நடிகை ஷ்ருதி ஹாசனின் 30-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த வருடம் தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பதைப் பலராலும் நம்பமுடியவில்லை.
என் பெற்றோர் புகழ்பெற்றவர்களாக உள்ளதால் என்னைப் பற்றிய தகவல்கள் எல்லாமே அனைவரிடமும் உள்ளன. சினிமாவில் பலரும் பலவருடங்களாக 25 வயதிலேயே உள்ளார்கள். 30 வயதைத் தொடும் இந்தப் புதிய தருணம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பலவருடங்களுக்குப் பிறகு சென்னையில் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளேன் என்று ஸ்ருதி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நேற்று தனது பிறந்தநாளை சென்னையில் குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாசன், அக்ஷரா ஆகியோர் ட்வீட் வழியாகவும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லிட்டில் பிளவர் பார்வையற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்வாழ்த்து மழையில் ஸ்ருதிஹாசன்
ரஜினியுடன் நடிக்க ஆசையாம்: திரிஷா கலகலப்பு பதில்
பல வெற்றிப்படங்களில் நடித்து இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடித்துள்ள ‘அரண்மனை–2’ படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டி திரிஷா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.கல்லூரி காலத்தில் உங்கள் செல்லப் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ‘கல்லூரியில் நான் படித்த போது எனது செல்லப் பெயர் திரிஷா தி டெரர்’ என்றார். யாருடன் நடிக்க ஆசை என்று கேட்ட போது, ‘ரஜினியுடன்’ என்று கூறினார்.
பல வெற்றிப்படங்களில் நடித்து இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடித்துள்ள ‘அரண்மனை–2’ படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டி திரிஷா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.கல்லூரி காலத்தில் உங்கள் செல்லப் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ‘கல்லூரியில் நான் படித்த போது எனது செல்லப் பெயர் திரிஷா தி டெரர்’ என்றார். யாருடன் நடிக்க ஆசை என்று கேட்ட போது, ‘ரஜினியுடன்’ என்று கூறினார்.
சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களாமே என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, ‘அப்படி எல்லாம் இல்லை. அவருடன் நடிக்க எனக்கும் விருப்பம்தான்’ என்று பதில் அளித்தார். திரிஷாவின் இந்த பதிலை அறிந்த சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவுக்கு நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மூத்த மகளும், இந்தியத் திரையுலகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் அவருடைய 31வது பிறந்த
நாளை இன்று கொண்டாடி வருகிறார். நேற்று மாலையிருந்தே அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வரும் ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்பிலும், வாழ்த்துகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டவளாய் உணர்கிறேன், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதிகப்படியான வாழ்த்துகளால் திணறிக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி டிவிட்டர் நண்பர்களே,” என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தற்போது 'எஸ் 3', தமிழ்ப் படத்திலும், 'பிரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், இரண்டு ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் ராம் சரண் ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசனுக்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என அந்த மொழிகளிலும் ஸ்ருதிஹாசன் முன்னணிக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். மேலும் சில புதிய படங்களில் நடிப்பதற்காகவும் பேசி வருகிறார்.
டாடினார் ஸ்ருதி.
ரம்யா கிருஷ்ணன் விளம்பர படத்தில் நடிக்க 20 லட்சம்
படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு சிலகாலம் மார்க்கெட் மந்தமாக இருந்தபோது, சின்னத்திரையில் தங்க வேட்டை நிகழ்ச்சி மூலம் என்ட்ரியானவர், தங்கம், வம்சம் சீரியல்களை தயாரித்து லீடு ரோல்களிலும் நடித்து தன்னை நேயர்கள் மத்தியில் தக்க வைத்துக்கொண்டார்.
அதோடு ஆம்பள, பாகுபலி படங்களுக்குப்பிறகு இப்போது மறுபடியும் பிசியாகி விட்டார். அதன்காரணமாக, சினிமா தவிர சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக சென்று வரும் ரம்யா கிருஷ்ணன் விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சின்னத்திரை மூலம் அவர் பெண்களை கவர்ந்து வைத்திருப்பதால், புடவை, நகை போன்ற விளம்பரங்களில் அவரை நடிக்க வைக்க சில நிறுவனங்கள்அழைப்பு விடுத்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெரிய ஜவுளி கடை நிறுவனம் புடவை விளம்பரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை அழைத்த போது, விளம்பரத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங் கள். ஆனால் எனது ஒருநாள் சம்பளம் 20 லட்சம் என்று சொல்லி ஓகே செய்து விட்டாராம். விரைவில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம்.
தமிழ் பயிலும் ரம்யா நம்பீசன்!
.
கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும் நடிகர் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே தமிழை நன்றாக கற்றுக்கொள்வார்கள். முக்கியமாக நடிகர்கள் தமிழில் டப்பிங்கூட பேசுவார்கள். அந்த வகையில், ராமன் தேடிய சீதை படத்தில் தமிழுக்கு வந்தவர் ரம்யா நம்பீசன். அதன்பிறகு
ஆட்டநாயகன், இளைஞன், குள்ள நரிக்கூட்டம், பீட்சா, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என பல படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு பாண்டியநாடு படத்தில் பை பை பை -என்ற பாடலை பின்னணி பாடியவர் தற்போது மேலும் பல படங்களுக்கு பாடி வருகிறார்.
தற்போது பீட்சாவுக்குப்பிறகு மீண்டும் விஜயசேதுபதியுடன் சேதுபதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆக, தமிழ் சினிமாவுக்கு ரம்யா நம்பீசன் நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகி விட்டது. ஆனபோதும் இன்னமும் அவருக்கு சரிவர தமிழ் பேசத் தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலும ஆங்கிலத்தில்தான் பேசுகிறாராம். இந்நிலையில், மலையாள நடிகைகள் சில படங்களில் நடித்ததுமே அழகாக தமிழில் பேசுவதை கோலிவுட் நண்பர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இப்போது தீவிரமாக தமிழ் பேச பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன். அதோடு இன்னும் சில படங்களுக்குப்பிறகு தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்திருக்கிறாராம் அவர்.