சினிமா செய்தித் துளிகள்
கோவிலுக்குள் ஆணுறை..!சிக்கினார் சன்னி..
12 Feb,2016

விக்ரம் மனசு யாருக்கு வரும்?: கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என இல்லாத ஒரு நடிகர் என்றால் விக்ரம் மட்டும் தான். இவரை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும். இவர் சமீபத்தில் கேரளாவிற்கு ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார்.அங்கு ஒரு ஹோட்டலில் பணிபுரியும் பெண் விக்ரமுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அவருடன் பெரிய ஆட்கள் இருக்க, ஏமாந்த சோகத்துடன் வெளியேறினார்.இதை கண்ட விக்ரம், உடனே ஓடி சென்று அவர் மேல் கைப்போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். அந்த பெண் இத்தனை பெரிய நடிகர் நம் மீது கை வைத்துள்ளார் என்பதை உணர்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். தட் இஸ் சீயான்.

எனக்கு அவர் மீது காதல் இல்லை? - லட்சுமி மேனன் அதிரடி பதில்
வேதாளம் வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் லட்சுமி மேனன். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் விரைவில் மிருதன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.இதற்காக தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்த இவரிடம் ‘உங்களுக்கும் இயக்குனர் மருதுவிற்கும் காதலா? என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கிறேன், எனக்கு அவர் மீது காதல் இல்லை, ஆனால், அவருக்கு என் மீது காதல் இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை’ என கூறியுள்ளார். இதன் மூலம் இவர் என்ன கூற வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்

போக்கிரி ராஜா படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதை தானாம்!
இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் புலி. இப்படம் பேண்டஸி கலந்த கதையாக தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக இருந்தது.இதை தொடர்ந்து ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடிக்கும் போக்கிரி ராஜா படமும் ஒரு பேண்டஸி கலந்த கதை தானாம். இதில் ஜீவாவும், ஹன்சிகாவும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வர, இருவருக்கும் வழக்கம் போல் காதல் வருகின்றது.இதே நேரத்தில் ஜீவா, சிபிராஜ் நெருங்கிய நண்பர்கள், சிபிராஜால் ஜீவா-ஹன்சிகா காதல் பிரிகின்றது, அதேபோல் ஹன்சிகாவால் ஜீவா-சிபிராஜ் நட்பு பிரிகின்றது.இவர்கள் பிரிவிற்கு காரணம் ஒரு பேண்டஸி கலந்த விஷயம் தான் என்று படத்தின் இரண்டாம் பாதியில் தெரிய வருமாம். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த கதை தானாம், கண்டிப்பாக ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
கோவிலுக்குள் ஆணுறை..! பதிய சாச்சையில் சிக்கினார் சன்னி..!
கடந்த 4 ஆண்டுகளாக நடிப்புத்துறையில் உள்ள சன்னி லியோனுக்குச் சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. 'Mastizaade' இந்தி திரைப்படத்தினால் அவருக்கு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. சன்னி லியோன் மீதும் படக்குழுவினர் மீதும் டில்லி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்தில், கோவிலுக்குள் ஆணுரையைப் பயன்படுத்த கதாபாத்திரங்கள் ஊக்குவிப்பதைச் சித்தரிக்கும் ஒரு காட்சி இருப்பதாக புகாரில் கூறப்பட்டது. ஆபாசமான அந்தக் காட்சி, சமய உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் புகார் குற்றஞ்சாட்டப்படுகிறது. போலீசார் தற்போது அந்தப் புகாரை விசாரித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் தனுஷ் படத்தில் இருந்து ஷாமிலி விலகினைார்:-
தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக திரிஷா, ஷாமிலி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ‘கொடி’ படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திலிருந்து ஷாமிலி விலகியுள்ளார். தனுஷுக்கு கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இதனால், தற்போது நடித்துவரும் படங்களை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க முடியுமோ, அந்தளவுக்கு வேகமாக முடித்துவிட்டு ஹாலிவுட் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆகையால், இப்போது இவர் நடித்து வரும் ‘கொடி’ படத்தை கூடிய விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், இப்படத்தின் நாயகி ஷாமிலியோ ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ‘கொடி’ படக்குழுவினர் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், படக்குழுவினரிடம் முறையாக கூறிவிட்டு, இப்படத்திலிருந்து அவரே விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஷாமிலி தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘வீரசிவாஜி’ படத்தில் நடித்து வருகிறார். ஷாமிலி ‘கொடி’ படத்திலிருந்து விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் நாயகி மடோனா செபஸ்டியான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்கவுள்ளனர்.
அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை கோபமடைந்த ஹன்சிகா!
அரண்மனை-2 வெற்றியுடன் நேற்று போக்கிரி ராஜா சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் ஹன்சிகா. இதில் இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.அதில் குறிப்பாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களாமே’ என கேட்டனர். இதை கேட்ட அடுத்த நிமிடம் அவர் முகம் மாறியது.இதெல்லாம் யார் சொல்கிறார்கள், அப்படி ஏதும் நான் நடிக்கவில்லை, நோ கமெண்ட்ஸ் என கோபமாக கூறினாராம்.