இனியாவது வாய்ப்பு கிடைக்குமா?
களவாணி படத்தில் அறிமுகமான பின், ஓவியாவுக்கு, கோலிவுட்டில் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஓவியாவும், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால், பெயர் சொல்லும்படியான வேடங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குத்தாட்டம், கவர்ச்சி போன்ற துக்கடா வேடங்களே கிடைத்தன. கேரளாவுக்கு மூட்டையை கட்டும் முடிவோடு இருந்த அவருக்கு, இப்போது, சீனி என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், வெறும் பொம்மை ஹீரோயினாக மட்டுமல்லாமல், நடிக்கவும், அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாம். மதுரையை பின்னணியாக கொண்ட கதைக் களம் என்பதால், இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஓவியா.
கேரளத்து குயிலுக்கு மலையாளம் தெரியாதாம்!
மெட்ராஸ் நாயகி கேதரின் தெரசா, ரொம்பவே வருத்தப்படுகிறார். கதகளி படத்தில், விஷாலுடன் மிக நெருக்கமாக நடித்திருந்த முத்தக் காட்சியை, தணிக்கை குழுவின் எதிர்ப்பு காரணமாக, படத்தில் இருந்து வெட்டி எறிந்துவிட்டனராம். இதையறிந்த கேதரின், 'இந்த காட்சியில் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்தேன். இந்த காட்சியால், தமிழகத்தில் எனக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் கிடைப்பர் என, ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். எல்லாம் வீணாகிவிட்டதே' என, உச்கொட்டுகிறாராம். இவர், மலையாள வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றாலும் துபாயிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால், மலையாளம் அவ்வளவாக தெரியாதாம். ஆனாலும், இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுகிறார். தற்போதைய நிலவரப்படி, கோலிவுட்டில் அதிக படங்களில் புக் ஆகியுள்ள ஹீரோயின் இவர் தான். கணிதன், வீரதீரன், கதகளி, கான் ஆகிய படங்கள் அம்மணியின் கைவசம் உள்ளன.
அவரை போல் வருமா?
கபாலி நாயகி ராதிகா ஆப்தே, யாரிடம் பேசினாலும் ரஜினி புகழ் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்தாண்டு அனுபவம் குறித்து அவர், 'கடந்தாண்டில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் கபாலி பட வாய்ப்பு. அதிலும், ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெரிய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். நான் சந்தித்த நபர்களில் மிகவும் வித்தியாசமானவர் ரஜினி தான். அவரிடமிருந்து நடிப்பு, ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டேன்' என, கூறியுள்ளாராம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சக நடிகையரை வம்புக்கு இழுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார், ராதிகா ஆப்தே. சமீபத்தில் கூட, 'உடலை காட்டி, குத்தாட்டம் ஆடுவதில் எனக்கு விருப்பமில்லை; உணர்வுப்பூர்வமான பாடல் என்றால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். குத்துப் பாடலுக்கு ஆடுவதெல்லாம் ஓவர்' என, ராதிகா கூறியுள்ளதாக வெளியான தகவலால், சக நடிகையர் கொதித்துப் போயுள்ளனர்.
அதிர்ஷ்ட தேவதை!
கொடுக்கிற தெய்வம், கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருப்பர். கீர்த்தி சுரேஷ் விஷயத்தில் இந்த வாக்கு, நுாற்றுக்கு நுாறு உண்மையாகியிருக்கிறது. துவக்கத்தில், ஓன்றிரண்டு மலையாள படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த கீர்த்திக்கு, கோலிவுட்டின் வாசல், அகல திறந்தது. தற்போது நான்கு படங்களில், அதுவும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் அவருக்கு கிடைத்த வரவேற்பு, தெலுங்கு திரையுலகிற்கும் எட்டியதால், அங்கும் அம்மணிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் நடித்த, நேனு சைலஜா என்ற படம் சமீபத்தில் வெளியாகி, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. இதனால், கோலிவுட், டோலிவுட் என, இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய ரவுண்டுக்காக காத்திருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
பிறந்த நாளன்று சம்பளத்தை உயர்த்திய தீபிகா!
பாலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோனேவுக்கு நேற்று 30 வது பிறந்த நாள். வழக்கமாக தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் தீபிகா இந்த ஆண்டு தனது பிறந்த நாள் விழாவை ஏதோ சில பல காரணங்களுக்காக கொண்டாடவில்லை.
ஆனால், அதற்கு பதிலாக தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தி விட்டார். கடந்த ஆண்டு தீபிகாவின் நடிப்பில் வெளியான பிகு, தமாஷா மற்றும் பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. இதில், தீபாவளி வெளியீடாக வந்த பாஜிராவ் மஸ்தானி சுமார் 310 கோடிக்கும் மேல் உலகளவில் தனது வசூலை ஈட்டியுள்ளது.
இதனால், இனி தான் நடிக்கவிருக்கும் படங்களுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேச உள்ளாராம். எப்போதுமே பெண்களுக்கான சம்பளம் குறைவாகவே உள்ளது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தீபிகாவின் இந்த முடிவு பாலிவுட் பெண் நடிகைகளிடையே வரவேற்பையும் தயாரிப்பாளர்களிடம் முணுகலையும் ஒருங்கே பெற்றுள்ளது இயல்புதானே.
த்ரிஷாவின் கை, மார்பு, முதுகு எல்லாம் ‘அதே’ தானாமே..?
‘த்ரிஷ்ஷ்ஷ்ஷாஸ.’ இந்தப் பேரே கேட்டாலே ஏதாச்சும் உங்களுக்கு
தோனிருக்குமே.. இல்லனோ இப்போ சொல்லப் போற மேட்டரு ஏதாச்சும் தோன்ற வைக்கும்.
தென்னிந்திய சினிமாவை கடந்த 10 வருடத்திற்கும் மேலாக தன் அழகாலும் நடிப்பாலும் கலக்கி வருகிறார். இவருக்கென்று சென்னையில் ரசிகர் மன்றங்களும் உள்ளது.
ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த ‘பூலோகம்’ படத்தில் ஹீரோவின் படங்களை டாட்டூஸாக வரைந்திருந்தார். தற்போது நிஜத்திலும் இது போன்ற டாட்டூஸ்களை தன் அழகான மேனியில் ஆங்காங்கே குத்தி வருகிறாராம்.
முதலில் தன் மார்பு பகுதியில் மீனின் உருவத்தை டாட்டூ குத்தியிருந்தார். பின்னர் அவரது கையில் ரிஷப ராசியின் (காளை) அடையாளத்தை குத்தினார். தற்போது முதுகு பக்கத்தின் இடது தோள் பகுதியில் கேமராவுடன் சினிமா கிளாப் போர்ட் இருக்கின்ற படத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறார். இதற்கு காரணம் தன்னுடைய தொழில் பக்தி என்று கூறி வருகிறாராம் இந்த டாட்டூ ரசிகை.
இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலைய்யேஸ?