
நான் நடிகை ஆனதற்காக சந்தோஷப்படுகிறேன்: தமன்னா பேட்டி
தமன்னா நடித்து கடந்த வருடம் 4 படங்கள் வெளி வந்தன. அவற்றில் ‘பாகுபலி’ முக்கிய படமாக அமைந்தது. அதில் போராளி பெண்ணாக வந்தார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார். தற்போது தமிழ், தெலுங்கில் 3 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
‘‘நான் நடிகையானதில் சந்தோஷப்படுகிறேன். சினிமாவில் தினமும் புதிய அனுபவங்கள் கிடைக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைகின்றன. ‘பாகுபலி’ படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். கஷ்டப்பட்டு அதில் நடித்தேன். ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இதனால்தான் சினிமாவில் நிலைத்து இருக்க முடிகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுள் அருளால்தான் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். எனக்கு பிடித்த கடவுள் சித்தி விநாயகர்.
ஒவ்வொரு நாளும் விநாயகரை வணங்கி விட்டுத்தான் வேலைகளை தொடங்குகிறேன். எனக்கு பேராசைகள் கிடையாது. இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த வாழ்க்கை நிலைத்து இருந்தால் போதுமானது. கடவுள் நேரில் வந்தால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். ஆனால் நான் எதுவும் கேட்க மாட்டேன். கடவுள் எனக்கு ஏற்கனவே அளவுக்கு மீறி நிறைய கொடுத்து விட்டார். எனவே கடவுளை நேரில் பார்த்தால் அவருக்கு நன்றி மட்டுமே சொல்வேன்.’’
இவ்வாறு தமன்னா கூறினார்.

பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்: ஹன்சிகா பேட்டி
ஜீவா-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘போக்கிரி ராஜா.’ இதில் சிபிராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா டைரக்டு செய்துள்ளார். பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து ஹன்சிகா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘‘போக்கிரி ராஜா படத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பெண்ணாக வருகிறேன். பொதுச்சேவையில் எனக்கு ஈடுபாடு அதிகம். இந்த விஷயத்தில் எனக்கு தூண்டுதலாக இருப்பவர், பிரதமர் நரேந்திர மோடி. அவரது தூய்மை இந்தியா திட்டம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று உழைக்கும் ஒரு பெண் வேடத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜீவா எனக்கு நண்பராக இருக்கிறார். அவருடன் நடிக்க இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு காட்சியில் நான் நடிக்கப்போவதாக தகவல் பரவி உள்ளது. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. ‘அரண்மனை-2’ படத்தில் நான் நடித்துள்ள பேய் வேடத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் பேய் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன். அஜித்குமார், விக்ரம் போன்றோருடன் இதுவரை நடிக்கவில்லை.
வாய்ப்பு வந்தால் அவர்களுடன் நடிப்பேன். நான் எட்டாவது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது சக மாணவனுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தற்போது யாரையும் காதலிக்கவில்லை. நடிப்பு தொழிலை மட்டுமே காதலிக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்.
இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்காக ஒரு இல்லம் கட்ட முயற்சித்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைய தெரியும். படப்பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும்போது நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளேன். அந்த ஓவியங்களை விரைவில் சென்னையில் கண்காட்சியாக வைத்து ஏலம் விட திட்டமிட்டுள்ளேன். அதில் வசூலாகும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக செலவிடுவேன்.’’
இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
நடிகர் ஜீவா கூறும்போது, ‘‘போக்கிரி ராஜா சிறந்த பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது. நகைச்சுவையும் இருக்கும். காட்சிகளும் புதுசாக இருக்கும். நான் போக்கிரிதனமான துறுதுறு இளைஞனாக வருகிறேன். படப்பிடிப்பில் எனக்கும் சிபிராஜுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என்றார்.

செல்பியை தவிர்க்கும் நந்திதா
‘அட்டக்கத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் நடிப்பில் தற்போது ‘அஞ்சல’ படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை (பிப்ரவரி 12) முதல் வெளியாகவிருக்கிறது.
தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நந்திதா தன்னுடைய சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதை முற்றிலும் தவிர்த்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நமக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொள்வதுதான் செல்பி.
ஆனால், அறிமுகமே இல்லாத ஒருவருடன் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக்கொள்வது என்பது எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது என்றால் என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால், செல்பி எடுப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.
சில ரசிகர்கள் செல்பி என்ற பெயரில் நடிகைகளின் மேல் உரசிப் பார்ப்பது, அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பரவலாக இருந்து வருகிறது. இதனாலேயே நந்திதா செல்பி எடுப்பதை தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

