சமந்தாவை தட்டிக்கொடுத்த விஜய்!
.
அஞ்சான், கத்திக்குப்பிறகு பத்து எண்றதுக்குள்ள படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார் சமந்தா. அதில் ஜாதி வெறி பிடித்த வில்லியாக அவர் நடித்த
வேடத்திற்கு நிறைய கேலி கிண்டல்கள் வந்தது. என்றாலும், நெகடீவ் ரோலில் முதன்முறையாக நடித்தேன். அதில் என்னால் முடிந்தவரை பர்பாமென்ஸ் கொடுத்தேன். அதனால் விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் சமந்தா. அதேசமயம், மீண்டும் தனது நடிப்புக்கு அதுபோன்ற விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாகி விட்டார்.
அதனால், தங்கமகன் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சரியாக கொடுத்திருந்த சமந்தா, இப்போது விஜய்யுடன் நடித்துள்ள தெறி படத்தில் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். சில சின்னச்சின்ன அசைவுகளில் சமந்தா கொடுத்த ரியாக்சனைப்பார்த்து சூப்பர் என்று விஜய்யே பாராட்டினாராம். அதனால் உற்சாகமடைந்த சமந்தா, தெறி படத்தின் சில காட்சிகளில் பொறி பறக்கும் அளவுக்கு பரபரவென்று நடித்திருக்கிறாராம். அதையடுத்து எனது நடிப்பு குறித்து எழுந்த நெகடீவ் விமர்சனங்கள் இனிமேல் இருக்காது என்றும் தனது அபிமானிகளிடம் கூறி வருகிறார் சமந்தா.
மகளுக்கு சாக்லெட் கொடுத்து நடிக்க வைக்கும் மீனா!
நெஞ்சங்கள், எங்கேயோ கேட்ட குரல், தீர்ப்புகள் திருத்தப்படலாம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மீனா,
அதன்பிறகு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் சிறுமியாக நடித்து பிரபலமானார். பின்னர் குமரி ஆனபிறகு அதே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், முத்து போன்ற படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோயின் ஆனார். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் நீண்டகாலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா, 2009ல் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியிருந்தவர், மகள் நைனிகா பிறந்த பிறகு மறுபடியும் தம்பிக்கோட்டை படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த திருஷ்யம் படத்தில் நடித்த பிறகு மீண்டும் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில், நான்கு வயதாகும் தனது மகள் நைனிகாவை விஜய்யின் தெறி படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் தம்பதிகளாக நடிக்கும் விஜய்-சமந்தாவுக்கு மகளாக நடிக்கிறார் நைனிகா. மகளுக்கு இது முதல் படம் என்பதால், ஒவ்வொரு நாளும் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு முந்தின நாள் வீட்டில் வைத்தே பயிற்சி கொடுக்கிறாராம் மீனா. அதனால் அடுத்த நாள் கேமரா முன்பு செல்லும்போது தனக்கான காட்சிகளை ஓரிரு ஷாட்டிலேயே ஓகே செய்து விடுகிறாராம் நைனிகா. அப்படி மகள் ஒரு ஷாட்டில் ஓகே செய்து விட்டு வந்ததும் அவருக்கு தனது பேக்கில் வைத்திருக்கும் சாக்லெட்டை எடுத்துக்கொடுத்து சந்தோசப்படுத்துகிறார் மீனா.
பேயாக நடிக்கிறார் தமன்னா!
.
கோடம்பாக்கத்தில் பேய் சீசன் நடந்து கொண்டிருப்பதால் வித்தியாசமான பேய் கதைகளை ரெடி பண்ணும் டைரக்டர்கள், முன்னணி
ஹீரோயினிகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், நயன்தாரா மாயா படத்தில் நடித்த பிறகு இப்போது ராய் லட்சுமி, லட்சுமிமேனன் போன்ற நடிகை களும் பேய் படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று படங்களை இயக்கிய ஆண்டாள் ரமேசும் காத்து கருப்பு என்றொரு பேய் படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த படத்தில் தமன்னாவை பேய் வேடத்தில் நடிக்க வைக்கவும் பேசிக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி ஆண்டாள் ரமேஷ் கூறுகையில், 2012ம் ஆண்டு எனது இயக்கத்தில் வெளியான படம் ஆசாமி. தமிழக அரசு விருதுக்கு தேர்வாகியுள்ள 32 படங்களில் எனது படமும் இடம்பெற்றிருக்கிறது. அந்த படத்தில் போலி சாமியார்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என்ற கருத்தை சொல்லியிருந்தேன். அதையடுத்து, இன்னாருக்கு இன்னாரென்று என்ற படத்தை இயக்கிய நான், இப்போது காத்து கருப்பு என்ற பேய் படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எத்தனையோ பேய் படங்களை மக்கள் பார்த்திருந்தாலும் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான படத்தை பார்த்திருக்க முடியாது. இந்த படத்தில் பேய்தான் கதாநாயகன்.
சமீபத்தில் பேய் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக தமன்னா செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த படத்தில் நடிப்பது சம்பந்தமாக அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். மாயாவில் நயன்தாரா நடித்தது போன்று இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை அவர் கால்சீட் கிடைக்கவில்லை என்றால் லட்சுமிமேனன், ஓவியா ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைப்பேன். பொங்கலுக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் காத்து கருப்பு படத்தில் நாசர், கோவை சரளா, சந்தான பாரதி உள்பட பல கமர்சியல் நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள் என்கிறார் ஆண்டாள் ரமேஷ்.
தமன்னா ஒரு கோடி சம்பளம்
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் தமன்னா. பின்னர் காதல் கிசுகிசு காரணமாக தமிழ்ப்படங்களே
வேண்டாம் என்று தெலுங்குப்பக்கம் போனார் தமன்னா. பின்னர் அஜித்தின் 'வீரம்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' படத்தில் நடித்தார். அதன்பின்னர் தமன்னாவுக்கு தமிழில் படங்கள் பெரிதாக கிடைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்சேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தில் கமிட்டாகி இருக்கிறார் தமன்னா. தர்மதுரை படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இத்தனைக்கும் அந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராகவே
.
தமிழில் வாய்ப்பு தேடும் ரிச்சா கங்கோபாத்யாயே
.
என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் முதல் படம் வெற்றி பெற்றால் தான் அதில் நடித்த நடிகை அதன் பிறகு தொடர்ச்சியாக சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் ரிச்சா கங்கோபாத்யாயே.
2011ம் ஆண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். அவரது அழகையும், இளமையையும் பார்த்து தமிழ் சினிமாவில் டாப் இடத்துக்கு வருவார் என்றே கணித்தார்கள். ஆனால் படம் அட்டர் பிளாப் ஆனதால் ரிச்சாவுக்கு கட்டம் சரியில்லாமல் போனது. அதோடு ஒஸ்தி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக படு கிளாமராக நடித்ததில் அடுத்த சறுக்கல். அதன் பிறகு அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அடுத்து ஒரு பெங்காலி படத்தில் நடித்தார். பிறகு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார், எந்த படமும் அவருக்கு சரியாக அமையவில்லை
இப்போது தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு வர திட்டமிட்டிருக்கிறார். இதற்காக தனியாக மானேஜர் நியமித்து வாய்ப்பு தேடி வருகிறார். இதுதவிர மலையாள படம் ஒன்றிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தமிழ், மலையாள படங்களின் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.