ரேவதி இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகும் குயின்! - வசனம் எழுதும் சுஹாசினி
விகாஸ் பால் இயக்கத்தில் கங்கனா நடித்த படம், குயின். 2013-ல் வெளிவந்தது. திருமணம் ரத்தானதால், தேநிலவைத் தனியே கொண்டாடிய பெண்ணைப் பற்றிய கதைதான் குயின். ஹிந்தியில் அதிக வசூலை அள்ளிய இந்தப் படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.ரேவதி இயக்கும் இந்தப் படத்துக்குத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சுஹாசினி வசனம் எழுதுகிறார். படத்தின் முதல் பாதிக்கான வேலைகளை சுஹாசினி முடித்துவிட்டார், அடுத்தச் சில மாதங்களில் மொத்த வேலைகளையும் முடித்துவிடுவார். அக்டோபர் அல்லது நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

ஒருவரை காதலித்தால் என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விடுவேன்: - தீபிகா படுகோனே
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர், தீபிகா படுகோனே. இவருக்கும், இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கும் காதல் ஏற்பட்டு பிறகு முறிந்தது. தற்போது இவர் ரன்வீர் சிங்கை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘என்னைப் பற்றி வதந்திகள் பரவி உள்ளன. காதலருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறேன் என்றும் கிசுகிசு பரப்பி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லை. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால், அவரை திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கலாசாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

குடும்ப உறவுகள் முக்கியம். அந்த உறவுகளை கவுரவிக்க வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்துதான் வந்து இருக்கிறேன். திருமணம் செய்யாமல் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது அவரவர் விருப்பம். காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமாக இருந்தாலும் சாகும்வரை நிலைக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும். என் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக பொருத்தமான கணவர் அமைந்ததும் சினிமாவை விட்டு விலக கூட தயாராக இருக்கிறேன். காதலில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளன. மீண்டும் அதுபோன்ற சங்கடங்கள் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஒருவரை காதலித்தால் என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைத்து விடுவேன். அவர் எனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்கவேண்டும். என்னை காதலித்துக்கொண்டே இன்னொரு பெண்ணையும் அவர் விரும்பினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். சரியான பதிலடி கொடுப்பேன்’’. இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

ரூ 1.50 கோடிக்கு விலைப்போன நம்ம ஆளு பாடல்கள்!
சிம்பு நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவிருக்கின்றது.இப்பாடல்களை ‘லகரி ஆடியோ’ நிறுவனம் ரூ 1.50 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இதே நிறுவனம் தான் ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ரோஜாவையும் வாங்கியது.மேலும், இப்படம் பல கோடி ரூபாய்க்கு விலைப்போனதாக கூறப்படுகின்றது. படம் மார்ச் 24ம் தேதி வெளிவர, ட்ரைலர் இன்று மாலை 5:10 மணியளவில் வரவிருக்கின்றது.

வரிச்சலுகைக்காக பிரசாந்தின் புதிய படப்பெயர் மாற்றம்!
பிரசாந்த் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம் ‘சாஹசம்’. தற்போது வரிச்சலுகைக்காக இதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் அருண்ராஜ் வர்மா இயக்க பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமன்டா நடித்துள்ளார்.முதலில் இந்தப் படத்துக்கு சாஹசம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரிச்சலுகைக்காக படத்தின் பெயர், சாகசம் என்ற வீரச்செயல் என்று மாற்றப்பட்டுள்ளது. சாகசம் என்ற வீரச்செயல், பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகிறது.

தனுஷ் கதையே கேட்காமல் நான் சொல்வதை மட்டுமே நடித்தார்: - இயக்குனர் பிரபு சாலமன்
தனுஷ் எப்போதும் ஒரு மாஸ் ஒரு கிளாஸ் இந்த மாதிரி கதைகளாக தான் அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ரயில் படம் விரைவில் வரவிருக்கின்றது.இப்படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், ’என்னிடம் இருந்த ஒரு கதைக்கு முன்னணி நடிகர் தேவைப்பட்டார், தனுஷிடம் கூறிய போது செய்கிறேன் சார் என்றார்.ஆனால், என்னிடம் கதைக்கூட கேட்கவில்லை, படப்பிடிப்பிற்கு வந்து விட்டார், சுமார் 10 நாட்கள் கதையே கேட்காமல் நான் சொல்வதை மட்டுமே நடித்தார்’ என கூறியுள்ளார்.

விக்ரமுக்கு ரகசிய உளவாளியான நயன்தாரா
சென்ற ஆண்டு ஹிட் பட நாயகி வரிசையில் முதலிடத்தை பிடித்த நயன்தாரா, அதே உற்சாகத்துடன் இந்த ஆண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் இரண்டு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவாளியாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே, நயன்தாரா ‘பில்லா’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இருமுகன்’ படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சிபு தமீன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்

ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷின் சம்பளம் 50 லட்சம்
.
சினிமாவில் எந்த அளவுக்கு நடிக்கிறார்கள் என்பதை விட எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதை வைத்துதான் அவர்களது மார்க்கெட் உயரும், சம்பளமும் உயரும். ஒவ்வொரு வெற்றிப்படத்துக்கு
பிறகும் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேயிருப்பார்கள் நடிகர் நடிகைகள். அந்த வகையில், முன்பெல்லாம் கோடிகள் என்பது பெரிய விசயமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சில ஹிட் படங்களில் நடித்தவர்களே பல கோடிகள் சம்பளம் கேட்கிற நிலை உருவாகியிருக்கிறது.
அந்த வகையில், நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, திரிஷா, காஜல்அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் கோடிகளை கடந்து நிற்கிறார்கள். அதனால் ஓரிரு ஹிட் கொடுத்த நடிகைகளுக்கும் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு வருகிறது. அதன்காரணமாக, ரஜினிமுருகன் படத்திற்கு முன்பு வரை பத்து லட்சத்திற்குள் சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ், அந்த படம் மட்டுமின்றி, தெலுங்கில் நடித்த நேனு சைலஜா படமும் ஹிட்டடித்தால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி 50 லட்சமாக்கி விட்டதாக கோலிவுட்டில பரபரப்பு செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி கீர்த்தி சுரேஷ்தரப்பில் விசாரித்தால், தடாலடியாக மறுக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் தலா ஒரு ஹிட் படம்தான் வெளியாகியிருக்கிறது. இதை வைத்தெல்லாம் 50 லட்சம் கேட்டால் யாரும் தரமாட்டார்கள். புதிய படவாய்ப்பு கள் கீர்த்திக்கு வரக்கூடாது என்பதற்காக யாரோ இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.