கட்டாய வெற்றியை எதிர்நோக்கும் ஜீவா!
.
நடிகர் ஜீவா, ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதிலும், யான் படத்தின் தோல்வி, அவரது மார்க்கெட்டையே கவிழ்த்து விட்டது. சற்று இடைவெளிக்கு பின், ஹன்சிகாவுடன் போக்கிரி ராஜா
படத்திலும், நயன்தாராவுடன் திருநாள் படத்திலும் நடித்து வருகிறார் ஜீவா. இரண்டு படங்களிலுமே, முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதால், ரசிகர்களிடையே, இந்த படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவதாக, போக்கிரி ராஜா படம் தான் வெளியாகிறது. கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜீவாவை, போக்கிரி ராஜா, கரை சேர்க்குமா என்பது, படம் வெளியானதும் தெரிந்து விடும்

நயன்தாரா பாஸ்போர்ட் புகைப்படம் வெளியானது குறித்து மலேஷிய காவல்துறையில் புகார்!
நயன்தாரா ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து இருமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பை மலேசியாவில் முடித்துவிட்டு நயன்தாரா நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.இதுகுறித்து பேசிய இருமுகன் படக்குழுவினர், மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர்.

பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.நயன்தாரா பாஸ்போர்ட் புகைப்படம் வெளியானது குறித்து மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.

ஆசையை நிறைவேற்றாத கணவர் ! விரக்தியில் இருக்கிறாராம் அசின்!
திரைப்பட நடிகை அசினை அவரது கணவர் ராகுல் ஷர்மா அப்செட்டாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அசின், கஜினி திரைப்படம் மூலம் இந்தியில் கால் பதித்தார். கஜினி அங்கே ஹிட் என்றாலும் அதன்பின், பாலிவுட்டில், அசினுக்கு பெரிய வெற்றிப்படம் ஒன்றும் அமையவில்லை. இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் அசின். திருமணத்திற்கு பின் எப்படியாவது மீண்டும் சினிமாவில் நடிக்க கணவனிடம் அனுமதி வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் அசின். ஆனால், ராகுல் ஷர்மாவோ இப்போதைக்கு சினிமாவில் நடிப்பதையெல்லாம் நிறுத்திக் கொள் என்று கராராக கூறிவிட்டாராம்.

வேண்டுமானால் அவரின் கம்பெனியான மைக்ரோமேக்ஸ் மொபைல் தொடர்பான விளம்பரங்களில் வேண்டுமானால் நடி என்று கூறிவிட்டாராம். இதனால் அப்செட்டில் இருக்கிறாராம் அசின்.

எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன்: த்ரிஷா பதில்
தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.சில வருடங்களாக பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர் கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த அரண்மனை2வில் கவர்ச்சி பாத்திரத்தை தாண்டி பேயாகவும் மிரட்டியிருந்தார்.இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், கவர்ச்சி பாத்திரங்களில் நடித்து போரடித்து விட்டதால் பேய் கதைகளில் நடிக்க ஆர்வம் வந்தது. அரண்மனை2 படத்துக்கு பாராட்டு வருவது மகிழ்ச்சி என்றார்.திருமணம் பற்றி பேசுகையில், திருமண விஷயத்தில் எனக்கு சில துக்கமான சம்பவங்கள் நடந்து விட்டது. பொருத்தமானவரை சந்திக்கும் போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் எனது திருமண முடிவை அம்மாவிடம் விட்டு விட்டேன் எனவும் கூறியுள்ளார்.