காதல் என்பது வெறும் கவர்ச்சி தான்,அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள்:அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது என்பதை பற்றியும் பதில் கூறியுள்ளார்.
நடிகை அனுஷ்கா தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் காதலை பற்றியும் தனது திருமணம் எப்போது என்பதை பற்றியும் பதில் கூறியுள்ளார்."காதல் என்பது வெறும் கவர்ச்சி தான், அந்த மாய வலையில் பலர் இளம் வயதில் மாட்டி கொள்கிறார்கள். எனக்கு காதல் அனுபவம் இல்லை, காதலிக்க நேரமும் இல்லை, பல பேர் இளம் வயதில் காதல் வலையில் சிக்கி பிறகு காலப்போக்கில் அதை யோசித்து பார்த்து சிரிப்பார்கள்.
தற்போதைக்கு சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறேன், சினிமா மட்டுமே என் காதல். என் திருமணம் தகுந்த நேரத்தில் நடக்கும், எனக்கு வரப்போகும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது, வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.அப்படிப்பட்டவரை சந்திக்கும் தருணத்துக்காக காத்திருக்கிறேன் என்று அனுஷ்கா கூறியுள்ளார்.
முதலிடத்திற்கு ஆசைப்படும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாராதான். கடந்த ஆண்டில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து,
தன்னுடைய நடிப்பாலும் பேசப்பட்டவர் அவர்தான். பத்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் அதே புகழில் இருந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் சிம்ரன், த்ரிஷா, நயன்தாரா என நம்பர் 1 இடம் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கிறது. நான்கைந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்தான் புது நடிகைகளும் முதலிடத்திற்கு ஆசைப்படுவார்கள்.
ஆனால், தான் நடித்த ஒரு படம் இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முன்பாகவே முதலிடத்திற்கு ஆசைப்படுகிறார் 'ரஜினி முருகன்' படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த ஆண்டில் நான்தான் முதலிடத்தில் இருந்தேன் என வருடக் கடைசியில் அனைவரும் சொல்ல வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று சொல்லியிருக்கிறார்.
இவர் நாயகியாக அறிமுகமான 'இது என்ன மாயம்' வந்த அடையாளம் கூடத் தெரியாமல் மாயமாய் போய்விட்டது. நாயகியாக நடித்த 'ரஜினி முருகன்' படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு பொங்கலுக்குத்தான் வெளிவந்தது. கீர்த்தி சுரேஷ் ராசி இப்படி இருக்கிறதே என இயக்குனர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது அடுத்தும் தொடர்வதுதான் ஆச்சரியமானது. பாபி சிம்ஹா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித் 'பாம்பு சட்டை' படம் முடிவடைந்து சில மாதங்களாகியும் அப்படியே கிடப்பில் உள்ளது. என்னதான் 'ரஜினி முருகன்' படத்தில் வெற்றியைப் பெற்றாலும் இவர் நடிக்கும் படங்கள் கிடப்பில் போடப்படும் ராசியை நினைத்து இவரை அணுக இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
அஜித் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா?
.
பையா படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவின் மார்க்கெட் எகிறி நின்றது. அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
ஆனபோதும், தாய் மொழியான இந்தி சினிமாவில் மீண்டும் கோலேச்ச வேண்டும் என்பதற்காக சென்றவர் அங்கு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் மறுபடியும் தென்னிந்திய சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பதற்கு என்ட்ரி கொடுத்தார் தமன்னா. அப்படி அவர் வந்தபோது யாருமே எதிர்பார்க்காத வகையில், அஜித்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் செகண்ட் இன்னிங்சில் தமன்னாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்தது. தற்போது பாகுபலி, பாகுபலி-2 என நடித்து முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவாதான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று கூறப்படும் நிலையில், அந்த படத்தில் தமன்னாவே நாயகியாக நடிப்பார் என்கிறார்கள். காரணம், சிவா இயக்கிய சிறுத்தை, வீரம் மட்டுமின்றி தெலுங்கில் சிவா இயக்கத்தில் அவர் நடித்த படங்களும் ஹிட்டாகியுள்ளன. அதனால், தமன்னாவை தனது செண்டிமென்ட் நாயகியாக நினைக்கும் சிவா, மீண்டும் அஜித்துடன் அவரை இணைக்கும் முடிவில் இருக்கிறாராம். இதனால், கடந்த ஒரு மாதமாகவே அஜித்துடன் பில்லா, ஆரம்பம் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் புதிய படத்தில் அவருடன் இணைகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இந்த புதிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலட்சுமியால் கிடைக்கும் வரவேற்பு ?
