மீண்டும் இணையும் சிம்பு, நயன்தாரா!
பாண்டிராஜ் சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை இயக்கியிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். பாதியில் நின்றுபோன இப்படத்தின் வேலைகளை மீண்டும் தொடங்கியுள்ளாராம் பாண்டிராஜ்.படத்திற்கான இசை கோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம், அதோடு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட வேண்டுமாம்.இது நம்ம ஆளு படம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ரிலீசாகிவிடும் என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். வரிசையாக வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தான் இது நம்ம ஆளு படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றி கூறும் படத்தில் நடிக்கவுள்ள அஞ்சலி!
சகலகலா வல்லவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரீ ஆனவர் அஞ்சலி. இவ்வருடத்தில் அஞ்சலி நடிப்பில் தொடர்ந்து மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பேரன்பு போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் பற்றி கூறும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தை இயக்குனர் சர்வேஷ் இயக்குகிறார், படத்திற்கு காண்பது பொய் என்றும் பெயரிட்டுள்ளனர்.படம் பற்றி இயக்குனர் கூறுகையில், எளிமையான, எதார்த்தமான நடிப்பை வெளிப்பத்தும் திறன் கொண்ட அஞ்சலி இப்படத்திற்கு ஏற்றவராவார். ஜனவரி 20ம் தேதி முதல் தொடங்கவுள்ள இப்படம் கண்டிப்பாக பெண்களுக்கான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்று கூறுகிறார்.த்ரிஷா, நயன்தாரா இருவரும் அண்மையில் பெண்கள் மையப்படுத்திய கதையில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன: - கங்கனா ரனாவத்.
தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயீன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அவர் கூறியதாவது:- நான் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறேன். என் வளர்ச்சி மட்டும்தான் எல்லோருக்கும் தெரிகிறது. இந்த இடத்துக்கு வருவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். 10 வருடங்களாக போராடினேன். அவமானங்களை சந்தித்தேன். புறக்கணிக்கப்பட்டேன். சங்கடப்படுத்தினார்கள். உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன்.
இவை என்னை மனதளவில் பக்குவப்படுத்தின. நமக்கு வெற்றி எதையும் கொடுத்து விடாது. தோல்விகள் பாடம் கற்று தரும். தோல்விகளும் கஷ்டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தன. நம்பிக்கை ஊட்டின. அதன் காரணமாக அவற்றில் இருந்து இப்போது மீண்டு வந்து இருக்கிறேன். எல்லோருமே வெற்றி தோல்வியை சந்திக்கிறோம். எதுவும் இறுதியானது அல்ல என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு தோல்வியை சந்திக்கும் மனப்பக்குவத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. எனது சகோதரி மீது கூட திராவக வீச்சு நடந்தது. பெண்களால் நிராகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆண்களுக்கு வரவேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாதபோதுதான் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள். என் வாழ்க்கையை புத்தகமாக எழுத முடிவு செய்துள்ளேன். இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.
3 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவர் அரண்மனை படத்தின் முதல் பாகத்திலேயே நடிக்க வேண்டியவர்.பிறகு ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலகினார். பின் சுந்தர்.சி இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாராவை அனுகினாராம்.ஆனால், அவர் ரூ 3 கோடி சம்பளம் கேட்க, சுந்தர்.சி மீண்டும் ஹன்சிகாவையே கமிட் செய்து விட்டாராம்.
தெறி' படப்பிடிப்பை முடித்த எமி ஜாக்சன்
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில
நாட்களில் இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் மலைப் பகுதியில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான எமி ஜாக்சன் அவருடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நேற்று லடாக்கில் நடந்த படப்பிடிப்புடன் முடித்துக் கொடுத்துவிட்டார்.
“தெறி' குழுவினருடன் மறக்க முடியாத அனுபவத்துடன் பணியாற்றினேன். மிகச் சிறந்த நடிகரான விஜய்க்கும், என்னுடைய புத்திசாலித்தனமான இயக்குனர் அட்லீக்கும் மிக்க நன்றி,” என 'தெறி' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்று படக்குழுவைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
எமி ஜாக்சன் நடித்து அடுத்து வெளிவர உள்ள பெரிய படம் என்றால் அது 'தெறி' தான். தற்போது ரஜினிகாந்த் ஜோடியாக '2.0' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்காக எமி ஜாக்சனுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எமியின் முந்தைய வெளியீடான 'தங்க மகன்' தோல்வியைத் தழுவியதும், 'கெத்து' படத்திற்கு சுமாரான வரவேற்பும் கிடைத்து வரும் நிலையில் 'தெறி' படம்தான் எமியைக் காப்பாற்ற வேண்டும்