சினிமா செய்தித் துளிகள் பேய் படங்களில் நடிப்பது திரில்லிங்கான அனுபவம்!திரிஷா 
ஆண்ட்ரியாவுக்கு 'ஐஸ்' வைத்த சிம்பு
.
சிம்பு நடித்த படங்களிலேயே, நீண்ட நாள் படப்பிடிப்பில் இருந்தது, இது நம்ம ஆளாகத் தான் இருக்கும். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு
பின், மீண்டும் அவருடன், சிம்பு ஜோடி சேர்ந்த படமிது. இயக்குனருடனான மோதல், கால்ஷீட் பிரச்னை என, இழுத்தடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து விட்டன. ஒரே ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனமாட, நயன்தாராவை அழைத்தபோது, 'ஏற்கனவே ஏகப்பட்ட கால்ஷீட் கொடுத்தாச்சு. இனி வேலைக்கு ஆகாது' என, எகிறி விட்டாராம். இதனால், அவருக்கு பதிலாக, அந்த பாடலுக்கு நடமாட ஹன்சிகாவை அணுகியுள்ளதாம், படக்குழு. நயன்தாரா மீதுள்ள கோபத்தை காட்டுவதற்காக, இது நம்ம ஆளு படத்தில், அவருக்கு முக்கியத்துவத்தை குறைத்து, ஆண்ட்ரியாவுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 'படம், வெளிவந்தபின், இன்னும், என்னென்ன நடக்கப் போகிறதோ' என, புலம்புகிறது கோலிவுட் வட்டாரம்.

இதே வேலையாப் போச்சு!
.
லட்சுமி மேனனை பற்றி, ஏதாவது வதந்தி பரவுவதும், அதை, அவர் மறுப்பதும், வழக்கமாகி விட்டது. 'சினிமாவுக்கு லட்சுமி மேனன் முழுக்கு போட
போகிறார்' என, சமீபத்தில் செய்தி பரவியது. உடனடியாக இதை மறுத்த லட்சுமி, 'எனக்கு, 19 வயது தான் ஆகிறது; இன்னும், 10 ஆண்டுகளுக்கு சினிமாவில் இருப்பேன்' என, மறுப்பு வெளியிட்டார். இந்த வதந்தி அடங்குவதற்குள், அடுத்த வதந்தி ரெக்கை கட்டி பறந்தது. 'லட்சுமி மேனன், சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்துவிட்டார்' என்ற செய்தி தான், அது. பதறிப் போன லட்சுமி, 'டுவிட்டராவது, ஒன்றாவது, அதைப் பற்றி, எனக்கு எதுவுமே தெரியாது' என, மறுப்பு வெளியிட்டார். இந்த பரபரப்புக்கு இடையே, ஜெயம் ரவியுடன், அவர் நடித்துள்ள, மிருதன் படம், வெளியாக தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து, விஜயசேதுபதிக்கு ஜோடியாகவும், ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார், லட்சுமி மேனன்.

புதிய டைட்டில் யோசிக்கும் பிரபுசாலமன்!
.
தனுஷ்-பிரபுசாலமன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ரயில். இந்த படத்தில் தனுசுடன் கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, இமான்
அண்ணாச்சி, கணேஷ் வெங்கட்ராமன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில நடித்து முடித்த தனுஷ் கொடி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், முழுக்க முழுக்க ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்பதால் இந்த படத்திற்கு முதலில் தடக் தடக் என்று பெயர் வைத்திருந்த பிரபுசாலமன், அதையடுத்து ரயில் என்று வைத்தார். ஆனால் ரயில் என்ற வார்த்தைக்கு வரிவிலக்கு கிடைப்பது சாத்தியமில்லை என்று சிலர் சொன்னதை அடுத்து, இப்போது அந்த டைட்டீலையும் மாற்ற முடிவு செய்திருக்கிறாராம். அதனால், தற்போது வேறு சில டைட்டீல்களை முடிவு செய்து வைத்திருக்கும் பிரபுசாலமன், படம் சென்சாருக்கு போகும்போது ரயில் டைட்டீலுக்கு வரிவிலக்கு கிடையாது என்று சொல்லும்பட்சத்தில் கதைக்கு பொருத்தமான வேறு டைட்டீலை வைக்க முடிவு செய்திருக்கிறாராம். ஆக, ரயில் டைட்டீல் தற்காலிகமானதுதானாம்.

கமலைத் தொடர்ந்து அர்ஜூனும் மகளுடன் நடிக்கிறார் !
.
கமலின் மகளான ஸ்ருதிஹாசன், லக் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து தெலுங்கில் நடித்தவர்
ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தில் தமிழுக்கு வந்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பே கமல் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க அவரிடம் கால்சீட் கேட்கப்பட்டது. அப்போது இந்தியில் தான் பிசியாக இருப்ப தாக சொன்னார் ஸ்ருதி. அதோடு, என் அப்பாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உள்ளது. நானும் அதற்கான தருணத்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்று சொன்ன ஸ்ருதிஹாசன், மலையாளத்தில் கமல் நடித் சாணக்யா படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இயக்கும் புதிய படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அர்ஜூனும் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்கப்போகிறாராம். விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் நடித்த ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு அதன்பிறகு படவாய்ப்பு இல்லை. அதனால் ஒரு மெல்லியக்கோடு, நிபுணன் படங்களுக்குப்பிறகு ஒரு படத்தை இயக்கும் அர்ஜூன் அந்த படத்தில் மகள் ஐஸ்வர்யாவை முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்க வைப்பவர், கமர்சியல் கருதி தானும் ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். விரைவில், அதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்

கவர்ச்சிக்கு முழுக்கு போட முடிவு!
.
அரண்மனை - 2 படத்தில், தான் நடித்த கர்ப்பிணி வேடத்துக்கு, ரசிகர்களின் பாராட்டு குவிவதால், உற்சாகத்தில் இருக்கிறார், கோலிவுட்டின் அமுல்
பேபி ஹன்சிகா. 'இதுவரை இப்படிப்பட்ட வேடத்தில் நடித்ததும் இல்லை; இதுபோன்ற பாராட்டுகளும் கிடைத்தது இல்லை' என, கண்களை சுருக்கி, உதட்டை குவித்து பளீர் என, புன்னகைக்கிறார். கவர்ச்சி பொம்மையாக வலம் வந்த ஹன்சிகா, கர்ப்பிணி வேடத்துக்கு கிடைத்த பாராட்டால், தன் ரூட்டை மாற்ற முடிவு செய்துள்ளார். இனியும், கவர்ச்சி பொம்மையாக வலம் வராமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால், கவர்ச்சி ஹீரோயின் வேடத்துக்கு ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்யச் செல்லும் இயக்குனர்கள், சற்று யோசித்து விட்டுச் செல்வது நல்லது.