வதந்தியில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்?
.
சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் ஹீரோயின்கள் யார் என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனமே திட்டவட்டமாக அறிவிக்காதது
வரை ஏகப்பட்ட வதந்திகள் உலவுகின்றன. குறிப்பாக, முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க முயற்சி எடுக்கும் சில நடிகைகள், அப்படங்களின் டைரக்டர்களை சந்தித்து விட்டு வந்ததுமே தாங்கள் அப்படத்தில் நடிப்பது போன்று பில்டப் கொடுத்து விடுகிறார்கள். இதனால் அந்த செய்தி மீடியாக்களில் வேகமாக பரவி விடுகிறது.
அந்த வகையில், மலையாள டைரக்டர் பரதன் இயக்கத்தில் விஜ்ய நடிக்கும் 60வது படத்தில் நாயகியாக காஜல்அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், திடீரென்று அந்த படத்தில் அமரகாவியம் படத்தில் நடித்த மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடிப்பதாக ஒரு புதிய காட்டுத்தீயாய் பரவியது. பின்னர், பலரும் மியாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, விஜய் படத்தில் நான் நடிக்கவில்லை. யாரோ போலி டுவிட்டரில் இந்த செய்தியை பரப்பி விட்டனர் என்று மறுத்தார்.
இந்த நிலையில், தற்போது அதே விஜய்யின் 60வது படத்தில் நாயகியாக நடிப்பது போன்ற பரபரப்பு செய்தியில் கீர்த்தி சுரேசும் சிக்கியிருக்கிறார். ஆனால் இதுபற்றி அவரை கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படியொரு வாய்ப்பு வந்தால் அதை விட பெரிய சந்தோசம் எதுவுமே இல்லை. ஆனால் இதுவரை யாருமே அவர் படத்தில் நடிப்பது சம்பந்தமாக என்னிடம் பேசவே இல்லையே என்று சொல்லி பீல் பண்ணுகிறார் கீர்த்தி சுரேஷ்.
நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெற்றி கரமாக ஓடி வசூல் ஈட்டுகின்றன. இதனால் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அது போல் காஜல் அகர்வாலும் சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் வசூல் சாதனை படைத்தது. ஜில்லா படமும் வெற்றிகரமாக ஓடியது.
கடந்த வருடம் மாரி, பாயும்புலி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. தெலுங்கில் டெம்பர் என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம்’ மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் ரூ. 2ண கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன. அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா என்று அந்த தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
ஓய்வில் வரைந்த ஓவியங்களை ஏலம் விடும் ஹன்சிகா
ஹன்சிகா தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அனாதை குழந்தைகளை தத்தெடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அவர் இது வரை 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். அவர்களுக்கு உணவு, துணிமணி, தங்குவதற்கான இடம், கல்வி உதவி போன்றவற்றையும் அவரே கவனித்துக் கொள்கிறார்.
தான் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்காகவே ஒதுக்குகிறார். ஹன்சிகாவுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. நிறைய ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். படப்பிடிப்பு ஓய்வின் போது அவர் நிறைய ஓவியங்களை வரைந்து தனது வீட்டில் வைத்துள்ளார்.
அந்த ஓவியங்களை ஏலம் விட ஹன்சிகா முடிவு செய்துள்ளார். அதில் கிடைக்கும் நிதியை அவர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க முன் வந்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் மழைவெள்ளம் பாதித்த போது ஹன்சிகா அதிக அளவில் நிவாரண உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
20 கோடி வசூல் பெற்று 'ரஜினி முருகன்' முதலிடம்
.
'ரஜினி முருகன்' படத்தின் வசூல் கணக்கைப் பார்த்து வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைகிறார்களோ
இல்லையோ பல ஹீரோக்கள் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ஓபனிங் கிடைத்ததுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம் என கோலிவுட்டில் உள்ள டீக்கடைகளில் கூட உதவி இயக்குனர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக திரையுலகத்தில் ஒரு வாரம் முடிந்த பின்தான் படங்களின் வசூல் விவரத்தை ஓரளவிற்குக் கணக்கிட்டுச் சொல்வார்கள். இதுவரை தமிழ்த் திரையுலகத்தில் எந்த ஒரு திரைப்படத்திற்கும் பைசா விவரத்துடன் யாரும் கணக்கைச் சரியாகச் சொன்னதேயில்லை. எல்லாமே ஒரு தோராய கணக்குதான். அந்த விதத்தில் 'ரஜினி முருகன்' 21ம் தேதி முதல் வார முடிவில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள்.
ஒரு படம் இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டு மூன்றாவது முறை சரியா
ன தேதியில் வெளியாகி வசூலித்ததாக தமிழ்த் திரையுலகத்தில் வரலாறு இல்லை. அந்த சென்டிமென்ட்டையும் இந்தப் படம் உடைத்ததையும் சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். 'ரஜினி முருகன்' படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனின் அடுத்த படங்களுக்கு இப்போதே தனி மவுசு கூடிவிட்டது. அந்த இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்
நந்திதாவின் புதிய டார்கெட்!
.
கன்னடத்தில் நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தில் நடித்து விட்டு அட்டகத்தி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகையான நந்திதா.
அதன்பிறகு தமிழில் அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி என சில படங்கள் வெற்றி பெற்றதால் மீடியம் பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார். தற்போது அவர் நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல், அஞ்சலா, உள்குத்து' ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஆனால், இந்த படங்களுக்குப்பிறகு நந்திதாவுக்கு புதிய படங்கள் கைவசம் இல்லை. தமிழில் சில படங்களுக்காக அவர் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். என்றாலும் நடித்துள்ள படங்களின் ரிசல்ட்டை பார்த்து விட்டு பேசலாம் என்கிறார்களாம். அதனால் இந்த இடைபட்ட நேரத்தில் தெலுங்கு படங்களுக்காக முயற்சி செய்தபோது, தமிழில் அவர் குடும்பப் பாங்காக மட்டுமே நடித்திருப்பதால் இவர் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் பெரிய வரவேற்பு இல்லையாம். அதனால் தெலுங்கு சினிமாவுக்கேற்ப கிளாமராக நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டார் நந்திதா.
அதனால் தற்போது ஒரு கிளாமர் ஆல்பம் ரெடி பண்ணியுள்ள நந்திதா, அதை ஒரு புதிய மானேஜர் மூலம் தெலுங்கு சினிமாவில் சுற்றலில் விட்டிருக்கிறார். அங்குள்ள ராம்சரண்தேஜா, நாக சைதன்யா போன்ற இளவட்ட ஹீரோக்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதை டார்க்கெட்டாக வைத்து முயற்சிகளை தொடர்ந்திருக்கிறாராம் நந்திதா.