.
'தாரை தப்பட்டை' படம் வெளிவரும் போது, இயக்குனர் பாலாவின் படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், வெளிவந்த பிறகு படத்தில் பாலாவின்
'டச்'கள் எதுவும் இல்லாமல் போனதால் ரசிகர்கள் ஏமாந்துவிட்டனர். படத்தில் நடித்துள்ள நாயகன் சசிகுமார், வில்லன் ஆர்.கே. சுரேஷ் ஆகியோரை விட படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பது வரலட்சுமிதான் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். தனது வெளிப்படையான நடிப்பின் மூலம் தன்னுடன் நடித்தவர்களைக் காட்டிலும் வரலட்சுமி மிகப் பெரிய பெயரைப் பெற்றுவிட்டார் என்று கோலிவுட்டிலேயே பாராட்டி வருகிறார்கள்.
படத்தில் உள்ள ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களாலும், படத்தில் உள்ள ரத்தம் தெறிக்கும் வன்முறையாலும் படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கிடைத்தது. அதனால், குடும்பத்தினர் இந்தப் படத்திற்கு வர முடியாத சூழ்நிலை உருவானது. இதே போலத்தான் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்திற்கும் 'ஏ' சர்டிபிகேட் கிடைத்தது. அந்தப் படம் எப்படி இரட்டை அர்த்த வசனங்களுக்காக ஓடியதோ, அப்படி ஒரு நிலைமைதான் 'தாரை தப்பட்டை' படத்திற்கும் கிடைத்திருக்கிறது என்கிறார்கள்.
பாலாவின் படத்தை அந்தப் படத்தோடு ஒப்பிட்டுப் பேச வேண்டிய அளவுக்கு ஆகிவிட்டதே என்று வினியோகஸ்தர்களும் வருத்தத்துடன் தெரிவித்தாலும், இந்த வார நாட்களில் படத்திற்குக் கூட்டம் வந்தால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்ற ஆசையில் இருக்கிறார்களாம்.
எந்த ஒரு தமிழ் நடிகையோ, ஏன் ஹிந்தி நடிகையோ கூட நடிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் வரலட்சுமி 'துணிந்து' நடித்து பாலா படத்தைக் காப்பாற்றுகிறாரே என்று சிலர் நக்கல் அடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்களாம்
காஜல் அகர்வாலுக்கு இரண்டரை கோடி சம்பளம்
.
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிகட்டத்துக்கு
வந்துவிட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல்-14 அன்று பிரம்மாண்டமான முறையில் விளம்பரங்கள் செய்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் தாணு. அதற்காக ஒரு கிரியேட்டிவ் டீமே பணியாற்றி வருகிறது.
'தெறி'யை முடித்த கையோடு தனது 60 ஆவது படத்தில் அழகிய தமிழ்மகன் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தை 'விஜயா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் 60 படத்தின் பூஜை, விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் பாரதி ரெட்டி, இயக்குனர் பரதன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட ஒரு சிலர் மட்டுமே இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளனர். படத்தின் நாயகனான விஜய் வரவில்லை. இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார்.
துப்பாக்கி, ஜில்லா படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த காஜல் அகர்வால் மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரவிருக்கிறார். காஜல் அகர்வாலை, விஜய்யே சிபாரிசு செய்ததாகவும், அதனாலேயே அவருக்கு இரண்டரை கோடி சம்பளம் கொடுத்து கமிட் பண்ணியுள்ளதாகவும் தகவல்.