
ஸ்ருதிஹாசன் கிண்டல், லட்சுமி மேனன் பதறி வெளியேறியது ஏன்?
வேதாளம் படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவருமே நடித்திருந்தனர். இதில் லட்சுமி மேனனுக்கு தான் பலம் நிறைந்த கதாபாத்திரம் என்பது படம் பார்த்த அனைவருக்கு தெரிந்திருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் மிருதன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் லட்சுமி மேனனிடம், உங்கள் குரல் நன்றாக இருக்கின்றதே, நீங்களே டப்பிங் பேசலாமே என கூறியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் யாரோ ஸ்ருதிஹாசன் குரல் குறித்து கிண்டலாக கேட்க, தயவுசெய்து இந்த கேள்வியை என்னிடம் கேட்டேன் என்று கூட சொல்லாதீர்கள் என கூறி இடத்தை காலி செய்தாராம்

சிம்புவுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை- கோபத்தில் ரசிகர்கள்
சிம்பு தற்போது அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து முழுமையாக வெளிவந்துவிட்டார். இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் மார்ச் 24ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதில் இவருக்கு ஜோடியாக முன்னாள் காதலியான நயன்தாரா நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இதே படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஹன்சிகாவை தான் முதலில் அனுகினார்களாம்.
அவரும் சிம்புவின் காதலியாக இருந்ததால், படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருக்கும் என எண்ணியுள்ளனர். ஆனால், அவர் உடனே நடிக்க முடியாது என மறுக்க, இவை சிம்பு ரசிகர்களிடம் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

பேய் படங்களில் நடிப்பது திரில்லிங்கான அனுபவம்! - திரிஷா
கோடம்பாக்கத்தில் பேய் சீசன் தொடங்கியதை அடுத்து சூர்யா, ஜெயம்ரவி என முன்னணி ஹீரோக்களே பேய் கதைகளில் நடித்து விட்டனர். அதோடு, நயன்தாரா, திரிஷா, லட்சுமிமேனன், ராய்லட்சுமி போன்ற முன்னணி நடிகைகளும் பேய் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி
வருகின்றனர். அந்த வகையில், அரண் மனை-2 படத்தில் பேயாக நடித்த திரிஷா, இப்போது நாயகி படத்திலும் பேய் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த அனுபவம் குறித்து திரிஷா கூறுகையில், பேய் கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான தருணம் அரண்மனை-2 படத்தில்தான் கிடைத்தது. முக்கியமாக பேய்க்கு பயந்து நடிப்பதை விட, பேயாக நடிப்பது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. பேயை யாரும் நேரில் பார்த்ததில்லை. என்றாலும் பேய் என்றாலே பயம் வந்து விடும். நானும் அப்படித்தான் யாராவது பேய் கதைகளை சொன்னாலே அக்கம் பக்கம் பார்த்தபடி பக்கத்தில் இருப்பவர்களை நெருங்கி உட்கார்ந்துகொள்வேன்.
அதோடு, படப்பிடிப்பில் நம்மை சுற்றி ஒரு கூட்டமே நிற்கும் என்றபோதும், பேயாக மாறி அந்த கதாபாத்திரமாக நடித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. அந்த அளவுக்கு அரண்மனை-2வில் நான் இயல்பாக மாறி நடித்தேன். இப்போது அதை ஸ்கிரீனில் பார்க்கையில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது. மேலும், இன்னும் மாறுபட்ட பேய் கதைளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது என்று கூறும் திரிஷா, பேய் என்றால் நமக்கு பயம் வருகிறது. ஆனால் அப்படி பேயானவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே பிறகு எதற்காக நாம் பயப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.

அஞ்சலக்கு வழிவிட்ட மாப்ள சிங்கம்
சில வருடங்களுக்கு முன்பு பிசி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் விமல்.
சரியான படங்களை தேர்வு செய்யாததினால் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.
இன்னொரு பக்கம், சின்ன கம்பெனி படங்களில் நடித்ததும் அவருக்கு ஆபத்தாகிவிட்டது.
விமல் நடித்த பல படங்கள் ரிலீஸ் அன்று மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க ஆரம்பித்தன.
ஜன்னலோரம் என்ற படத்தில் வேறு பல ஹீரோக்கள் இருந்தும், அப்படத்தின் ரிலீஸ் அன்று சுமார் 80 லட்சம் கொடுத்தார் விமல்.
அவர் பணம் தரவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் பணம் கொடுத்து உதவினார். அதோடு தன் சம்பளம் 50 லட்சத்தையும் இழந்தார்.
இப்படியாக சம்பாதித்த பணத்தையும் இழந்த விமல் ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தார்.
இப்போதைய அவரது நம்பிக்கை மாப்ள சிங்கம் மற்றும் அஞ்சல படங்கள்தான்.
மாப்ள சிங்கம் சென்சார் ஆகி அறு மாதங்களுக்கு மேலாகிறது.
பசங்க-2 படத்தை வாங்கி வெளியிட்ட கையோடு மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.
இதற்கிடையில் விமல் நடித்த அஞ்சல படமும் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி இருந்தது.
இம்மாதம் வெளி வந்ததிருக்க வேண்டிய மாப்ள சிங்கம், தற்போது அஞ்சல படத்துக்காக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறது.
அஞ்சல பிப்ரவரி 19 அன்று திரைக்கு வருகிறது. இரண்டு வாரங்கள் கழித்து மாப்ள சிங்கம் வருகிறதாம்.