
கவர்ச்சிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்! -சாந்தினி
.
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து ப்ளஸ்-2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்தவர் சாந்தினி. அதன்பிறகு நகுல் நடித்த நான்
ராஜாவாகப்போகிறேன் என்ற படத்தில் நடித்த சாந்தினிக்கு பின்னர் தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லை. அதனால் தெலுங்கு சினிமாவுக்கு சென்று சில படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், சென்னை பெண்ணான எனக்கு தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் இயக்கத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்த போது சந்தோசமடைந்தேன். அந்த படம் எதிர்பார்த்தபடி போகவில்லை என்றபோதும், பாக்யராஜின் அறிமுகம் என்கிற பெருமை எனக்கு உள்ளது.
அதோடு, சினிமாவில் உடம்பைக்காட்டி நடிப்பதை விட திறமையைக்காட்டி நடிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்தான் நான் நடிக்க வந்தேன். அதனால்தான் இப்போதுவரை நான் கிளாமர் விசயத்தில் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறேன். அதற்காக மாடர்னாக நடிக்க மறுக்கவில்லை. பாடல் காட்சிகளில் மிதமான கிளாமர் காட்டி நடிக்கத்தான் செய்கிறேன். ஆனால் ஒருபோதும் ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன். மேலும், இப்போதைய ரசிகர்கள் கிளாமராக நடிப்பவர் களை விட நல்ல பர்பாமென்ஸ் நடிகைகளைத்தான் ரசிக்கிறார்கள். அதனால் எனது கவர்ச்சி கொள்கையில் உறுதியாக இருந்து எப்போதும் லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்கிறார் சாந்தினி.

உஷாரான லட்சுமிமேனன்!
.
சமீபகாலமாக ஒரே டைரக்டரின் படங்களில் தொடர்ந்து நடித்தாலோ அல்லது யாராவது நடிகர்களுடன் அதிகமான செல்பிக்களை எடுத்து
வெளியிட்டாலோ அந்த நடிகைகள் காதல் வளையத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்து வந்தபோது அப்பட டைரக்டரான விக்னேஷ் சிவனுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் நயன்தாரா. ஆனால் அது நயன்தாராவின் மார்க்கெட்டை எவ்வகையிலும் பாதிக்கவில்லை.
ஆனால், இதுபோன்ற கிசுகிசுக்களால் சிலநேரங்களில் மார்க்கெட் சரிவடைவதும் உண்டு. அதன்காரணமாக, தற்போது லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள் உஷாராகி விட்டனர். அதாவது எந்தெந்த டைரக்டர், ஹீரோக்களின் படங்களில் தாங்கள் தொடர்ந்து நடிக்கிறோமோ அவர்களை அண்ணன் என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதில் லட்சுமிமேனனை எடுத்துக்கொண்டால் இதற்கு முன்பு, ஒருமுறை கிசுகிசுவில் சிக்கினார். அதையடுத்து இப்போது ஒரு டைரக்டருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார். ஆனால் இதை தொடரவிடக்கூடாது என்று நினைக்கும் லட்சுமிமேனன், தற்போது அந்த டைரக்டரை மற்றவர்களின் காதில் விழுமாறு அண்ணா அண்ணா என்று அழைக்கிறாராம். மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் என்று சொல்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார் லட்சுமிமேனன்.

சமந்தாவின் மார்க்கெட் சூடு பிடிக்கிறது!
.
தமிழில் அஞ்சான் படத்திற்கு முன்பு வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல்தான் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அஞ்சானில் ரசிக
கோடிகள் மிரண்டு போகும் அளவுக்கு டூ-பீஸ் நடிகையாக பிரவேசித்தார். ஆனால் கத்தி படத்திற்கு பிறகு தொடர்ந்து அதே ரூட்டில் போனால் இன்னும் சில படங்களோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பதால் தங்கமகனில் குடும்ப குத்து விளக்காக நடித்த சமந்தா, இப்போது மாடர்ன் ரோல் என்றாலும் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோடு வைத்தே நடிக்கிறார்.
ஆனால், தெலுங்கில் இப்போது அவர் நடித்து வரும் படங்களில் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோட்டை விலக்கிவிட்டாராம். காரணம், அங்கு இவருக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங், சில படங்களில் கவர்ச்சி சுனாமியாக வெடித்துளளாராம். அதனால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தானும் அஞ்சான் படத்தில் நடித்தது போன்று கவர்ச்சியில் களமிறங்கி நிற்கிறாராம் சமந்தா. இதனால் தெலுங்கில் முதல் ரவுண்டில் கவர்ச்சி எல்லையை அதிகமாக தாண்டாமல் இருந்து வந்த சமந்தா, இப்போது வாரி வழங்கி வருவதால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.