ராதிகா ஆப்தேவின் திடீர் கண்டிசன்!
.
இந்தி, மராத்தி, பெங்காலி என வடஇந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வந்தவர் ராதிகா ஆப்தே. அவரை, தான் இயக்கி நடித்த தோனி படத்தில்
ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தமிழுக்கு கொண்டு வந்தார் பிரகாஷ்ராஜ். முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை அவர் பிரதிபலித்திருந்தபோதும் தொடர்ந்து வடஇந்திய படங்களிலேயே ராதிகா ஆப்தேவின் கவனம் இருந்ததால் எதிர்பார்த்தபடி அவர் கோலிவுட்டில் கோலேச்சவில்லை.
அந்தநேரத்தில், தான் இயக்கிய மெட்ராஸ் படத்தில் ரித்விகா நடித்த வேடத்தில் நடிக்க முதலில் ராதிகா ஆப்தேயைதான் கேட்டாராம் டைரக்டர் ரஞ்சித். ஆனால், அப்போது கால்சீட் இல்லாததால் அந்த படத்தில் நடிக்கவில்லையாம் ராதிகா ஆப்தே. இருப்பினும் தற்போது கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே அவரை நடிக்க வைத்து கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்து விட்டார் ரஞ்சித்.
மேலும், சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதால் இனிமேல் நாம் பெரிய அளவில் கவனிக்கப்படும் நடிகையாகி விடுவோம் என்று நினைக்கும் ராதிகா ஆப்தே, இதுவரை கிளாமர் கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்து வந்தபோதும், புதிதாக தான் கமிட்டாகியுள்ள படங்களில் அதிகப்படியான கிளாமர் காட்டும் காட்சிகளுக்கு தடை சொல்கிறாராம். அதோடு, இனிமேல் கவர்ச்சியை குறைத்து பர்பாமென்ஸை அதிகப்படுத்தப்போகிறேன் என்றும் தன்னிடம் கால்சீட் கேட்டு வந்த டைரக்டர்களுக்கு திடீர் ஷாக் கொடுத்துள்ளாராம் ராதிகா ஆப்தே.
புதிய உற்சாகத்துடன் படவேட்டையில் இறங்கிய ஹன்சிகா!
.
2014-ல் ரவிதேஜாவுடன் இணைந்து பவர் படத்தில் நடித்த பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை ஹன்சிகா. அதையடுத்து தமிழில்,
அரண்மனை, மீகாமன், ரோமியோ ஜூலியட் ஆம்பள, வாலு, புலி என வரிசையாக பல படங்களில் நடித்தார். தற்போது அரண்மனை-2, போக்கிரிராஜா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் தற்போது தமிழில் படங்கள் படிப்படியாக குறைந்து வருவதால், இதை பேலன்ஸ் பண்ண வேண்டும் என்பதற்காக தெலுங்கு படங்களில் நடிக்க முயற்சி செய்தார் ஹன்சிகா. ஆனால் தற்போது அவருக்கு அங்கு மார்க்கெட் இல்லாததால் புதிய படங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இந்த நேரத்தில் தமிழில் அவர் சிம்புவுடன் இணைந்து நடித்த வாலு படம் ஷார்ப் என்ற பெயரில் தெலுங்கில் டப்பாகி வருவதால், அந்த படத்திற்கு பிறகு புதிய தெலுங்கு படங்கள் புக்காகும் என்று எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.
அதோடு, தெலுங்கைப்பொறுத்தவரை சிம்புவை விட ஹன்சிகாவே ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர் என்பதால், 2.40 நிமிடம் இருந்த வாலு படத்தில் சிம்பு சம்பந்தப்பட்ட 10 நிமிட காட்சிகளை கத்தரித்து விட்டு படத்தை 2.30 நிமிடமாக்கியுள்ளனர். அதேசமயம் ஹன்சிகாவின் காட்சிகளில் கைவைக்கவில்லையாம். மேலும், அவரை முன்னிறுத்தியே ஆந்திராவில் ஷார்ப் பட விளம்பரம் செய்யப்பட உள்ளதாம். அதனால், புதிய உற்சாகத்துடன் தெலுங்கு பட வேட்டை முடுக்கி விட்டிருக்கிறார் ஹன்சிகா.
பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் டாப்ஸி!
ஆடுகளம், வந்தான் வென்றான், காஞ்சனா-2 ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் அடுத்து பாலிவுட்டில் Shoojit Sircar இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகின்றது.
ஏமி ஜாக்சனின் விசா காலத்தை நீட்டிக்காததால் தாமதமானது தெறி!
தெறி படத்தின் பாடல் காட்சி ஒன்று ஏமி ஜாக்சனின் விசா காரணமாக இன்னும் படமாக்கப்படாமல் உள்ளது. சென்ற வாரத்தில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ஏமி ஜாக்சன், விசா காலத்தை நீட்டிக்காததால் அப்படியே மீண்டும் லண்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் தனது விசாவை புதுப்பித்துக் கொண்ட பிறகே சென்னைக்கு வர முடியும் என்பதால், குறிப்பிட்ட பாடல் காட்சி இன்னும் எடுக்கப்படாமலே உள்ளதாக தெறி படக்குழு தெரிவித்துள்ளது. தெறியில் விஜய்யுடன் சமந்தா, ஏமி ஜாக்சன் இருவரும் நடித்து வருகிறார்கள்.
இறைவி படம் பற்றி வாய் திறக்க மறுக்கும் அஞ்சலி!
அங்காடித்தெரு அஞ்சலியைப் பொறுத்தவரை எப்எம் ரேடியோ மாதிரிதான். அவரிடத்தில் பேசத் தொடங்கினால், தான் நடிக்கும் படங்களைப்பற்றி
எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் மடைதிறந்தார் போன்று கொட்டித்தீர்த்து விடுவார். இப்படி பல சமயங்களில் உளறி கொட்டியதற்காக டைரக்டர்களின் கோபத்துக்கு அவர் ஆளாகியிருக்கிறார். இதனால் இப்போது அஞ்சலி நாயகியாக நடிக்கும் பட டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்லும்போது எந்த விசயத்தையும் வெளியில் அவுட் பண்ணி விடக்கூடாது என்று அவரிடம் கண்டிசனாக சொல்லி வாய்ப்பூட்டு போட்டு விடுகின்றனர்.
அந்த வகையில், தற்போது தமிழில் இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இதில் இறைவி படத்தில் அவர் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்பு எப்போதும் பார்த்திராத ஒரு மதிப்பு மிக்க கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளாராம். குறிப்பாக, இறைவி என்று இறைவனுக்கு இணையாக பெண்களை குறிப்பிடும் கதை என்பதால் அதில் அஞ்சலியின் வேடம் சிறப்பு மிக்கதாம்.
அதனால் அந்த படத்தில் அவரை கமிட் பண்ணியபோது, படம் திரைக்கு வருவது வரை எந்தவொரு விசயத்தையும் அவுட் பண்ணி விடக்கூடாது என்று உறுதிமொழி வாங்கி விட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். அதன்காரணமாகதான், மீடியாக்களிடம் சரளமாக பேசுவதை சமீபகாலமாக தவிர்த்து வருகிறாராம் அஞ்சலி.