அவளுக்கென புதிதாய் மாறினோம்..! அவளுக்கென கவிதை உளறினோம்..! - அனிருத்தின் காதலர் தின பரிசு!
காதல் என்றாலே ஸ்பெஷல் தான். காதலர்களுக்காக கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துவரும் அனிருத் இந்த வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு ஆச்சரிய பரிசுடன் காத்திருக்கிறார். கடந்த வருட பிப்ரவரி 14ம் தேதி அனிருத் இசையில் வெளியாகி ஹிட் அடித்த பாடல் தான், “எனக்கென யாருமில்லையேஸ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டு லவ்வர் பாயாக இளசுகளின் மனதில் வெயிட்டாக இறங்கினார் அனிருத். அதே பாணியில் இப்பாடலின் இரண்டாவது பாகமாக இந்த காதலர் தினத்திற்கும் ஒரு பாடல் ரெடியாகிவிட்டது. இந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி “அவளுக்கென” என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகவிருக்கிறது. அதற்கான டீஸர் நேற்று வெளியான சில மணிநேரங்களிலேயே செம ரெஸ்பான்ஸ்ஸ
காதல் என்றாலே ஸ்பெஷல் தான். காதலர்களுக்காக கடந்த இரண்டு வருடங்களாக ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்துவரும் அனிருத் இந்த வருடமும் காதலர் தினத்தன்று காதலர்களுக்கு ஆச்சரிய பரிசுடன் காத்திருக்கிறார். கடந்த வருட பிப்ரவரி 14ம் தேதி அனிருத் இசையில் வெளியாகி ஹிட் அடித்த பாடல் தான், “எனக்கென யாருமில்லையேஸ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டு லவ்வர் பாயாக இளசுகளின் மனதில் வெயிட்டாக இறங்கினார் அனிருத். அதே பாணியில் இப்பாடலின் இரண்டாவது பாகமாக இந்த காதலர் தினத்திற்கும் ஒரு பாடல் ரெடியாகிவிட்டது. இந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி “அவளுக்கென” என்ற சிங்கிள் டிராக் பாடல் வெளியாகவிருக்கிறது. அதற்கான டீஸர் நேற்று வெளியான சில மணிநேரங்களிலேயே செம ரெஸ்பான்ஸ்ஸ
“அவளுக்கென புதிதாய் மாறினோம்.. அவளுக்கென கவிதை உளறினோம் அவளுக்கென கடல்கள் தாண்டினோம்ஸ அவளுக்கெனஸ அவளுக்கெனஸ.” இவ்விரு பாடல்களையும் அனிருத் இசையமைக்க, “நானும்ரவுடிதான்” பட இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. இந்த காதலர் தினத்தன்றும் அனிருத்தின் சிங்கிள் டிராக் ரெடிஸ ஆனால் இந்த காதலர் தினத்தன்று 15000 ரசிகர்களோடு மலேசியாவில் கொண்டாடவிருக்கிறார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த நயன்தாரா!
.
திரிஷா-நயன்தாரா இருவரும் சமகாலத்து நடிகைகள்தான். அவர்கள் வளர்ந்து கொண்டிருந்தபோது முன்னணி ஹீரோக்களின் படங்களை
கைப்பற்றுவதில் திரைக்குப்பின்னால் அவர்களுக்கிடையே ஏகப்பட்ட மோதல் வெடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக, ஒருத்தருக்கான வாய்ப்பை இன்னொருவர் தட்டிப்பறித்து விட்டால், அவர்களை கண்டபடி வசைபாடுவதும் வழக்கமாக நடந்து வந்தது. அதனால் திரிஷா கலந்து கொள்ளும் விழாக்களில் நயன்தாராவோ, நயன்தாரா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் திரிஷாவை கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
ஆனால் அப்படி இரண்டு துருவங்களாக இருந்த அவர்களை தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்கு வரவைத்து பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர வைத்தார் ஆர்யா. அப்போது அவர்களை கைகுலுக்க வைத்து நட்பு வளர்த்து விட்டார். விளைவு, அதிலிருந்து இப்போதுவரை திரிஷா-நயன்தாராவின் நட்பு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம். ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு கருத்து சொல்லும் அளவுக்கு நெருக்கமாக வளர்ந்துள்ளார்களாம்.
விளைவு, சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு தன்னை அணுகியவர்களிடம் தான் பிசியாக இருப்பதாக சொல்லி அந்த வாய்ப்பை திரிஷாவுக்கு திருப்பி விட்டுள்ளாராம் நயன்தாரா. அதோடு அவர் என் ப்ரண்டு, நல்ல ஆர்ட்டிஸ்ட் என்று திரிஷாவுக்கு நற்சான்றிதழ் வாசித்துள்ளாராம் நயன்தாரா.