நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்
05 Feb,2016

நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (32) இன்று காலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வையம்மாள் இன்று அதிகாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் திருப்பத்தூரில் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே வையம்மாள் உயிரிழன்தார். வையம்மாளின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த கார் டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றிற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றுள்ள மதுரை முத்துவிடம் வையம்மாளின் மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை முத்து - வையம்மாள் தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.