புகழ்ச்சி எனக்கு பிடிக்காது: அனுஷ்கா
.
புகழ்ந்து பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும். ஒருவரை இன்னொருவர் உயர்வாக பேசினால் அது சம்பந்தப்பட்டவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், தலையில் ஐஸ் வைத்த மாதிரி குளிர்ந்து போவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை புகழ்ச்சி என்பது பிடிக்காது.
எனது நடிப்பை விமர்சனம் செய்தால், அதனை கூர்ந்து கவனிப்பேன். இந்த கதாபாத்திரம் சரியல்ல. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று சொன்னால் அதன்படி என்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சிப்பேன். குறைகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன். ஆனால், புகழ்ந்து பேசினால் தடுமாற்றம் தான் வரும், வெட்கப்படுவேன்.
எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்புவேன். சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, புகழ்ந்து பேசுபவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவேன். என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் புகழ்கிறார்கள். அதை நான் விரும்புவதில்லை. சில நேரங்களில் நான், கரினா கபூரை போல் இருப்பதாக ஒப்பிட்டும் பேசுகிறார்கள்.
கரினா கபூர் எனக்கு பிடித்த நடிகை. விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு தெரியும். அதன்படியே எனது சினிமா வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ராய்லட்சுமி!
ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. அந்த படத்தில் விக்ராந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை யடுத்து 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தென்னிந்திய மொழிப்படங்கள்
மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வருகிறார். ஆனபோதும், இன்னமும் ராய்லட்சுமிக்கு ஒரு முன்னணி நாயகிக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இரண்டாம் தட்டு நடிகையாகவே மார்க்கெட்டில் போராடிக்கொண்டிருக்கிறார். தற்போது அவர் கைவசம் அகிரா, ஜூலி-2 ஆகிய இந்தி படங்களும், சவுகார்பேட்டை, பெங்களூர் நாட்கள், போங்கு போன்ற தமிழ்ப்படங்களும் உள்ளன. ஆனால் இதில் சவுகார்பேட்டை படத்தில் மட்டுமே மெயின் ஹீரோயினாக ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதோடு, லட்சுமி ராய் என்றிருந்த தனது பெயர் ராசியில்லை என்றுதான் நியூமராலஜி பார்த்து ராய்லட்சுமி என்று மாற்றினார் அவர். ஆனபோதும் அவரது மார்க்கெட்டில் எந்தவித பெரிய மாற்றமும் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தகட்ட முயற்சியாக, முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் வாய்ப்பு கொடுத்தால் தற்போது 20 லட்சம் சம்பளம் வாங்கி வரும் ராய்லட்சுமி, அதில் 25 சதவிகித தொகையை தள்ளுபடி செய்ய தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதோடு வாய்ப்பு வாங்கிக்கொடுப்பவருக்கு இதுவரை எந்த நடிகையும் கொடுக்காத அதிகபட்ச கமிஷனை கொடுக்கவும் முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பு செய்தி வெளியிட்டிருக்கிறார் ராய்லட்சுமி.
எனக்கு எம்மதமும் சம்மதம்! -சொல்கிறார் இனியா
.
வாகை சூடவா, மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் நடித்த இனியா, மாசாணி படத்திற்கு பிறகு மார்க்கெட்டில் ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததால் பின்னர் அவரது மார்க்கெட்டில்
பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் இப்போது கேரக்டர் நடிகையாகி விட்டார். தற்போது வைகை எக்ஸ்பிரஸ், பொட்டு உள்பட பல படங்களில் வித்தியாசமான கேரக்டர் களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் தனக்காக மேனேஜர் வைத்திருந்த இனியா, இப்போது கால்சீட், சம்பளம் என அனைத்து விசயங்களையும் தானே டீல் பண்ணுகிறார். அதேசமயம், கேரக்டர் வேடங்களில் நடித்தாலும் இந்த அளவுக்கு சம்பளம் வேண்டும் என்று உழைப்புக்கேற்ற கூலியை தாராளமாக கேட்டு வாங்குகிறார் இனியா.
அதோடு, எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்குள்ள கோயில், தேவாலங்களுக்கு சென்ற வழிபடுகிறாராம் இனியா. தன்னை ஆச்சர்யமாக பார்ப்பவர்களிடம், எனது அம்மா பெயர் சாவித்ரி அவர் இந்து மதத்தைச்சேர்ந்தவர். அப்பா சலாகுதீன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இப்போதுவரை அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றி வருகின்றனர். அவர்களுக்குள் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டத்தில்லை. மனம் ஒன்றி வாழ்கிறார்கள். ஆக, அதைப்பார்க்கையில் எனக்கு கடவுளை பிரிக்க முடியவில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது எனது புரிதலாகி விட்டது. எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம். அதனால் எம்மதமும் சம்மதம் என்கிற மனநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறாராம் இனியா.
சிம்புவுக்கும் அல்வா கொடுத்த நயன்தாரா
.
அஜீத்தைப் போன்று தான் நடிக்கும் எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றி வருகிறார் நயன்தாரா. ஆனபோதும், அவர் நடித்தால் போதும் என்கிற ரீதியில் அவரை போட்டா போட்டியில் படங்களுக்கு
புக் பண்ணி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். மேலும், அப்படி விளம்பர நிகழ்ச்சிகளுக்கே வராத நயன்தாராவை முன்னிறுத்திதான் தற்போது அவர் நடிக்கும் படங்களின் பப்ளிசிட்டிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நானும் ரவுடிதான் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் நயன்தாரா பப்ளிசிட்டிகளில் முதன்மைப்படுத்தப்பட்டது போன்று, வல்லவனுக்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் விளம்பரங்களிலும் இப்போது நயன்தாராவே போஸ்டர்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறார். மற்ற படங்களைப்போலவே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தான் வருவதில்லை என்பதை முன்மொழிந்து விட்டாராம் நயன்தாரா. ஆக, ஆடியோ நிகழ்ச்சிக்கு எப்படியேனும் நயன்தாராவை அழைத்து வந்து விட வேண்டும் என்கிற சிம்புவின் திட்டமும் ஒர்க்அவுட்டாக வில்லையாம்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் தமன்னா
இயக்குநர் விஜய்யின் அடுத்த படத்தில் நடனப்புயல் பிரபுதேவா நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில்
நடன இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல்வேறு அவதாரங்கள் எடுத்தவர் பிரபுதேவா. சில வருடங்களாக கோலிவுட்டை விட்டு ஒதுங்கி பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கும் பிரபுதேவா மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டவிருக்கிறார்