரணிதா நேற்று தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் துணிக்கடை திறப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும், காரில் ஐதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடைய தனி உதவியாளர், டிரைவர் மற்றும் 2 பேரும் அதே காரில் சென்றனர். நல்கொண்டா மாவட்டம் மோதே போலீஸ் நிலையம் அருகே ஒரு வளைவில் கார் சென்றபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர், காரை லேசாக திருப்பினார்.
அப்போது கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரணிதா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கார் டிரைவருக்கும், மற்றொருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அருகில் சாலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சிலர், ஆம்புலன்சை வரவழைத்து, காயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நடிகை பிரணிதாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று மோதே போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராம் ஆஞ்சநேயலு தெரிவித்தார்.
இந்த விபத்து பற்றி நடிகை பிரணிதா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-
நான் நலமாக இருக்கிறேன். கவலைப்பட எதுவும் இல்லை. என் உதவியாளர் காயம் அடைந்துள்ளார். ஆனாலும், நாங்கள் எல்லோரும் பத்திரமாகவே இருக்கிறோம். உரிய நேரத்தில் ஆம்புலன்சை வரவழைத்த சாலைப் பணியாளர்களுக்கு பெரிய நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மறைந்த என்.டி.ராமராவ் பேரனும், நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் கடந்த 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்து விட்டு காரில் திரும்பியபோது இதே இடத்தில்தான் விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனம் பாஜ்வாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்கள்!
.
மும்பை நடிகையான பூனம் பாஜ்வா தமிழில் பல படங்களில் நடித்து விட்டபோதும் இன்னமும் பேசப்படும் நடிகையாகவில்லை. அதோடு, சமீபத்தில்
அவர் நடித்து வெளியான ரோமியோ ஜூலியட், அரண்மனை-2 படங்களில் ஏற்கனவே சில படங்களில் கிளுகிளுப்பான வேடங்களில் நடித்த மும்தாஜை நினைவு படுத்தும் வகையிலான வேடங்களில் நடித்திருந்தார். அதனால் அதையடுத்து அவர் சிலரிடத்தில் கதாநாயகி வாய்ப்புக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அவருக்கு மீண்டும் கிளுகிளு வேடங்கள் கொடுக்கவே முன்வந்தார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து விட்டாராம் பூனம்பாஜ்வா.
அதேசமயம், சில அபிமானிகள், முன்பை விட இப்போது உடம்பு வெயிட் போட்டு விட்டது. அதனால் முதல் வேலையாக உடல் எடையை குறையுங்கள். இப்படி இருந்தால் அந்த மாதிரி வேடம்தான் தருவார்கள் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்களாம். அதனால் இதுவரை தனது உடம்பு விசயத்தில் யார் எந்த அட்வைஸ் கொடுத்தாலும் செவி சாய்க்காமல் இருந்து வந்த பூனம் பாஜ்வா, இப்படியே விட்டால் தன்னை அடுத்த மும்தாஜ் ஆக்கி விடுவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டதை அடுத்து உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமடைந்திருக்கிறாராம்.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஹன்சிகா!
.
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி நடித்தவர்
ஹன்சிகா. அதனால் குறுகிய காலத்தில் பேசப்படும் நடிகையாகி விட்டார். அந்த வகையில், ரோமியோ ஜூலியட், வாலு படங்களைத் தொடர்ந்து ஜீவாவுடன் அவர் நடித்துள்ள போக்கிரிராஜா படம் வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இதையடுத்து மனிதன் உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. அதோடு சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்காகவும் முயற்சித்து வரும் ஹன்சிகாவுக்கு, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் தற்போது ஏற்பட்டுள்ளதாம். மார்க்கெட் ஓரளவு இருக்கும்போதே அவருடனும் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படும் ஹன்சிகா, அடுத்தபடியாக அஜித்தை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களை தொடர்பு கொண்டு சான்சும் கேட்டு வருகிறாராம். அவரது முயற்சிக்கு இதுவரை கிரீன் சிக்னல் விழவில்லை என்றாலும், அஜித் படவாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் ஹன்சிகா.

வசூல் சாதனையில் நடிகை நயன்தாரா! - ஆச்சரியத்தில் திரையுலகம்
நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த புதிய நியமம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.இப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், மேலும், இதில் நயன்தாராவின் நடிப்பை தான் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இவரால் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதன் மூலம் நயன்தாராவின் ஹிட் ஃபார்முலா இந்த வருடமும் தொடங்கிவிட்டது.
நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடித்த புதிய நியமம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.இப்படம் வெளிவந்த இரண்டு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ 3 கோடி வரை வசூல் செய்து விட்டதாம், மேலும், இதில் நயன்தாராவின் நடிப்பை தான் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இவரால் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இதன் மூலம் நயன்தாராவின் ஹிட் ஃபார்முலா இந்த வருடமும் தொடங்கிவிட்டது.